நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை |
| 2971 | அணைவது அரவு அணைமேல் பூம்பாவை ஆகம் புணர்வது இருவர் அவர் முதலும் தானே இணைவன் ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம் புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (1) | |
|
| |
|
|
| 2972 | நீந்தும் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும் நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம் பூந் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த பூந் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே (2) | |
|
| |
|
|
| 2973 | புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம் புணர்த்த தன் உந்தியொடு ஆகத்து மன்னி புணர்த்த திருஆகித் தன் மார்வில் தான் சேர் புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே (3) | |
|
| |
|
|
| 2974 | புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர் அலமந்து வீய அசுரரைச் செற்றான் பலம் முந்து சீரில் படிமின் ஒவாதே (4) | |
|
| |
|
|
| 2975 | ஓவாத் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும் மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன் மா ஆகி ஆமை ஆய் மீன் ஆகி மானிடம் ஆம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே (5) | |
|
| |
|
|
| 2976 | தீர்த்தன் உலகு அளந்த சேவடிமேல் பூந்தாமம் சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே? (6) | |
|
| |
|
|
| 2977 | கிடந்து இருந்து நின்று அளந்து கேழல் ஆய் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் தடம் பெருந் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே? (7) | |
|
| |
|
|
| 2978 | காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை? என் காணுமாறு? ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா சேண் பால வீடோ உயிரோ மற்று எப் பொருட்கும் ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே (8) | |
|
| |
|
|
| 2979 | எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே? (9) | |
|
| |
|
|
| 2980 | சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப் பொருட்கும் வேர் முதல் ஆய் வித்து ஆய் பரந்து தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே (10) | |
|
| |
|
|
| 2981 | கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன் பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வலார் விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே (11) | |
|
| |
|
|