இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருப்புல்லாணி: 2 |
| 1777 | கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும் ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன் பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே? (1) | |
|
| |
|
|
| 1778 | முன்னம் குறள் உரு ஆய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன் பொன்னம் கழிக் கானல் புள் இனங்காள் புல்லாணி அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனைச் செப்புமினே (2) | |
|
| |
|
|
| 1779 | வவ்வி துழாய்-அதன்மேல் சென்ற தனி நெஞ்சம் செவ்வி அறியாது நிற்கும்கொல்? நித்திலங்கள் பவ்வத் திரை உலவு புல்லாணி கைதொழுதேன் தெய்வச் சிலையாற்கு என் சிந்தை-நோய் செப்புமினே (3) | |
|
| |
|
|
| 1780 | பரிய இரணியனது ஆகம் அணி உகிரால் அரி உரு ஆய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்கு பொரு திரைகள் போந்து உலவு புல்லாணி கைதொழுதேன் அரி மலர்க் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே (4) | |
|
| |
|
|
| 1781 | வில்லால் இலங்கை மலங்க சரம் துரந்த வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும் எல்லாரும் என்-தன்னை ஏசிலும் பேசிடினும் புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே (5) | |
|
| |
|
|
| 1782 | சுழன்று இலங்கு வெம் கதிரோன் தேரோடும் போய் மறைந்தான் அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால் செழுந் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன் இழந்திருந்தேன்-என்-தன் எழில் நிறமும் சங்குமே (6) | |
|
| |
|
|
| 1783 | கனை ஆர் இடி-குரலின் கார் மணியின் நா ஆடல் தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ புனை ஆர் மணி மாடப் புல்லாணி கைதொழுதேன் வினையேன்மேல் வேலையும் வெம் தழலே வீசுமே (7) | |
|
| |
|
|
| 1784 | தூம்பு உடைக் கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த பாம்பின் அணையான் அருள்தந்தவா நமக்கு பூஞ் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன் தேம்பல் இளம் பிறையும் என்-தனக்கு ஓர் வெம் தழலே (8) | |
|
| |
|
|
| 1785 | வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன் ஓதமும் நானும் உறங்காது இருந்தேனே (9) | |
|
| |
|
|
| 1786 | பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை கல் நவிலும் திண் தோள் கலியன் ஒலிவல்லார் மன்னவர் ஆய் மண் ஆண்டு வான் நாடும் முன்னுவரே (10) | |
|
| |
|
|