நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| புருஷார்த்த நிர்ணயம் |
| 2982 | எம் மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம் மா பாட பற்புத் தலை சேர்த்து ஒல்லை கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா அடியேன் வேண்டுவது ஈதே (1) | |
|
| |
|
|
| 2983 | ஈதே யான் உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என் மை தோய் சோதி மணிவண்ண எந்தாய் எய்தா நின் கழல் யான் எய்த ஞானக் கை தா காலக் கழிவு செய்யேலே (2) | |
|
| |
|
|
| 2984 | செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என் கை ஆர் சக்கரக் கண்ண பிரானே ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே (3) | |
|
| |
|
|
| 2985 | எனக்கே ஆட்செய் எக் காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே (4) | |
|
| |
|
|
| 2986 | சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் இறப்பில் எய்துக எய்தற்க யானும் பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே (5) | |
|
| |
|
|
| 2987 | மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே (6) | |
|
| |
|
|
| 2988 | வாராய் உன் திருப் பாத மலர்க்கீழ்ப் பேராதே யான் வந்து அடையும்படி தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே (7) | |
|
| |
|
|
| 2989 | எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே உன்னை யானே (8) | |
|
| |
|
|
| 2990 | யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் யானே நீ என் உடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே (9) | |
|
| |
|
|
| 2991 | ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடுஞ் சுடர்ச் சோதி தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே (10) | |
|
| |
|
|
| 2992 | விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் விடல் இல் வண் குருகூர்ச் சடகோபன் கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும் கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே (11) | |
|
| |
|
|