இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருநறையூர்:8 |
| 1547 | கறவா மட நாகு தன் கன்று உள்ளினால்போல் மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்- நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி பிறவாமை எனைப் பணி-எந்தை பிரானே (1) |
|
|
| |
|
|
| 1548 | வற்றா முதுநீரொடு மால் வரை ஏழும் துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடு-என் எந்தை பிரானே (2) |
|
|
| |
|
|
| 1549 | தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்- கார் ஏய் கடலே மலையே திருக்கோட்டி ஊரே உகந்தாயை உகந்து அடியேனே (3) | |
|
| |
|
|
| 1550 | புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா கள்வா கடல்மல்லைக் கிடந்த கரும்பே வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே? (4) | |
|
| |
|
|
| 1551 | வில் ஏர் நுதல் நெடுங் கண்ணியும் நீயும் கல் ஆர் கடுங் கானம் திரிந்த களிறே நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய்-உன்னை யான் வணங்கித் தொழும் ஆறே (5) | |
|
| |
|
|
| 1552 | பனி ஏய் பரங் குன்றின் பவளத் திரளே முனியே திருமூழிக்களத்து விளக்கே இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய கனியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (6) | |
|
| |
|
|
| 1553 | கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு நிதியே திருநீர்மலை நித்திலத் தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர்-தமக்குக் கதியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (7) | |
|
| |
|
|
| 1554 | அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே (8) | |
|
| |
|
|
| 1555 | தூயாய் சுடர் மா மதிபோல் உயிர்க்கு எல்லாம் தாய் ஆய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட வாயா உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே (9) | |
|
| |
|
|
| 1556 | வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டு ஆய் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்று ஆட உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே (10) | |
|
| |
|
|