இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்கண்ணபுரம்: 1 |
| 1647 | கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று காதலால் கலிகன்றி உரைசெய்த வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ் விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில் கற்கலாம் கவியின் பொருள்-தானே (10) | |
|
| |
|
|
| 1648 | சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால் மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால்- கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (1) | |
|
| |
|
|
| 1649 | செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது? என்கின்றாளால் பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால் ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால்- கரு வரைபோல் நின்றானை கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (2) | |
|
| |
|
|
| 1650 | துன்னு மா மணி முடிமேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால்- கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (3) | |
|
| |
|
|
| 1651 | தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால் ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால்- கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (4) | |
|
| |
|
|
| 1652 | அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால் வடித் தடங் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்- கடிக் கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (5) | |
|
| |
|
|
| 1653 | பேர் ஆயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்- கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (6) | |
|
| |
|
|
| 1654 | செவ் அரத்த உடை ஆடை-அதன்மேல் ஓர் சிவளிகைக் கச்சு என்கின்றாளால் அவ் அரத்த அடி-இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ? மழை முகிலோ? என்கின்றாளால்- கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (7) | |
|
| |
|
|
| 1655 | கொற்றப் புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் வெற்றிப் போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்- கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (8) | |
|
| |
|
|
| 1656 | வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும் என்கின்றாளால் உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில்? யாம் என்றே பயில்கின்றாளால்- கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (9) | |
|
| |
|
|