பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்15

     'தளம்பல்' என்ற எழுவாய்க்குரிய 'ஒத்தது' என்ற பயனிலையில் ஈறு
கெட்டது. பின் இதுபோல் வருவனவும் அமைத்துக் கொள்க. முதலடியின்
இரண்டாஞ்சீர் விட்டிசைத்தற்கண் 'கன்ற' எனத் தேமாவாக நின்று,
வருஞ்சீர் 'வகழிக' எனக் கருவிளமாய் இசை நிறைத்தல் யாப்பமைதிக்குப்
பொருந்துவதெனக் காண்க. இரண்டாமடியின் மூன்றாஞ்சீர் 'ரங்கந்த' எனத்
தேமாங்காயாக நிற்றலும், ஒரு நிரைக்கு இரு நேர் நின்று கருவிளம்
போன்று இசை நிறைத்தலும் காண்க. இதனையும், 'ரங்கந் தளம்பலே' எனச்
சீர் பிரித்து, முதல் விதிக்கு அமையக் கொள்ளுதலும் ஒன்று. முதல் விதியிற்
குறித்த சீர்கள் இரண்டாம் விதிக்கேற்பப் பிரிக்க அமையாமையும் காண்க.


              27
அலைய லைந்தலர் கூப்பிய தாமரை
யிலைய லைந்தலை மீதெழுந் தாடலந்
நிலைய டைந்தனர் நீங்கலிர் நின்மினென்
றுலைவ டைந்துகை கூப்பிய தொத்தவே.
 
அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை
அலை அலைந்து அலை மீது எழுந்து
                          ஆடல், அந்
நிலை அடைந்தனர், "நீங்கலிர்! நின்மின்!" என்று,
உலைவு அடைந்து கை கூப்பியது ஒத்தவே.
    
     அலையால் அலைந்து தன் மலரைக் குவித்துக் கொண்ட தாமரை,
இலையோடு கூடி அசைந்து அலைக்குமேல் எழுந்து நின்று ஆடும்
தோற்றம், அவ்விடம்வந்தடைந்த இம்மூவரை "எம்மை விட்டு நீங்காதீர்கள்!
நில்லுங்கள்!" என்று, கலக்கம் அடைந்து கை கூப்பித் தடுப்பதை
ஒத்திருந்தது.


             28
நாக நெற்றியி னன்மணி யோடைபோ
னாக நெற்றியி னன்மணி யாறுபாய்
நாக நெற்றியி னன்மலர்க் காவப்பா
னாக நெற்றியி னன்மதி தோன்றிற்றே.
 
நாக நெற்றியின் நன் மணி ஓடை போல்,
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய்
நாக நெற்றியின் நன் மலர்க் கா அப்பால்
நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே.