நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல் |
| 2936 | அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள செந்தாமரைத்தடம் கண் செங்கனி வாய் செங்கமலம் செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே (1) | |
|
| |
|
|
| 2937 | திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம் திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (2) | |
|
| |
|
|
| 2938 | என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம் மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம் மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே (3) | |
|
| |
|
|
| 2939 | எப் பொருளும் தான் ஆய் மரகதக் குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப்பூக் கண் பாதம் கை கமலம் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே (4) | |
|
| |
|
|
| 2940 | ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த கார் ஆர் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு நேரா வாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம் பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே (5) | |
|
| |
|
|
| 2941 | பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் பலபலவே ஞானமும் பாம்பு அணை மேலாற்கேயோ (6) | |
|
| |
|
|
| 2942 | பாம்பு அணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும் தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும் பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போர் ஏறே (7) | |
|
| |
|
|
| 2943 | பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள் தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை சொல்முடிவு காணேன் நான் சொல்லுவது என்? சொல்லீரே (8) | |
|
| |
|
|
| 2944 | சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவிதனை எல்லை இல் சீர் என் கருமாணிக்கச் சுடரை நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய் அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே (9) | |
|
| |
|
|
| 2945 | ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன் பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம் கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே (10) | |
|
| |
|
|
| 2946 | கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக் கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன் கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே (11) | |
|
| |
|
|