இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல் |
| 1941 | திருத்தாய் செம்போத்தே திரு மா மகள்-தன் கணவன் மருத் தார் தொல் புகழ் மாதவனை வர- திருத்தாய் செம்போத்தே (1) | |
|
| |
|
|
| 1942 | கரையாய் காக்கைப் பிள்ளாய் கரு மா முகில் போல் நிறத்தன் உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர- கரையாய் காக்கைப் பிள்ளாய் (2) | |
|
| |
|
|
| 1943 | கூவாய் பூங் குயிலே குளிர் மாரி தடுத்து உகந்த மா வாய் கீண்ட மணி வண்ணனை வர- கூவாய் பூங் குயிலே (3) | |
|
| |
|
|
| 1944 | கொட்டாய் பல்லிக் குட்டி குடம் ஆடி உலகு அளந்த மட்டு ஆர் பூங் குழல் மாதவனை வர- கொட்டாய் பல்லிக் குட்டி (4) | |
|
| |
|
|
| 1945 | சொல்லாய் பைங் கிளியே சுடர் ஆழி வலன் உயர்த்த மல் ஆர் தோள் வட வேங்கடவனை வர- சொல்லாய் பைங் கிளியே (5) | |
|
| |
|
|
| 1946 | கோழி கூ என்னுமால் தோழி நான் என் செய்கேன்? ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று- கோழி கூ என்னுமால் (6) | |
|
| |
|
|
| 1947 | காமற்கு என் கடவேன்? கரு மா முகில் வண்ணற்கு அல்லால் பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்ய- காமற்கு என் கடவேன்? (7) | |
|
| |
|
|
| 1948 | இங்கே போதும்கொலோ- இன வேல் நெடுங் கண் களிப்ப? கொங்கு ஆர் சோலைக் குடந்தைக் கிடந்த மால் இங்கே போதும்கொலோ? (8) | |
|
| |
|
|
| 1949 | இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும் பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை- இன்னார் என்று அறியேன் (9) | |
|
| |
|
|
| 1950 | தொண்டீர் பாடுமினோ சுரும்பு ஆர் பொழில் மங்கையர்-கோன் ஒண் தார் வேல் கலியன் ஒலி மாலைகள் தொண்டீர் பாடுமினோ (10) | |
|
| |
|
|