இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்கண்ணமங்கை |
| 1637 | சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர்ச் சலசயனத்து ஏர் ஆர் முகில் வண்ணன்-தனை இமையோர் பெருமானை கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே (10) | |
|
| |
|
|
| 1638 | பெரும் புறக் கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண் இல் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவைக் கரும்பினை கனியை-சென்று நாடி -கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (1) | |
|
| |
|
|
| 1639 | மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும் மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை நென்னலை பகலை இற்றை நாளினை நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை கன்னலை கரும்பினிடைத் தேறலை- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (2) | |
|
| |
|
|
| 1640 | எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை-மங்கை-தன் பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் மங்குலை சுடரை வட மா மலை உச்சியை நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை பகலை-சென்று நாடி -கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (3) | |
|
| |
|
|
| 1641 | பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை காசினை மணியை-சென்று நாடி- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (4) | |
|
| |
|
|
| 1642 | ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை காற்றினை புனலை-சென்று நாடி- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (5) | |
|
| |
|
|
| 1643 | துப்பனை துரங்கம் படச் சீறிய தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர் செப்பினை திருமங்கை மணாளனை தேவனை திகழும் பவளத்து ஒளி ஒப்பனை உலகு ஏழினை ஊழியை ஆழி ஏந்திய கையனை அந்தணர் கற்பினை-கழுநீர் மலரும் வயல் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (6) | |
|
| |
|
|
| 1644 | திருத்தனை திசை நான்முகன் தந்தையை தேவ-தேவனை மூவரில் முன்னிய விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற கருத்தனை-களி வண்டு அறையும் பொழில்- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (7) | |
|
| |
|
|
| 1645 | வெம் சினக் களிற்றை விளங்காய் விழக் கன்று வீசிய ஈசனை பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (8) | |
|
| |
|
|
| 1646 | பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர்-தங்கள் கண்ணினை-கண்கள் ஆரளவும் நின்று- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (9) | |
|
| |
|
|