நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (திருக்குருகூர்) |
| 3213 | ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே? (1) | |
|
| |
|
|
| 3214 | நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடு இல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனைப் பாடி ஆடி பரவிச் செல்மின்கள் பல் உலகீர் பரந்தே (2) | |
|
| |
|
|
| 3215 | பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளியகில்லீர் சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள் பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே (3) | |
|
| |
|
|
| 3216 | பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நல் மோக்கத்துக் கண்டுகொண்மின் தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள் ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே? (4) | |
|
| |
|
|
| 3217 | இலிங்கத்து இட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே (5) | |
|
| |
|
|
| 3218 | போற்றி மற்று ஓர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள் ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே (6) | |
|
| |
|
|
| 3219 | ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து பல்படிகால் வழி ஏறிக் கண்டீர் கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள் ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமைபுகுவதுவே (7) | |
|
| |
|
|
| 3220 | புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள் மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே (8) | |
|
| |
|
|
| 3221 | விளம்பும் ஆறு சமயமும் அவைஆகியும் மற்றும் தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே (9) | |
|
| |
|
|
| 3222 | உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும் மற்றும் தன்பால் மறு இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர் அதனுள் குறிய மாண் உரு ஆகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே (10) | |
|
| |
|
|
| 3223 | ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர்நகரான் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார் மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே (11) |
|
|
| |
|
|