முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| கோல் கொண்டுவா எனல் |
| 171 | வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா (1) | |
|
| |
|
|
| 172 | கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என்மகன் சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல் அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா (2) | |
|
| |
|
|
| 173 | கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான் நெறித்த குழல்களை நீங்க முன் ஓடிச் சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா (3) | |
|
| |
|
|
| 174 | ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல் சென்று அங்குப் பாரதம் கையெறிந்தானுக்குக் கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா (4) | |
|
| |
|
|
| 175 | சீர் ஒன்று தூதாய்த் திரியோதனன் பக்கல் ஊர் ஒன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் பார் ஒன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத் தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா (5) | |
|
| |
|
|
| 176 | ஆலத்து இலையான் அரவின் அணை மேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள்செய்த கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா (6) | |
|
| |
|
|
| 177 | பொற்றிகழ் சித்திரகூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா (7) | |
|
| |
|
|
| 178 | மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழத் தன் நிகர் ஒன்று இல்லாச் சிலை கால் வளைத்து இட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா (8) | |
|
| |
|
|
| 179 | தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து மின் இலங்கும் பூண் விபீடண நம்பிக்கு என் இலங்கும் நாமத்து அளவும் அரசு என்ற மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா (9) | |
|
| |
|
|
| 180 | அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வா என்று மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர் மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே (10) | |
|
| |
|
|