இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| தனியன்கள் |
வாழி பரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ மாயோனை வாள் வலியால் மந்திரம்கொள் மங்கையர்-கோன் தூயோன் சுடர் மான வேல் | |
|
| |
|
|
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் பரசமயப் பஞ்சுக்கு அனலின் பொறி-பரகாலன் பனுவல்களே | |
|
| |
|
|
எங்கள் கதியே இராமநுச முனியே சங்கை கெடுத்து ஆண்ட தவராசா பொங்கு புகழ் மங்கையர்-கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் தங்கும் மனம் நீ எனக்குத் தா | |
|
| |
|
|