கருணையன் மாட்சிப் படலம்
 
எகித்துக்கு ஒடிய பொழுது கருணையனைக் காக்க
வானவனை அனுப்புதல்
 
2344கொலை கொள் வாளால் உயிர் பிரிந்த
  கொள்கைத்து அன்னார் பிரிந்தினும், வெண்
கலை கொள் பதத்தாள,் பிரியாத, ஓர்
  கருணை விளைத்த அன்பு ஒழியாள்
உலை கொள் அழலின் துயர் கொண்டே,
  ஒளிப்ப எசித்து மேவிய கால்,
அலை கொள் உணர்வோடு, அன்பு உணர்ந்தே,
  அருளின் பெயரோன்- தனை, உணர்ந்தாள்.
50
   
 
2345செய்த உதவி ,பாசம் எனத்
  திருந்து ஈர் உயிரை விசித்திடும ஆல்;
பெய்த உதவி கொண்ட சிலர்
  பேணாது ஒழிந்தால், பிறர் துயரைக்
கொய்த உதவி செய் உரவோர்
  குன்றாத் தம் கண் நட்பு உரிமை,
எய்த உதவிக்கு அளவு, அன்பும்
  எய்திப் பிறரை மேவுவர் ஆல்.
51
   
 
2346மாறா அருளோடு, இன்னணமே,
  “மறைந்த திரு எம் மகன்காணா,
தேறா வெகுளி அரசு எல்லாச்
  சிறுவர்க் கொல்வான் என்ன, உயிர்
ஈறாய் மாள்வான் கருணையனோ
  எய்தி அவனை ஒளிக்குதும்“ என்று
ஆறா அன்போடு, அருந் தவனோடு
  அறைந்தாள் கருணை நிலை நெஞ்சாள்.
52
   
 
2347வெருவின் மிக்கோர் ஒலித்தது எலாம்
  ‘ விண் ஏறு‘ என்பாா;் அன்ன, மறை
உருவின் மிக்கோன் எய்திய அன்பு
  உரிமைக்கு அஞ்சி மறுத்தமையால்,
செருவின் மிக்கோன் உணர்ந்த பகை
  செப்பி,் சிறுவன் ஒளிக்குப, வான்
திருவின் மிக்கு ஓா,் வானவனைச்
  செலுத்துகின்றார்-அருள் மிக்கார்.
53
   
வானவன் உரைகேட்ட எலிசபெத்தின் வாட்டம்
 
2348அடைந்த வானவன் அறைந்தவை கேட்டு, எலிசபெத்தை,
குடைந்த நோய் உளம் கொடுந் தழல் குடித்தென், கொண்ட
மிடைந்த பாசறை பொறாமையில,் வீழ்ந்தனள-உயிர் கெட்டு
உடைந்த காலையின், உடல் நிலை விழுவது போன்றே.
54
   
 
2349“எம்மை ஈங்கு அளித்து, இரு
  விசும்பு உயர்ந்த வான் நயங்கள்
தம்மை, நீரொடு தான் தர,
  இளவலாய்ப் பிறந்த
செம்மையோன் தனைச் செகுத்திடப்
  பகைப்பரோ என்ன,
வெம்மை பாய் அழல் விழுங்கின
  விருப்பினாள், உளைந்தாள்.
55
   
 
2350“சொரிந்த சீர் பொறாத் தன்மை,
  இந் நாடு செய் துகளோ?
அரிந்த நோய் கெட எசித்தனர்
  ஆற்றிய அறனோ?
விரிந்த நீள் நெறி விளைத்த
  நோய் கொடு தளர்ந்து,‘ இங்கண்
பிரிந்த நாயகன், பெரிது
  உளைவான் என அழுதாள்.
56
   
எலிசபெத்து மகனுடன் கானில் உறைதல்
 
2351உவணியால் உயிர் உளைய ஈர்த்த உடல் என உளைந்தே,
சிவணி வானவன், திருவுளம் இது என தேற்றிக்,
கவணியால் அலை கருத்து அமைந்து, ஐயனை இழந்த
அவணி ஆர் தனது அரு மகவு ஒளிப்பதும் உணர்ந்தாள்.
57
   
 
2352சூர் முகத்து உரித் துணை இலாள் நிகர்ப்பு அருந் துணிவால்,
கார் முகத்து மின் கடுகலோடு, அழி பொருள் அளித்த,
சீர் முகத்த தன் சேய் எடுத்து, அருந் தவம் உள்ளி,
நீர் முகத்து நாடு அகன்று, கான் ஒளிப்பதே நினைத்தாள்.
58
   
 
2353அன்பும் அச்சமும் காட்டிய வழி தொடர்ந்து அகல,
முன் புகா, இடர் முயன்ற நீள் நெறிகளைக் கடந்து,
துன்பும் அல்லும் உட் குடி அலால், மன் உயிர் தொடரா,
இன்பு உகுத்தது ஓர் இருண்ட கானிடை, ஒளித்து உறைந்தாள்.
59
   
 
2354தெண் அம் சூழியில் செவ் இதழ்த் தாமரைப் பள்ளி
வண்ணம் பார்ப்பொடு மகிழ்வு எழத் துஞ்சிய அன்னம்,
எண்ணம் தூவிய வேடனுக்கு அஞ்சி வந்து, எரி கான்,
-கண், அம் பார்ப்பொடு கலுழ்ந்தென, மகவொடு கலுழ்வாள்.
60
   
 
2355மெழுகினால் வனை, பாவை தீ வெம்மை பட்டு உருகி
ஒழுகினால் என, உளம் மெலிந்து, அருந் துயர்க் கடலில்
முழுகினால் என, மொய் அறா நெஞ்சினாள், முரலும்
கழுகினால் இமிர் கானிடை, உடல் தளர்ந்து இருந்தாள்.
61
   
 
2356இருந்த காலையில், வானவர் இசைத்தலால் தான் உள்
வருந்த, வெந்து எலா மகரையும் துமித்தனன் எனக் கேட்டு,
அருந் தயாபரன் தன் மகவு அளித்தலால், புகழைத்
திருந்த நீடு நாள் வாழ்த்தி இசைத்து உறுதியிற் சிநந்தாள்.
62
   
தளர்ந்த நிலையில் கானக வாழ்வினிமையை பற்றிமகனிடம் உரையாடல்
 
2357காட்சியோடு உள அறத் தொகை அனைத்துமே, கதிர் செய்
ஆட்சியோடு, உடு அம்புலி தொடர்ந்தெனத் தொடர,
மாட்சியோடு உயிர் வளர்ந்தன தன்மையின்,இளைத்த
பூட்சியோடு இனிப் புணர்வதும் அரிது என அறிந்தாள்.
63
   
 
2358சொரிந்த தேனினும் சுவை கொள் தன் உயிரினும், இனிமை
புரிந்த சேயொடு புகல் செயா, கண்டு கண்டு உருகி,
பிரிந்த காலையில் பெருந் துயர் உள்ளி, உள் அயர்ந்து,
விரிந்த காட்சியின் துணிந்த பின், குழவியை விளித்தாள்.
64
   
 
2359“இனிய யாவினும் இனிய என் தனையனே! உன்னைக்
கனிய ஈன்ற நான் கருதிய செல் கதி செல்ல,
நனி அவாவிய நாள் இதே. இது திருவுளம் ஆய்
முனிய மாறுமோ? முரிந்து அழ மாறுமோ? மகனே
65
   
 
2360மற்று யாது யான் வகுப்பது?
  உன் வயது ஒரு நான்கு
முற்றி ஆகும் முன் பிரிவது
  என்று அயர்வு இலை; முன்னர்
பெற்றியே உணர்வு அனைத்தையும்;
  பிறக்கு முன், வரம் சால்பு
உற்றியே; உரைக்கு உயர்ந்தவற்கு
  உவகை செய் அருளோய்!
66
   
 
2361திலம் கலந்த மா, செல் இடத்து உறைவதும் எண்ணேல்;
அலம் கலந்த தேன் அனைய தீம் சொல்லொடு, வஞ்சச்
சலம் கலந்த சால் தகுதி கொள் மாக்கள் தம் துணையின்
புலம் கலந்த கான் பொதிர் விலங்கு இனத் துணை-இனிதே.
67
   
 
2362நாடு இழந்து, உள நட்பு இழந்து யாவையும் இழந்தே,
கோடு இழந்த பூ குழைந்தென, நசை கொடு குழையேல்;
வீடு இழந்த தீவினை கொடு செல்வம் உற்று அறம் செய்
பீடு இழந்த புன் மாக்களின் பேதையர் இலையே.
68
   
 
2363“ஊக்கமே பிதா, உவ்வு தாய், உணர்ந்த மெய்ஞ் ஞான
நோக்கமே ஒரு நுசுப்பு அறாத் தோழனா, தயையின்
நீக்கமே மணத் துணைவியா, நெடும் பொறை மகனா,
ஆக்கம் மேவிய அறத்து உறவோரொடு வாழ்வாய்.
69
   
 
2364ஊக்க வித்தினால் உதித்த மெய்ஞ் ஞானமே மரமாய்,
வீக்க நல் தவ வேர் விழ, பொறை தயைக் கவட்டால்
நீக்கம் முற்றியே, மகிழ்வு பூத்து, உயர்ந்த வான் நிலை வீட்டு
ஆக்கம் நற் கனி அருந்தி வாழ்ந்து, உணர்வின் மேற் கனிவாய்.
70
   
 
2365வான் கலந்த வில் வனப்பொடு செஞ் சுடர்
  வயங்க
தேன் கலந்த பூ மலர்தலும், செழுஞ் சிறை
  புடைத்துக்
கான் கலந்த புள் கணம் கனி பாடலும்,
  கதிர் வான்
கோன் கலந்த சீர் வாழ்த்து, உனக்கு உணர்த்து,
  இரு குருவே.
71
   
 
2366விரை செய் கான் நலம்
  வெஃகு இல, நெடியது ஓர் நெறியில்
கரை செய் சால் சிலைக்கு அஞ்சில,
  கருதிய கடல் சேர்
திரை செய் நூல் இவண் தெளிய
  ஆய்ந்து, அனைத்தையும் கடந்து
நிரை செய் சீர் கெழு நிமலனை,
  நேடல் கற்று உயர்வாய்.
72
   
 
2367என்னை உன்னை முன் இனிதினில் பேணிய கன்னி
அன்னை, ஈங்கு தன் அருளொடு நிழற்றிய தன்மைத்து,
உன்னை ஓம்புவள்; உன் உயிர்க்கு உயிர் என அளிப்பள்;
பின்னை ஓர் துணை பெறுவதும் வேண்டுமோ மகனே
73
   
 
2368தெளி கொள் ஆரணத்
  திருவினாள் அகன்றனள் என்னேல்;
அளி கொள் ஆர்வலர்க்கு
  அகன்றது ஓர் சேண் இலை; வான்மேல்
துளி கொள் கார் முகில் தோன்ற,
  ஈங்கு அகவி, வாழ்ந்து ஆடும்
களி கொள் தோகைகள் கானிடைக்
  கண்டனை இலையோ
74
   
எலிசபெத்தின் இறுதிநிலையும் கருணையன் அழுகையும்
 
2369என்று கூறினாள். இமிழ்த்த மெய்யோடு உயிர் ஆர்வம்
ஒன்றுவான் அழுந்துற நனி தழுவினாள், தழுவி
நின்று நீவினாள், நெடிய கண் அருவி நீர் ஆட்டிக்
கன்றுவாள், உளம் கலங்குவாள, உருகுவாள், கலுழ்வாள்.
75
   
 
2370தீயின் மூழ்கு அலர் போல் உளம் வாடியும், செந்தீ
வாயின் மூழ்கு அலர் வரும் கொடி போல் உடல் சுருண்டும்
மீயின் மூழ்கின மின்னென ஒல்கியும், குழவி,
நோயின் மூழ்கினன், நுரை எனக் கரைந்து, ஒன்றும் நுவலான்.
76
   
எலிசபெத்தைக் காட்சியிற்கண்ட மரியும் சூசையும்வானவரை
அனுப்புதல்
 
2371நூறு காவதம் மேல் நுகர், சேண் உறை
தேறு காவல் எசித்திடைச் சேர்ந்து மேய்,
ஊறு காதல் உணர்வினோடு, இற்றை, ஆம்
ஆறு மாறு இல் அறிந்தனர் மூவரே.
77
   
 
2372கரிந்த நெஞ்சு கடுத்த கடுந் திறல்,
சொரிந்த செம் புனல் துன்றிய வாரியில்
பிரிந்த தன்மை, கருணையன்-பேர் உயிர்
அரிந்தது இல்லை-என்று அன்பு எழக் கண்டனர்.
78
   
 
2373கண்ட வேலையில,் கண்டு அது வேலையை
உண்ட பான்மை உவந்து, கை ஏந்திய
அண்ட நாதனை வாழ்த்தி, இன்பு ஆழ்ந்தனர்,
கொண்ட கோதையும் பூங் கொடியோனுமே.
79
   
 
2374‘படலையாய், நயம் பீடை பயத்தல்,வான்
விடலை நீதி‘ எனா விளை இன்பு அயல்
நடலை ஆக நைந்து, எலிசபெத்தை தன்
உடலை நீக்குவது ஓர்ந்து, உளத்து ஏங்கினார்.
80
   
 
2375வீயும் வீ மலர் மென் கொடியும், தழல்
தோயும் தன்மை துவண்டு சுருண்டெனா,
தாயும் பிள்ளையும் தாவு இடர் நோக்கி, உள்
தீயும் தன்மையில் தேம்பி இரங்கினார்.
81
   
 
2376வான் வழங்கு அரசாள் வகுத்து ஏவலால்,
தேன் வழங்கு மலர்ச் சினை நீடிய
கான் வழங்கினர்கண் உளம், தேற்றிட,
மீன் வழங்கு விண்ணோர் விரைந்து எய்தினார்.
82
   
எலிசபெத்தின் வேண்டுகோள்
 
2377கண் கனிந்து களிப்ப மெய் காட்டினர்;
பண் கனிந்த இசைக் கொடு பாடினர்;
புண் கனிந்த மருந்து எனப் பொங்கு அருள்,
விண் கனிந்த உறுதி விளம்பினார்.
83
   
 
2378பெறுதி ஆகம் அறாப் பெரிது அன்பினாள்,
உறுதி ஆக, அன்று ஏவிய உம்பர்க் கேட்டு,
இறுதி ஆக நின்று ஏங்கு உயிர் தேறி, உள்
குறுகி, ஆகம வாயொடு கூறுவாள்:
84
   
 
2379“அன்னை ஏவிய அண்ணலரே! இனிது
என்னை ஆண்டகை தன் பதத்து ஏவிய
பின்னை, பேர்கிலீா பெற்றியோடு என் மகன்
தன்னை ஓம்பிடத் தந்தையும் தாயும் நீர்“ .
85
   
எலிசபெத்தின் மரணம்
 
2380என்று இரங்கி, இரங்கிய சேயின்மேல்
நின்று இரங்கு கண் நீரோடும் ஆசி தந்து,
அன்று இலங்கிய அம் கொடி வீழ்ந்தெனப்
பொன்று இலங்கிய பூட்சி வீழ்ந்ததே.
86
   
கருணையன் சோகம்
 
2381வீழ்ந்த கொம்பொடு சேர் கொடி வீழ்ந்தென
மாழ்ந்த தாயொடு மாழ்ந்தென வீழ்ந்த சேய்,
ஆழ்ந்த துன்பு உளத்து ஆற்றிலன், ஒற்றை வாள்
போழ்ந்த ஈர் உயிர் போல் கிடந்தான்; அரோ.
87
   
 
2382தேற்ற அருந் துயர் தேற்றிய வானவர்,
ஏற்று அருந் துணை ஆக, எழுந்து, உயிர்
ஆற்ற அரும் பரிவாய் உடல் நாடல் போல்,
போற்ற அருந் துயர் கொண்டு, புலம்பினான்.
88
   
 
2383பருகு தேனினைக் கான்றெனப், பண் இசைக்கு
அருகு தேனினும், இன்பு அளி பாடிய;
முருகு தேனொடும் முற்று அலர் பூ வனம்
உருகு வான,் இளையோன், உளத்து ஏங்கினான்.
89
   
 
2384புல் உடம்பு புதைத்தன பேர் உயிர்,
வில் உடம்பு என வேய்ந்தன காட்சியால்,
கொல் உடம்பிடி கொண்டு குடைந்த புண,்
நல் உடம்பு எனத் தேறி நடந்ததே.
90
   
கருணையன் தன் தாயை அடக்கம் சொய்தல்
 
2385கதிர் செயும் உருவில் தோன்றிக்
  கனிவொடு சூழ்ந்த விண்ணோர்
உதிர் செயும் கனி போல் வீழ்ந்த
  உடற்கு, நன் முறைகள் யாவும்,
முதிர் செயும் அன்பின் பாலால்
  முடித்த பின், குழவி மோனன்
பொதிர் செயும் உளத்தைத் தூண்டும்
  புரிவில் தன் முறைகள் தேர்ந்தான்.
91
   
 
2386புன் மலர்க் கண்கள் துாவும்
  புனலின் நீராட்டி, மார்பில்
பன் மலர்ப் படலைக் கண்ணி
  பல் அறம் புனைந்தாய் என்று
தன் மலர்க் கரத்தால் சூட்டி,
  சாய் பகலொடு குவ்வு ஏடு
துன் மலர்க் கமலக் கையைத்
  தொழக் குவித்து இறைஞ்சிட்டானே.
92
   
 
2387அளி அழ, குயில்கள் மஞ்ஞை
  அயர்ந்து அழ, அழ அன்னங்கள்,
கிளி அழ, அழப் பூம் பூவை,
  கிளை அழ, இரங்கி வீசும்
வளி அழ, புனல் ஈண்டு ஓடி
  வந்து அழ, வனத்தில் எல்லா
உளி அழ, அழவே தோன்றல்,
  உம்பர் மெய் எடுத்துப் போனார்.
93
   
 
2388பூக் கையைக் குவித்து, பூவே!
  புரிவொடு காக்க என்று, அம் பூஞ்
சேக்கையைப் பரப்பி, இங்கண்,
  திருந்திய அறத்தை யாவும்
யாக்கையைப் பிணித்து என்று ஆக,
  இனிதில் உள் அடக்கி, வாய்ந்த
ஆக்கையை அடக்கிப், பூவோடு
  அழும் கணீர் பொழிந்தான் மீதே.
94
   
 
2389தாய் முறை திருந்தி, யாக்கை
  தகு முறைக்கு அடக்கி, பின் தன்
நோய் முறை அடக்கல் ஆற்றா
  நுதலிய தவத்தின் மாட்சி
தூய் முறை விரும்பி, தன்கண்
  துணை இலாது அஞ்சி ஏங்கி,
தீய் முறை அழல் நெஞ்சு ஒத்த
  திரைச் சுனை தனித்துச் சென்றான்.
95
   
கருணையன் பல நினைத்து புலம்பித் துயில்ல்
 
2390எழும் சுனை அகட்டுப் பாய் நீா,்
  இனிது இவற்கு இரங்கி விம்ம,
கொழுஞ் சுனை கண்கள் ஆய
  குவளைகள் இமையா நோக்க,
கெழுஞ் சுனை வரம்பில் வைகிக்
  கிளைத்த நோய் அழன்ற நெஞ்சான்
அழும் சுனை பெருகக் கண்ணீர்,
  அகல் கடல் வெள்ளம் ஆற்றா.
96
   
 
2391மண் நரம்பு இசையின் பாடல்
  மாறி, வண்டு இரங்கி விம்ம,
உள் நரம்பு அழுத்த தன்மைத்து
  உருக் குயில் அழுது தேம்ப,
விண் நரம்பு அருளின் மார்பன,்
  விழுங்கிய துயர், கால்வான் போல்,
பண் நரம்பு இளகி, ஏங்கும்
  பரிசொடு விம்மிச் சொல்வான்.
97
   
 
2392சொல்லிய இசையின் பெட்போ,
  துயரமோ, வியப்போ, ஏதோ?
புல்லிய கொம்பில் புள்ளும்,
  பூவில் வண்டு இனமும், காற்றும,்
இல்லிய புனலும், மற்ற
  யாவும் வாய் விடாமை கேட்ப,
கல்லிய கவிர்ச் செவ் வாயான்,
  கருதிய துயரம் கான்றான்.
98
   
 
2393நீர் எழும் குமிழி போலும், நெடிய தேர் நேமி போலும்,
கார் எழு மின்னல் போலும், கடல் எழும் திரைகள் போலும்,
பார் எழும் செல்வத்து இல்லை பதியுமோ நிலையும் என்றார்:
சீர் எழு ஞானத்திற்கும், திரை திரண்டு அலைவது உண்டோ?
99
   
 
2394வெண் நிறத் துகில் கொள் மாசு
  வெண் மதி கதிருள் தோய்த்துத்
தென் நிறத்து ஒழிக்கல் போல்,
  சூல் சிறை அகன்று உதிக்கும் முன்னர்,
தண் நிறப் பிறை சூழ் தாளாள்,
  தளிர்த்த தன் தயையின் சொன்ன
பண் நிறக் கிளவியால், யான் பழம்
  பழிக் களங்கம் தீர்ந்தேன்.
100
   
 
2395உலை வளர் தீயின், தீய உலைப்பு இடும் பாவம் தீர்ந்து,
கலை வளர் உணர்வும் ஞானக் காட்சியும் உணராது எய்தி,
அலை வளர் உலகில,் ஒவ்வா அதிசயத்து, என் தாய் வையின்,
மலை வளர் வெள்ளம் என்ன வரத் தொகை உவப்பக் கொண்டேன்.
101
   
 
2396தூங்கு உயர் கனிகள் தீம் பால்
  தோய வீழ்ந்து என்றோ, வானின்
நீங்கு உயர் துளி முத்து ஆக
  நிறத்த சங்கிடை வீழ்ந்து என்றோ,
பாங்கு உயர் வரத்தில் என்னைப்
  பயந்த தாய் உதரம் நீங்க,
ஓங்கு உயர் இறைவன் சாயும்
  ஒண் கரத்து இமிழின் சாய்ந்தேன்.
102
   
 
2397மை வகை தளிர்த்த பாவ வடுவொடு சனித்த நான், உள்
பொய் வகை அன்றிப் பேறு புணர்கிலன் ஆகி, எந்தை
மெய் வகை தெளிந்த ஞானம் விளைத்த பல் வரங்கள் தந்தே,
உய் வகை தந்த தன்மை, உரைப்பவோ மூகை நானே?
103
   
 
2398வளர்ந்த வெண் மதி தேய்ந்து அன்ன,
  வளம் கொடு பிறந்த பின், நான்
உளர்ந்த கண் அருவி ஓட்டி,
  உலந்து எனை ஈன்றோன் மாள,
கிளர்ந்த வெம் பகையைக் கொன்னே
  கிளைத்த கோன் கொடுமைக்கு அஞ்சி
தளர்ந்த மெய் அவலித்து, என்னை,்
  தாயும் இவ் வனத்தில் உய்த்தாள்.
104
   
 
2399நீட்டு இடை நெறிகள் நீக்கி நீரிடை மலர்ந்த கஞ்சத்து
ஏட்டிடை அன்னம் என்ன, ஈன்றனள் கரத்தில் வைகி,
காட்டிடை இருந்த தன்மை காண்கிலன், வையம் நீங்கி,
வீட்டிடை உவந்த தன்மை விருப்பு எழ, வளர்ந்தேன் அன்றோ?
105
   
 
2400வாய் மணி ஆகக் கூறும் வாய்மையே மழை நீராகி,
தாய் மணி ஆக மார்பில் தயங்கி உள் குளிர வாழ்ந்தேன்;
தூய் மணி ஆகத் தூவும் துளி இலது இளங் கூழ் வாடிக்
காய் மணி ஆகும் முன்னர்க் காய்ந்து என காய்ந்தேன்; அந்தோ.
106
   
 
2401விரிந்தன கொம்பில் கொய்த
  வீ என உள்ளம் வாட,
எரிந்தன நுதி நச்சு அம்பு உண்டு,
  இரும் புழைப் புண் போல் நோக,
பிரிந்தன புள்ளின், கானில் பெரிது அழுது
  இரங்கித் தேம்ப,
சரிந்தன அசும்பில,் செல்லும் தடம் இலா
  தனித்தேன; அந்தோ.
107
   
 
2402துள்ளி வாழ் உழைகா!், கொம்பில்
  துன்னி வாழ் குயில்காள்! தூய் தேன்
அள்ளி வாழ் அளிகாள்! தேன்காள்!
  அழல் நிறக் கமலப் பைம் பூம்
பள்ளி வாழ் ஓதிமங்காள்!
  பறித்து வாழ் கொடிகாள்! கோறல்
உள்ளி வாழ் வரிகாள்! சொன்மின்
  உயிர் தனித்தலின் தீது உண்டோ
108
   
 
2403உய் முறை அறியேன், சேர்ந்த
  உணர்வின் ஒத்த உறுப்பும் இல்லா
மெய் முறை அறியேன்,
  மெய்தான் விரும்பிய உணவு நேடச்
செய் முறை அறியேன், கானில்
  செல் வழி அறியேன், தாய் தன்
கை முறை அறிந்தேன். தாயும்
  கடிந்து எனைத் தனித்துப் போனாள்.
109
   
 
2404காய் முதிர் கனியின் ஊழ்த்துக்
  கனிந்து வீழ் இம் மெய் வாட்டி,
வேய் முதிர் வனத்தில் நோன்பின் வித்தினால்
  விளை மெய்ஞ் ஞானம்
ஆய், முதிர் உவப்பில் உள்ளத்து
  ஆண்டகை ஒருவன் ஆள,
நோய் முதிர் உலகம் நீக்கல்
  நுதல்வு அரும் இனிமை தானே.
110
   
 
2405ஊக்கம் ஏர் பூட்டி, நோன்பால்
  உடல் செறு உழுது, நன்றி
வீக்க மேல் விரதச் செந்நெல்
  வித்தி, நல் ஒழுக்க நீரைப்
போக்க நீடு இறைத்து, தன் ஐம்
  பொறி எனும் வேலி காக்கில்
ஆக்கமாய்ப் பெரும் வீட்டு இன்பம்,
  அண்டம்மேல் விளைக்கும் தானே.
111
   
 
2406ஆயினும், வயது ஓர் நான்கும் ஆகும் முன் தனித்த நானே,
வீயினும் கொடிய பேய்கள் வினை செய ஒரு பால், ஓர் பால்
போயினும் கொடிய தன் மெய்ப் பெரும் பகை செய, இவ் வாயில்
போயினும், வழுவாச் செல்லல், புணர்வு அரிது, அறத்தின் ஆறே.
112
   
 
2407தன் முகம் படிகம் இன்றித்
  தரணியில் காண்பான் இல்லை;
பல் முகம் காட்டும் இன்பம்
  பற்றலில் திரி தம் நெஞ்சம்
துன் முகம் தம்மில் தாமே
  துகள் அற எவரும் காணார்;-
வில் முகம் காட்டும் நூலோர்
  வெயில் பளிங்கு இன்றி,- அன்றோ?
113
   
 
2408மொய்யொடு கடுத்த கோபம் முதிர்-அற நீதி என்ன,
மெய்யொடு விளைந்த காமம்-விழு மனக் கேண்மை என்ன,
மையொடு வளர் பொன் ஆசை-வழித் துணை ஆசை என்ன,
பொய்யொடு பொங்கு பற்றல் புரை-புகுத்து அரிய ஆறே.
114
   
 
2409இன்ன ஆறு, ஒருவன் நானே, இடறு
  இலாது ஒழுகும் பாலோ?
துன்ன ஆறு இடறி வீழ்ந்தால்,
  துணைவன் நின்று எடுத்து, ‘பின்றாது
‘அன்ன ஆறு ஒழுக,‘என்று ஓர்
  அருங் குரு இல நிற்பேனோ?“
என்ன ஆறு, ஒழுகும் வெள்ளத்து,
  இள முனி அழுது சொன்னான்.
115
   
 
2410நவ மணி வடக் கயில் போல்,
  நல் அறப் படலை பூட்டும்
தவம் அணி மார்பன் சொன்ன
  தன் இசைக்கு, இசைகள் பாட,
துவம் அணி மரங்கள் தோறும்,
  துணர் அணிச் சுனைகள் தோறும்,
உவம் அணி கானம், கொல்லென்று ஒலித்து ஒலித்து
  அழுவ போன்றே.
116
   
 
2411பனி மதி பொழிந்த கற்றை
  பருகிய ஆம்பல் போல,
தனி மதி துய்த்த நெஞ்சின்,
  தான் தனை நம்பாத் தன்மை,
துனி மதித்து, அயர்ந்தது அல்லால்,
  துணிவு அறா வயிரக் குன்றாய்,
முனி மதிக் குழவி சோர்ந்து,
  முளரிமேல் துயில்கின்றானே.
117
   
கருணையன் புலம் பலையறிந்த முவரும் வருத்துதல்
 
2412படம் புனைந்து எழுதிய பாங்கின், பங்கயத்
தடம் புனைந்து, இள முனி சாற்றுகின்ற எலாம்,
வடம் புனைந்தெனப் புனை மறை நல்லோர், எசித்து
இடம் புனைந்து, இருள் அற உணர்ந்து இரங்கினார்.
118
   
திருமகள், கருணையிடம் கூறுமாறு வானவரிடம் சொல்லிய செய்திகள்
 
2413இரங்கிய தன்மையின் உதவி ஈ்ந்து அருள்
அரங்கிய நாயகன்,ஆங்கு அடர்ந்து சூழ்
குரங்கிய உம்பரை விளித்து, குட்டனுக்கு
உரம் கிளர் உறுதிகள் உரைப்ப ஓதினான்.
119
   
 
2414பேர்ந்த பூ கரையின் மேல் வாடும் பொற்றியால்,
ஆர்ந்த பூந் தடம் கரைக்கு அயர்ந்து துஞ்சி, உள்
கூர்ந்த நோய் அலைவு கொள் குழவி தன்மையில்,
தேர்ந்த மா முனி, மனம் தேற்றச் செல்மினே.
120
   
 
2415அற வினா விளைத்த நல் ஆசையால், உளம்
துறவினால் உயரிய விரதம் சூழ்ந்த பின்,
நறவினால் அலர்ந்த பூ முறுக்கி நைந்தென,
உறவின் ஆசையின் அயர்ந்து, உளைவது ஏது என்பீர்.
121
   
 
2416செருக்கிடை, கோடு உளம் சிதைக்கும் ஐம் பொறிப்
பெருக்கிடைப் பெரும் பகை பெறும்இவ் யாக்கையை,
முருக்கு இடைத் துறவற முயற்சி வேண்டுவர்,
நெருக்கு இடைத் தோல் உரித்த அரவு நேருவார்.
122
   
 
2417மெய்த் துணை இழுக்கு எனத் துறவின் மேன்மையோர்,
பொய்த் துணை என்று, தம் பொறிகள் போழ்குவார்
அத்துணை கடிந்த பின், அனையர், மற்று இவண்
எத்துணை கொள்பவர் என்ன, ஓதுவீர்.
123
   
 
2418உருத் துணை பொன் மணி புணர்ச்சியோ, துணர்
மரத் துணை மலர்தலோ,- குருவின் வாய்த் துணை;
கருத் துணை புரையொடு சனித்த காலையில்,
குருத் துணை இல் ஆயினான்-குருடன் ஆயினான்‘ .
124
   
 
2419என்பவன், ஆயினான் எனினும், கூர் உளத்து
இன்பு அவன் நுகர்ந்து எழ, இதயத்து ஆண்டு, அறா
அன்பு அவன் உணர்வின் மேல் இயற்ற ஆண்டகை,
பின்பு, அவன் குருத் துணை பெறலும் நேடவோ?
125
   
 
2420போது வாய் மது எனப் பொலிந்த சூல் அணி
மாது வாய் இருந்த போது, உணர்ந்த வான் கலை
காது வாய் உரைப்ப, ஓர் குருக் கண்டான் கொல்? அன்று
ஓது வாய் மலர்ந்தவன்-இன்றும் ஓதுவான்.
126
   
 
2421உள் உறத் திருவுளம் இது என்று ஓர்ந்த பின்,
தெள் உறத் தேற்று உரை செப்பல் வேண்டுமோ?
அள் உறப் பொலி வயத்து அணிந்த தேவ அருட்கு,
எள் உறத் தோன்றிய இடுக்கண், ஏது என்பீர்.
127
   
 
2422‘தான் தனது‘என்று இரு தகுதிப் பற்றலும்,
நோன்றன அடல் கொடு நூக்கி, வான் உயர்
கோன்-தனது அருள் நிலை சார்ந்த கொள்கையில்,
ஆன்றன மதுகை, மூ உலகும் ஆட்டுமே.
128
   
 
2423“நிரை, எலா நயன் அடைக் கடல் நீர்மையால்,
திரை இலா நிலை உடைத் தேவன் மார்புஉழி,
மரை எனா மலர்ந்து, அன மனம் துயின்றெனர்
புரை இலா வாழ்க எனப் புகல்மின் நீர்“் , என்றான்.
129
   
மரியாள் விருந்துணவு ஆக்கியளித்தல்
 
2424இவை எலாம் இளந் தவற்கு, இளம் பிரான் உரைத்து,
அவை எலாம் வணக்கொடும் அமரர் கேட்டலின்
நவை எலாம் அறப், பொலி உம்பர் நாயகி,
சுவை எலாம் மலிய, ஓர் விருந்து தோற்றினாள்.
130
   
 
2425கன்னலும் தேறலும் கனியும் பாலொடு
பன்னலும் அரியது ஓர் பாகும் சேர்த்தி, ‘இஃது
இன்னலும் பசியும் ஆற்றிடும்‘ என்று ஈந்தனள்,-
உன்னலும் அரிது அருள் உருத்த நெஞ்சினாள்.
131
   
சூசை சொல்லிய செய்தி
 
2426தாய் வளர் அன்பின் மேல் தயை வளர்ந்து, கான்
போய் வளர் தவர்க்கு எலாம் திலதம் போன்று உளான்,
வீய் வளர் கொடியினான், தாழ்ச்சி மேய்மையின்
வாய் வளர் உணர்வினை வகுத்துக், கூறினான்.
132
   
 
2427“மண் உறக் கிடந்த நான், வரைவு இலா வளம்
நண்ணுற, எனக்கு அருள் நாதன் செய்தவை
கண் உறக் கண்ட பின், கலங்கித் தான் உளம்
புண் உறக் குழைவதோ புலன்“ என்பீர் என்றான்.
133
   
வானவர் வருகையும் கருணையின் மகிழ்வும்
 
2428இனையன பலவும் அன்று இசைத்து, மூவரும்,
நனை அன இள முனிக்கு ஆசி நல்கலும்,
அனையன உயர்ந்த பல் அமரர், ஓர் கணம்
புனை அன உடைக் கதிர் பொதுளச் சென்றனர்.
134
   
 
2429குரவமே பின்னிய கூறையால், உடல்
கரவ, மேல் உடுத்து, மென் கமலப் பாசு இதழ்
பரவ, மேல் துயின்றனன், பாலனாய்த் தவம்
விரவ மேவியர்க்கு எலாம் விளக்கு ஒத்தான்; அரோ.
135
   
 
2430விழுந்தன கதிர் திரள் விழிகள் கூச, உள்
அழுந்தின வெரு உறீஇ அயிர்ப்பொடு ‘ஐ‘எனா
எழுந்தனன், ‘சொல்லுமின் வந்தது!‘என்று, பின்,
தொழும் தனது இரு கரம் குவித்துத் தோன்றினான்.
136
   
 
2431மூவரும் உணர்த்திய உறுதி முற்றவும்,
தூவு அரும் உணர்வினோன், செவியின் துய்த்த பின்,
மேவு அருங் கருணையாள் விருந்து துய்த்து, உளம்
தே வரும் தெளிவு ஒளி துய்த்துத் தேறினான்.
137
   
 
2432தெள் நிறக் கவினொடு செறிந்த உம்பருள்
ஒள் நிறக் கதிர் முகத்து ஒருவன் போன்று இரீஇ,
பண் நிறத்து இசைகளைப் பாட வானவர்,
விண் நிறக் களிப்பு எழ விரும்பிப் பாடினான்.
138
   
கருணையன் பாடிய கணிவுப் பாடல்
 
2433அடல் வண்ணத்து, அருள் வெள்ளம்
  ஆர்ந்து ஒழுக மல்கி எழும்
கடல் வண்ணத்து, எவ் உயிரும்
  தேற்றல் தரும் காவலனே;
தேற்றல் தரும் காவலனைச்
  சேர்ந்து, அவிர் தன் கமலத் தாள்
ஏற்றல் தரும் சிந்தையவர்,
  ஈங்கு இழிவு நண்ணாரே.
139
   
 
2434வான் தோய்ந்த மகிழ்வு உளனாய், மன் உயிர்கள் உய்வதற்கே,
ஊன் தோய்ந்த துயர் கொண்ட உம்பர் தொழும் கோமானே,
உம்பர் தொழும் கோமானை உள்ளி, நெறியுட் பிறழாது,
இம்பர், தொழும் சிந்தையவா,் ஈங்கு இழிவு நண்ணாரே.
140
   
 
2435பால் நேரா அருட் கடலின்
  பதுமம் என நான் வாழ
தான் நேரா இடுக்கண் உறீஇத்
  தயை உணர்வின் மிக்கோனே;
தயை உணர்வின் மிக்கோனைத் தவிர் நசையைத்
  தவிர்ந்து உயர்ந்தோர்
இறை உணர்விற் பிறழாதார், ஈங்கு
  இழிவு நண்ணாரே.
141
   
 
2436விண் கனிய விண் உறைந்தோன்
  விளைத்த அருள் உளம் தூண்ட,
மண் கனிய மனு ஆகி மணிக் கலத்து
  ஏந்து அமுது அன்னோன்;
மணிக் கலத்து ஏந்து அமுது அன்னோன்
  மணிக் குடைக் கீழ் ஒதுங்கினர், அன்பு
அணிக் கலத்து ஏந்து அடி பெயரார்,
  ஈங்கு இழிவு நண்ணாரே.
142
   
 
2437அவ் வுலகும் உவந்து ஏத்தும் ஆன்ற குணத் தொகையோனை
இவ் வுலகும் ஏத்தாதால், ஈங்கு இழிவு நண்ணாரோ?
ஈங்கு இழிவு நண்ணாரே இக் கருணைக் கடலோனை
நீங்கு இழிவு நண்ணாத, நெறி நீங்காச் சிந்தையரே.
143
   
கானக்க் கட்சி
 
2438என்று கூறி இளம் முனியோடு, இடை
நின்று வாழ்த்திய வானவர் நீங்கினும்,
மன்று மாலை மணத்து அணி கோதை போல்
அன்று கானம் எலாம் அலர் பூண்டதே.
144
   
 
2439தும்பி தேனொடு தூங்கு இசை யாழ் செய,
கொம்பில் ஆர் குயில் கூவு இசை பாட, மேல்
பம்பி ஆர்ந்த புள் பார்க்க, உவந்து சூழ்
உம்பி வான் மயில் ஆடின ஓகையே.
145
   
கருணையன் இறைவனை மனத்துள் காணுதல்
 
2440கை அடங்கில காந்தி மின் போன்று, புன்
மெய் அடங்கிய பேர் உயிர் மேல் எழீஇப்,
பொய் அடங்கிய ஐம் பொறி நீக்கி, வான்
ஐ அடங்கிய ஆண்டகை,-நேடும் ஆல்.
146
   
 
2441பேர்ந்த பேர் உயிரைப் பெற, ஒல்கி நோய்
கூர்ந்த தாய் உடல் நேடிய கொள்கையால்,
ஆர்ந்த ஆசை அலைந்து உளம் ஆட, உள்
நேர்ந்த நாதனை எங்கணும் நேடுவான்.
147
   
 
2442மழையின் ஆர்ப்பு என வண்டு இமிர் நீள் தரு
மழையின் நீர் எனத் தூய் ம்துத் தூவலும்
மழையின் நீல நிறத்த வனத்திடை
மழையின் மின் என வந்திரிவான;் அரோ.
148
   
 
2443‘மனத்துளே உறைந்து ஆள் வய நாதனை,
வனத்துளே தொடர்ந்தால் மருவான்‘ எனக்,
கனத்துளே நுழை மின்னின் கடிந்து, உளத்து
இனத்துளே திருத் தாள் அடைந்து, ஏத்தினான்.
149
   
 
2444நெடிது நேடிய நீரியது ஓர் பொருள்,
கடிது காண்டலும், காதல் களித்தென,
நொடி துதைந்த நுணங்கிய நோக்கு அறாது,
அடி துதைந்த அகத்து அரிது, ஓங்கினான்.
150
   
மோயிசன் கண்டமரம் - கருணையன்
 
2445மின்னின் மின்னிய வேள்வியின் தீ எனா
வன்னி, மின்னிய வாள் முகம், தண்ணமே
துன்னி மின்னிய தூய் உளம், தீச் சுடர்
முன்னின் மோயிசன் காண் மரம் ஒத்ததே.
151
   
மரியாள் அனுப்பிய உணவால்மகிழ்தல்
 
2446விண்டின் மாரி வரத்து, அருள் மீ விளைந்து,
அண்டி ஆர்ந்து உண்டு ஆங்கு உயிர் வாழ்கினும்,
உண்டி நாட உறுப்பு உதவாப்,பசி
மண்டி வாடிய பூ உடல் மாழ்கும் ஆல்.
152
   
 
2447உய்ய நீண் கிழங்கோடு, உயர் தீம் கனி
கொய்ய நீரிய குட்டனும், நொய்ய தன்
கை அதால் உதவி இல கால் எல்லாம்,
வெய்ய வான் அரசாள், விருந்து ஓம்பினாள்.
153
   
 
2448ஓம்புகின்ற விருந்து உள நாள் தொறும்
சாம்புகின்ற விண்ணோர் தரத், தாமரை
கூம்புகின்ற கரத்தொடு கொண்டு உண,
காம்புகின்ற உடல், கனி வாழும் ஆல்.
154
   
கருணையனைப் இறைவனடி சேர்த்துத்
துயர்நீக்க சூசை வேண்டுதல்
 
2449இனைய யாவையும் இன்பு எழக் காண்டலும்,
நனை அளாவிய வாகை நறுந் தவன்
புனை அவா உளம் தூண்டிய பொம்மலால்,
தனையன் ஆயின நாதனைச் சாற்றினான்:
155
   
 
2450வரி வளர்ந்த வனத்து இள மா முனி
எரி வளர்ந்து இடர் மாந்தல் எந் நாளுமோ?
உரி வளர்ந்த உன் தாள் உறச் சேர்க்குதி;
சொரி வளர்ந்த அருள் தொடர் போய்! என்றான்.
156
   
 
2451அருளின் காணியினான், அருளிச் சொலும்
பொருளின் காணிய பொற்பு அளிக்கு இன்பு உறீஇ,
கருளின் காணும் முக் காலை கடந்து, ஒளிர்
தெருளின் காணியினான், இவை செப்பினான்:
157
   
திருமன்,‘கருணையன் என் முன்னாடி‘எனல்
 
2452கோது அணிந்த உளம் கோடி,
  கோடா நிற்கும் கூ உலகம்
தீது அணிந்த துயர் தீர்ப்பப்
  பிறந்தேன் நான்; என் திரு முகத்தின்
தூது அணிந்த தவ வடிவாய், வழி
  தான் முன்னித் துடைப்பதற்கே
போது அணிந்த வனம் வைகும்
  அவனைத் தேர்ந்தேன், பொறி வென்றோய்!
158
   
 
2453‘இனம் சேர்ந்தார் இனம் சேர்ந்த
  இழிவும் சேர்வார்‘ என்று, அருளை
மனம் சேர்ந்து ஆய், வடுச் சேராக்
  குழவி தான், என் மனப் பணியால்
வனம் சேர்ந்தான்; அங்கண் எனது
  அருள் அங்கை மேல் வளர்ந்து, அன்னான்
புனம் சேர்ந்த ஆர் கனித் தருவின்
  பொலிசை மிக்கோன் பொலிவானே.
159
   
 
2454மீன் கறி கற்ற ஒளி வேற்கு அஞ்சு இல,
  கான் நின்று வெளிப்பட்ட
ஊன் கறி கற்ற அரி அன்ன
  தவத்தின் மிக்கோன,் உலகு அஞ்சத்,
தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர்
  வனத்தினின்று, செழு ஞானம்
தான் கறி கற்று உழிழ்ந்து என்னத்
  தவறா நீதிச் சால்பு உரைப்பான்.
160
   
 
2455சொல் ஆரும் மலர் சிந்தும்
  குன்றத்து உச்சி துறந்து ஓடி,
வில் ஆரும் திரை சிந்தும்
  சோர்தான் என்னும் வெண் நதிக் கண்,
எல்லாரும் உய் வழியைக்
  காட்ட நான் வந்து இயைந்த நிலை,
கல்லாரும் கற்று உய்ய
  விரலால் என்னைக் காட்டுவன் ஆல்.
161
   
 
2456புண் துதைந்த தீ அன்ன
  சுடுஞ் சொல் வாளால், புரை ஈர்ந்து,
விண் துதைந்த இடி என்ன
  முழங்கி, நீதி வெரு உய்த்து,
கண் துதைந்த இருள் தீர
  விளக்கு இட்டு அன்ன கதி காட்டி,
மண் துதைந்த மன் உயிர்கள்
  பலவும் உய்க்கும் வரம் கொள்வான்.
162
   
காமத்தில் ஆழ்ந்த அரசனால் கருணையன் தலை வெட்டப்படுதல்
 
2457“பாடலோடு இயைந்த ஆடல்
  முடவற்கும் இன்பம் பயந்தென, கோல்
கோடலோடு இயைந்த புகர்
  கொண்டு, அன்று, ஆண்ட கோமானும்,
ஆடலோடு இயைந்து ஒழுகி,
  அரிய எல்லா அறத் தொகையோன்,
வீடலோடு, இயைந்து எதிர்க்கும்
  வினை சால் போதக், கனி கேட்பான்.
163
   
 
2458எரி காய்ந்த இரும்பின்மேல்
  துளி வீழ்ந்து அன்ன, எரி காமம்
புரி காய்ந்த மனத்து உணர்வு உற்று
  ஒழுகல் செய்யாப் புகைந்து அழிய,
வரி காய்ந்த உணர்வோன,் தன்
  தம்பி இல்லாள் வைத்து மதம்
சொரி, காய்ந்த கரி அன்ன
  காமப் பவ்வம் தோய்ந்து ஆழ்வான்.
164
   
 
2459நஞ்சு இனிதாய் நெடு நாளும்
  நக்கி நக்கி, நா மரத்து,
விஞ்சு இனிதாய் அமுது ஊட்டின்
  சுவை கொள்வானோ? வினை வென்ற
நெஞ்சு இனிதாய் அமுது உமிழ்ந்தே,
  அன்னான் ஓதும் நீதி முறைக்கு
அஞ்சிலனாய், அன்று, அவனைச்
  சிறையுள் பெய்வான்-அறப் பகையான்.
165
   
 
2460கலை செய் தூய் உயர்வு உரைத்தோன்
  பிரிதல் சொன்ன காரணமாய்,
உலை செய் தீ விளை காமத்
  துணைவி, தேறாது உணர் பகையால்,
கொலை செய்வான் அமைதியைக் காத்து
  இருந்த காலை, கோன் பிறந்த
நிலை செய் நாள், விருந்து ஓம்பி,
  நிருபர் எல்லாம் நின்று உவப்பர்.
166
   
 
2461குழல் எடுத்து இன்னிசை குயில,
  அரசன் காணக், குழு்ச சூழ,
நிழல் எடுத்து ஒண் மணி மின்ன
  நிருபன் பாவ நிலை மகளே,
அழல் எடுத்து இன்பு எனச் சுடும் வேற்
  கண்ணால் நோக்கி, அறம் அழியக்
கழல் எடுத்து, ஒண் சிலம்பு ஆர்ப்பக்,
  கனத்து மின் போல் ஆடுகிற்பாள்.
167
   
 
2462தேன் குழைய, மலர் குழைய,
  இடை கண் கை கால் திறம் குழைய,
மான் குழையக், குழைந்து இழைந்து இன்
  அமிர்தம் ஊற, மகிழ்வு உறீஇ, உள்
கோன் குழைய, குழுப் புகழ,
  உணராது ஆணை கூறினன்: ‘வான்
மீன் குழையக் கவின் மகளே!
  கேட்டது ஈவேன் விழைந்து‘ என்பான்.
168
   
 
2463தாய் உணர்வால், கருணையன்தன்
  தலையை அன்னாள், தரக் கேட்டு,
தூய் உணர்வால் வருந்தினும், தான்
  மறுக்கல் தேற்றாத் தொடர் காமம்
காய் உணர்வான் உள் கலங்கி,
  ‘ கொணர்மின்‘ என்ன, கடுங் கசடர்
போய், உணர்வால் பகைத்த முனி
  தலை கொய்து, அங்கண் பொறுத்து உய்ப்பார்.
169
   
 
2464பகை தீர்ந்தது எனத் தாய் உள்
  உவப்ப, நீதி பகர்ந்தது போல்
தொகை தீர்ந்த வரத்தோன் வாய்
  தோன்ற, யாரும் துதைந்து அஞ்ச,
தகை தீர்ந்த தீ அரசன்
  குழைய, ‘குன்றாத் தவத்து உயர்ந்தோன்
மிகை தீர்ந்த செல் கதி சேர்ந்து
  உவப்பான்‘, என்றான் வினை தீர்ப்பான்.
170
   
காமத்தின் தீங்கு பற்றிச் சூசை
சூசை காமத்தின் கோட்டினைக் கூறுதல்
 
2465முருகு வாய் மொழி முற்றவும் கேட்டு, உளத்து
உருகும் மாதவன், ஓங்கிய ஓதியால்
பருகு வாய்மையின் பால் நலம், பண்பொடு ஆங்கு
அருகு கான்றென, ஆய்ந்து அறைந்தான்; அரோ:
171
   
 
2466கொல்லும் வேலினும் கொன்று உயிர், மெய் உணப்
புல்லும் வீயினும் புன்கண் புகுத்தி, மேல்
செல்லும் கூற்றினும் நஞ்சினும் தீயது ஆம்
ஒல்லும் மாதர் உணர்ந்து உடை ஆசையே.
172
   
 
2467கனி நுழைந்த அமுதோடு உணும் காளமே,
துனி நுழைந்து துகைத்து உயிர் துய்த்தென
நனி நுழைந்த நசை, இனிது உண்ட பின்,
இனி நுழைந்த இடுக்கண் வருத்துமே.
173
   
 
2468சிலையின் மேன்மையும் சீர்த்தியும், சீல நல்
நிலையின் மேன்மையும் வாழ்க்கையும் நீதமும்
கலையின் மேன்மையும் காமம் நினைத்த கால,்
உலையின் மேல் வழுது ஒத்து, எரிந்து இற்றவே.
174
   
 
2469கண் அவாவு கதிர், கடல் மூழ்கும் முன்,
பெண் அவாவு கொணர் பிணி தன்மையின்,
புண் அவாவு புலால் உணும் குந்தமும்
விண் அவாவு விண் ஏறும் ஓர் தீமையோ?
175
   
 
2470“அரிந்த போது குழைந்தென, ஆகுலம்
பிரிந்த போது நசை பெறுமாம் என்பார்.
விரிந்த போது குடை வினை வண்டு எனப்
புரிந்த போது நசை உயிர் போழுமே.
176
   
 
2471“தசை செய் மெய்ப் பகை தாங்கிய மாக்கள் தம்
நசை செய் அப் பகை நாடினர் தாம் என,
விசை செய் வில் பகை வில் தொழில் காக்கினும்,
வசை செய் அப் பகை மாற்ற அரிது ஆம் அரோ.
177
   
 
2472“ஒல்லும் தன்மையை ஓர்ந்து இல மானிடர்,
கொல்லும் தம் பகையே குணம் என்பது
சொல்லும் தன்மை அன்றேல், அருள் சூழ்ந்து நீ
வெல்லும் தன்மையை யார் ஐ விளம்புவார்?
178
   
இறையருள் தீச்செயல் நிலையாது எனல்
 
2473“மின்னல் நேர் ஒழி இன்பம் விரும்பிய
அன்ன நேரலன் கோடணை ஆற்றலோடு,
இன்னதுஆல் அருளோன் இரும் வீட்டிடை
மன்ன நீ செயும் வல் அருள் ஆண்மையே.
179
   
 
2474“கடு உயிர்த்து அடும் கண் செவி நாகமே
கொடு மருத்துவர் கொல் விடம் கொல்லுவார்.
வடு மருட்டிய வஞ்சினர் செய்த தீ
அடு வினை கொடு நீ அருள் ஆற்றுவாய்.
180
   
 
2475“தீய தம் வினை தீயர் முடித்தலால்
தூய நல்வினை சூழ்ந்து முடித்து அருள்
ஆய நின் வினை ஆதரவாய், இனிக்
காய வெவ் வினைக் கையருக்கு அஞ்சவோ?
181
   
 
2476“உலகு யாவும் உடற்றினும் அஞ்சவோ,
அலகு யாவும் அகன்று அருள் ஆற்ற நீ
விலகி யாவும், விளங்கிய வெஞ் சுடர்
இலகி ஆர் இருள் இற்றது போல்?“ என்றான்.
182
   
 
2477என்ன மாதவன் எண் அகன்று இன்பு உறீஇ,
அன்ன நாகில் அருந் தவன் மாட்சியை
உன்ன நாவு அமுது ஊற்று என, நாள்தொறும்
மன்ன நாதனை மாறு இல வாழ்த்தினான்.
183
   
முன்னுரை
 
2478மனையிடை இவை எலாம் வழங்கும் காலையில்
கனை இடை முரசு அதிர் கனலி மா புரம்
வினையிடை விளை செயிர் விலகி, ஞாபகச்
சினையிடை மலர்ந்த நற் சீலம் செப்புவாம்.
1
   
திருமகன்அப்பா என்ற நாளில்அடியெடுத்து வைத்தல்
 
2479போர் முகத்து உற்ற பேய் புதையப் பூதியுள்
கார் முகத்து இடி எனக் கறங்கி வீழ்ந்து உற,
தார் முகத்து இக்கு என முதல் சொல் சாற்றிய
ஏர் முகத்து இளவல் அன்று அடி வைத்து ஏகினான்.
2
   
 
2480பூ இடைப் புதி மதுப் பூத்த பூ என,
நா இடைத் தேன் உக நவின்று உலாவலின்,
பா இடைப் புகழ் எழ உம்பர் பாடி, மேல்
கோ இடைத் திருவிழாக் கொள்கைத்து ஆயதே.
3
   
திருமகன்அணிந்த சட்டையின்விசேடம்
 
2481துன்னமும் இசைப்பும் ஒன்று இன்றித்தூய் நிறத்து
அன்னமும் மறு எனத் மெய்ப் பை அன்னை தான்
பின்ன மும்முறை தொழுது இட்டுப்பேர் அருள்
மின்ன மும் முடியினோன் வேய்ந்து தோன்றினான்.
4
   
 
2482கான் உலகு அலரொடு, கதிர் விளக்கிய
வான் உலகு உடுவொடு வனைந்த நாயகன்,
மீன் உலகு இரங்க, ஓர் மிடி கொள் காஞ்சுகம்
தான் உலகு அளித்து உறீஇத் தரித்துத் தோன்றினான்.
5
   
 
2483உரு வளர் மதியொடும் ஒளி வளர்ந்து அன,
மரு வளர் முளரி மெய் வளர்ந்து மெய்ப்பையும்
தரு வளர்வொடு, புதி தன்மை தோன்றின
வெரு வளர் முறையில் தான் விளிந்த வேலையே.
6
   
 
2484குழல் நிகர் தேன் மொழிக் குழவி கண்டனர்
நிழல் நிகர் நீங்கு இலா, நிமிர்ந்த காதலால்
கழல் நிகர் அடி மலர் புல்லி, காய் உளம்
அழல் நிகர் அடும் துயர் குளிர்ப்ப ஆற்றுவார்.
7
   
 
2485போது வாய் மலர்ந்து உரை முதல் புகன்ற போது,
ஏது வாய் மடங்கவும், இனிது உளத்தோடு
காது வாய் குளிரவும், கனியச் சூசை பார்த்து,
ஓது வாய் இளவல் இன்று உணர்த்தினான் அரோ.
8
   
அறவுரையாற்ற அருந்தவன்சூசையைத் திருமகன்தூண்டுதல்
 
2486கள் உண்ட எசித்து நாட்டில்
  கடவுளர் ஆக நின்று,
தள்ளுண்ட பழியின் பொங்கும்
  சடத்து முன் பொருத போரில்
எள்ளுண்ட பேய்கள், அந் நாடு
  இழிவு உறக் குணித்த யாவும்
தெள் உண்ட உணர்வில் காட்டித்
  திருமகன் சொன்னான் மீண்டே:
9
   
 
2487“புண் தக வெறிகள் ஓட்டிப்
  புரை பொதிர் நாட்டின் மொய்த்த
கண்டகம் கொய் தேன் நானே,
  கசடு அறும் உணர்வின் நீயும்
மண் தக உழுது, சீலம்
  மலி அறம் வித்தி, யாரும்
விண் தக வீட்டின் ஆக்கம்
  விளைவது பேணல் நன்றே.
10
   
 
2488“மும் மழை மதியில் பொய்யா
  முகில் என, அருளின் வாய்ந்த
கம் மழை பொழிய நானே,
  களிப்பு உற விளைவு காண்பாய்
மைம்மழை ஆகப் பேய்கள்
  வளர்த்த தீ மருளும் நீக்க
அம் மழை, குளிர்ப்பது அன்றி,
  அகத்து ஒளி விளக்கு அது ஆமே.
11
   
 
2489“ஆசை ஏர் ஆகப் பூட்டி,
  அறிவு அழித்து உளம் சேறு ஆக்கி,
ஓசையே கலங்க வீக்கி
  உழுது பல் புரையே வித்தி,
மாசையே முதல் பல் வாழ்வின்
  வளர் பயிர் முகத்தைக் காட்டி,
காசையே உதவாப் பூதிக்
  கனல் விளைவு இயற்றும் பேயே.
12
   
 
2490“தெள்ளிய வரத்தின் மாரி
  திளைத்த வண் தவத்தின் குன்றத்து
உள்ளிய ஓதி நீத்தம்
  ஒழுகி வந்து, அலகை வஞ்சத்து
எள்ளிய புரையின் பைங் கூழ்
  இற்று அறச் சிவையின் கொய்து,
விள்ளிய கொடியோய், சீல
  விளைவு உணர்ந்து ஒழுக“ என்றான்.
13
   
சூசை வரம்வேண்டல்
 
2491“கூகையே ஒளியை வெஃக, கொடும் புலி இரங்க, செந் தீ
வாகையே குளிர்ப்ப, நச்சு மரம் உயிர் காக்க, மற்றை
ஓகையே உணர்ந்த காலை உனக்கு அரிது என்கொல்? வேதம்
மூகையே நானும் கூற முயல்வியே“ எனத் தான் நேர்ந்தான்.
14
   
திருமகன்ஆரியால்சூசை துணிதல்
 
2492“அணித் தகு உருவில் எங்கும்
  அனலியே விளக்கும் ஆறும்,
மணித் தகு மலர் பூ வாச
  மது நலம் பொழியும் ஆறும்
பணித் தகு பயிற்றல் வேண்டா.
  படர்ந்த அன்பு உணர்வினோற்கே
பிணித் தகு உயிர் ஓம்பு ஆறும்
  பேசவேன்?‘ என்றான் நாதன்.
15
   
 
2493நால் முகத்து அருளின் ஆக்கம்
  நாட்டி மேல் கதியில் உய்ப்ப,
ஊன் முகத்து உறீஇ நான் தேடும்
  உயிர் என உணர்ந்த நட்பின்,
நூல் முகத்து உணர்த்தி“ என்ன
  நுவன்று இறை ஆசி தந்தான்
தேன் முகத்து அலர் தாள் சூசை
  சென்னி பூண்டு இறைஞ்சினானே.
16
   
 
2494நாடக அரசன் ஒவ்வா,
  நவிக் கனி எட்டி ஒவ்வா,
மாடக ஆணி ஒவ்வா,
  மடக் கிளி உணர்த்தும் தீம் சொல்
சூடக மகளிர் ஒப்பச்
  சொன்னவை பொய்யாச் சீலத்து
ஈடு அக மரபோன் வான்
  வீட்டு இன்பு உகும் ஓதி ஓர்ந்தான்.
17
   
 
2495வாய்ந்தன மணியின், பூவின்
  மலர்ந்தன, விரை செய் தீம் தேன்
தோய்ந்தன, அமுதில் யாரும்
  துய்ப்பன, வழுவாச் சீலம்
ஈய்ந்தன, வரும் வீட்டு இன்பம்
  இடுவன, கருணை நெஞ்சத்து
ஆய்ந்தன எவர்க்கும் சூசை
  அறைகுப வலித்தான் அன்றோ.
18
   
அன்பால் மக்களை கவர்ந்து தருமத்தின்பயனை விளக்குதல்
 
2496ஈரம் ஒன்று இல இறைத்தன பயன் இல விரை ஆம்
வாரம் ஒன்று இல மனத்தவர்க்கு ஓதிய மறை என்று,
ஆரம் ஒன்றிய அருள் அணி மார்பனே உடற்கும்
ஓரம் ஒன்றிய உதவியோடு அன்பு உறல் உணர்ந்தான்.
19
   
 
2497அன்பு வித்தினர் ஆங்கு அதன் விளைவு என அன்பைப்
பின்பு கொள்பவர் எனப்பிறர் உயிர் எனப் பேணி,
என்பு வேண்டினும் இடும் தயை மலர் முகத்து, எவர்க்கும்
முன்பு காண்டு இல முகை மதுமொழி நலம் உரைப்பான்.
20
   
 
2498கை தளர்ந்தனர்க்கு இரந்து தான் அளித்து, நோய் கடுத்த
மெய் தளர்ந்தனர் மெலிவு அறும்மருந்து என, பொறி செய்
பொய் தளர்ந்தனர் புலன் உற விளக்கு என, எவர்க்கும்
மை தளர்ந்தன மனத்து உரித் துணை என ஆனான்.
21
   
 
2499கொடும் தொல் புண்ணினைக்
  கொந்து அழல் ஆற்றியது அனைய
சுடும் சொல் கொண்டு அருந்
  துகள் வடு ஆற்றுதல் வேண்டின்
விடும் சொல் பூ என விள்ளிய
  நய முகத்து அருளே
படும் சொல் கொண்டு உளம் பனிப்
  படக் குளிர்ந்து இனிது உரைப்பான்.
22
   
 
2500தீ ஒக்கும் துயர் தீக்கு
  உளத்து இழி மழை ஒக்கும்;
நோய் ஒக்குங் கடை நுனிந்த
  நல் மருந்து ஒக்கும்; இருளைப்
பேய் ஒக்குங் கடை பெயர்த்து
  உளத்து ஒளி விளக்கு ஒக்கும்;
தாய் ஒக்கும்; பயன் தரு மறை
  ஒக்கும் தன் தயவே.
23
   
 
2501பாசம் ஆம்அருள் பரிவு உளம் இன்னணம் பிணித்தே
வாச மாமையின் மது மலர் மொய்த்த வண்டு அனைய
காச மாமையின் காமரு மலர்க் கொடி தயைத் தேன்
வீச மாதவன் விளம்பியது உளத்து உண மொய்ப்பார்.
24
   
 
2502அருள் திறந்த வாய் அறைந்தவை ஒத்தது ஓர் அன்பின்
தெருள் திறந்த காது அருந்தலின், தெளிவு உகும் சீலப்
பொருள் திறம் தகா பொறி நெறி விலகி, மெய் உணர்வின்
மருள் திறம் தகா வரும் பலர் காட்சியில் பொலிந்தார்.
25
   
 
2503ஓர் என்பான் உலக ஒருங்குடன் படைத்த பின், நீதிச்
சீரின் பால் நெறி சிதைவு இலா நடவிய நிலையைப்
பாரின் பால் நலம் படுவ கண்டு, இறைஞ்சலே கல்விப்
பேர் இன்பான் உறும் பெரும் பயன் இது என உரைப்பான்.
26
   
 
2504நனி அவா இருள் உளம் புகா தெளிதலும், நயப்ப
இனிய கூறலும் எமர் பிறர் இன்றி ஓம்பலும், உள்
முனிய மாறலும், முரிந்தனர் நிறுத்தலும், மற்றக்
கனிய சீலமும் காட்டி ஓர் பெரும் விளக்கு ஆனான்.
27
   
 
2505சாற்றிக் காட்டிய தகை நெறி விரும்பி வந்து, ஒரு நாள்
ஏற்றிக் காதலோடு இருந்து திருஞ் செல்வரே வினாவ,
“போற்றிக் கேண்மின் நீர் புகை என ஒழி பொருள் ஈகை
ஆற்றிக் கேடு இல அமர் பயன் கூறுதும்“ என்றான்.
28
   
தருமம் செய்தற்குரிய முறைகள்
 
2506“பொய்த்த பல் வழிக் கான் இடைப் போதல் போல்
மொய்த்த நீர் உலகில் முரியாது அறம்
வைத்த நல் வழி வாய்ப்பு அரிது ஆம், கொடை
உய்த்த நல் முறை முற்பட ஓதுவாம்.
29
   
மனமாசுடையவர்அறம்
 
2507“வெருள் தரும் குரல் வெம் சின ஏறு உமிழ்ந்து
இருள் தரும் புயல், பெய்தலில் ஏற்றுவார்
மருள் தரும் புகார் மல்கினும், மாறு இலாப்
பொருள் தரும் கையைப் போற்றுவர் யாருமே.
30
   
 
2508“நஞ்சு நல் அமுது என்று அதை நக்கினும்
எஞ்சு நஞ்சு அமுது ஆம் கொல்? யாவரும்
மஞ்சு நேர் கொடை வாழ்த்தலின், தன் புரை
விஞ்சு வெவ் வினை இற்று அற வீயுமோ?
31
   
அறவோர்புகழுக்கு அஞ்சுவர்
 
2509“விஞ்சும் ஈகையில் வீண் புகழ் கோடலே,
எஞ்சு வாணிகர் புன் தொழில் என்று அலால்,
நெஞ்சு மாசு உற மேல் புகழ் நீவுதற்கு
அஞ்சுவார் கொடையால் பயன் வேண்டுவார்.
32
   
 
2510“கொடை வரும் பயன் கொண்டு கவர்ந்திடும்
இடை வரும் புகழ் என்று உயர் நீர்மையார்
உடை வரும் பொருள் கள்வர்க்கு ஒளித்தென
மிடை வரும் கொடை வேய்ந்து இல ஈவரே.
33
   
வறியார்க்கு ஈவதே ஈகை
 
2511“வீழ்ந்தவர்க்கு உதவி இல, மேன்மையில்
வாழ்ந்தவர்க்கு இடுவார், வயல் பாய்கிலா
ஆழ்ந்த நீர்க் கடல் அண்டி நலம் கெடத்
தாழ்ந்த நீர்ப் புனல் தன்மையின் ஆயினார்.
34
   
 
2512“வளர்ந்த பூங் கதிர் மாழ்கிய நெற்கு உயிர்
உளர்ந்த வான் புயுல் ஊட்டிய நீர் எனத்
தளர்ந்த வாழ்க்கையைத் தாங்கி இல்லோர்க்கு இடும்
கிளர்ந்த வான் கொடை கேழ்த்து எழும் ஈகையே.
35
   
 
2513“ஒரு கைம்மாறு உணராக் கொடை வான்மிசை
வரு கைம்மாறு முன், வையகத்து ஆண்டகை
தரு கைம்மாறு இயல் சாற்றிடக், கேண்மின், நீர்
இரு கை மாறு இல ஏழ் கொடை போற்றியே“ .
36
   
தருமத்தின் பயனை விளக்கும்தொபீயன்வரலாறு
கலிலேய நாடு
 
2514முரல் வாய்ச் சங்கு உளைந்து
  ஈன்ற முத்தும் செந்நெல் முத்தும் உறழ்
நிரல் வாய்ப் பூங்கமழ் கழனி,
  அணிந்த தேன் பூ நிழல் குளிர்ந்த
குரல் வாய்ப் புள் சோலை நலத்து,
  அறமும் சீரும் குடி துஞ்ச,
நரல் வாய்ப் பண் கீதம்
  எழும் காலிலேய நாடு உளதே.
37
   
நெற்றலிமா நகர்
 
2515படம் புனைந்த பூஞ் சுனை
  நாட்டின் மூதூர் பார் முகமோ?
வடம் புனைந்த மார்பு அணியோ?
  மணியோ? வைய வனப்பு அவிக்கும்
தடம் புனைந்த மணிப் புரிசை
  தழுவும்மாடம் தவழ் கொடி செய்
நடம் புனைந்த நெற்றலி மா நகரம்
  ஆம் அந் நாட்டு அணியே.
38
   
தொபீயன்குடும்பம்
 
2516சீர்ச் செல்வத்து அருட் செல்வம்
  சேர்த்தி, ஒவ்வாத் திரு மிக்கோன்,
பேர்ச் செல்வத்து ஒளிக் கொடைக் கைத்
  தொபீயன் என்பான்; பிறழாக் கற்பு
ஏர்ச் செல்வத்து அன்னம் என்பாள்.
  ஈன்ற நம்பி தயோதரனே.
நீர்ச் செல்வத்து அலர் அன்னான்
  வளர்ந்தே வாழ்ந்தார் நிகர் இல்லார்.
39
   
வாழ்ந்த முறை
 
2517பண் அழகு ஆம் இன் குரல் போல்
  அழகு ஆம் நாவில் பணிச் சொல்லே
விண் அழகு ஆம் பெய் துளி போல்
  அழகு ஆம் சீர்க்கு விளை கொடையே,
கண் அழகு ஆம் கண்ணோட்டம்
  என்ன, வீயாக் காட்சி ஒளி
நண்ணு அழகு ஆம் தவ விளக்கு உள்
  எறிப்பக் கண்டான்; நடந்து ஒத்தான்.
40
   
நீனிவை நகரில்வாழ்தல்
 
2518வீய் வரம்பு ஆம் கோதையினாள்
  உணர்வில் ஒப்ப, விழைந்து இருவர்
தீய் வரம்பு ஆம் வினை செருக்கும்
  மறையின் நீழல் செய்து, அங்கண்
நோய் வரம்பு ஆம் மிடி எவர்க்கும்
  செகுத்த பின்னர், நுனித்து அகன்று
போய், வரம்பு ஆய் நீனிவை மா
  நகரில் கைக் கார் பொழிந்து இருந்தார்.
41
   
 
2519மின் சுடரப் பொழி முகில் போல்
  புற நாட்டு அன்னார் விளக்கு ஆகி,
கொன் சுடரப் பொன் புதையா, விளங்க
  ஈய்ந்த கொடை மிக்கோர்,
பொன் சுடரச் சுடும் தீப் போல் பொன்றாத்
  தேவ பொலிவு அருளில்
பின் சுடரப் பல வினையே
  பெற்றார்; மாட்சி பிரியாதார்.
42
   
வறுமையும் கண்ணொளி இழத்தலும்
 
2520ஏமம் சால் ஈதலில் தாம் இல்லோர் ஆனார். தாதையும் நோய்த்
தூமம் சால் மூடிய கண் குருடன் ஆனான். துகள் ஒன்றே
வீமம் சால் குறை எண்ணிக்கை கண் உதவா, மெய் எல்லாம்
காமம் சால் அருள் வாயாய்க் கனிய யார்க்கும் உதவுவான்.
43
   
வருங்கடனைப்பெறவும்மகனுக்குப் பெண்கொள்ளவும்வானவனோடு மகன்அனுப்புதல்
 
2521கால் முகத்து வயிரக் குன்று ஒப்ப
  நோயில் கலங்காதான்
வான் முகத்துத் திருஉளம் என்று ஓம்பி, பொன் சால்
  வரும் கடனைத்
தேன் முகத்து மலர் தன் நாட்டு எய்திக் கொள்ளச்,
  சேர் இனத்துள்
மீன் முகத்து நல்லாளை மகற்குச் சேர்ப்ப
  விழைவு உற்றான்.
44
   
 
2522பூ முற்று முகத்து ஆர்வம்
  புனை நெஞ்சான் என்ற அசரீயன்
காம் உற்று வந்து, உணர்ந்த
  நிலையின், “நம்பி கை கூட்டின்,
ஏம் உற்று, மணம் உற்று,
  மீள்வாம்“ என்ன, இரு குரவர்
தாம் முற்று களியில் விட,
  தனையன் போற்றித் தடம் கொண்டான்.
45
   
 
2523நம்பியும் துணையுமே கையும் நாட்டமும்
கம்பியும் குரல் மணிக் கலனும் போல், தம் உள்
பம்பியும், விளைத்த தீம் பணியின் நல் அறம்
உம்பியும், படர்வழி உவந்து போயினார்.
46
   
வழியில்மீனின்பித்தம்ஈரலும்பெறுதல்
 
2524திரை வளர் தீம் புனல் சென்று, தேன் மலர்க்
கரை வளர் நிழல் உறீஇக் கவின் கொள் நம்பி மேல்,
புரை வளர் வினை எனப் புழுங்கு ஓர் மீன் வர,
விரை வளர் தாரினான் வெருவி விம்மினான்.
47
   
 
2525மேவிய துணையவன் மீனைக் கொன்று, பின்
ஏவிய முறை அதின் பித்தும் ஈரலும்
தீவிய மருந்து என எடுத்துச்செல்வு அயர்ந்து,
ஆவிய நாட்டு எழில் அணுகி எய்தினார்.
48
   
பேய்வினையில்மனப்பெறாச்சாரமியை மணத்தல்
 
2526வள்ளலின் மகன் என மகிழ யாவரும்
கொள்ளலின், உவர்ப்பு இல கடன் கைக்கொண்ட பின்
எள்ளல் இல் மரபினாள் இயையும் மன்றலை
உள்ளலின், முகலி மா நாகர் உற்றார் அரோ.
49
   
 
2527மதி அகடு உரிஞ்சிய கொடியின் மாடம், நீள்
நிதி அகடு ஆர் கொடை நிவலன் நோன்று, தேன்
புதி அகடு ஆர் அணிப் பொற்பில் ஈன்ற அப்
பதி அகடு இணை இலாச் சார்மிப் பாவையே.
50
   
 
2528காவி நோய் செய்த கண் விழைந்து ஏழ் காதலர்
ஓவி நோய் செய்த பேய் ஒருங்கு மாய்த்தலால்,
நாவி நோய் செய்த பூங் குழலின் நங்கை உள்
ஆவி நோய் செய்து தழல் அருந்தி வாடினாள்.
51
   
 
2529வாடிய ஒரு மகள் வளர்ச்சி கண்டு உளம்
கூடிய துயர்க்கு இரு குரவர் நாள்தொறும்
நீடிய நசை கொடு நிமலனைத் தொழுது,
ஆடிய சிந்தையின் அரற்றி விம்முவார்.
52
   
 
2530தம் துயர் மூவரும் தகைப்ப அன்று அவர்
வந்து, உயர் மணிக் கொடி மன்றல் கேட்டலும்
நொந்து, உயர் கிளையரை நிவலன் நோக்கி, முன்
வெந் துயர் விளைத்த பேய் வினை விளம்பினான்.
53
   
 
2531“பேய் வளர் வினை எலாம் பெயர்ப்பன் நான்“எனத்
தீய் வளர் குரவர் உள் சிறந்து நேர்தலால்,
போய் வளர் கோலம் இட்டு அரிவை பொற்பு உறீஇ,
மீய் வளர் மலர்க் கொடி பூத்து வேய்ந்ததே.
54
   
 
2532செங் கதிர் மதியொடு ஓர் அணையில் சேர்ந்து என,
அம் கதிர் நல்லாளொடு காளை ஆங்கு உறீஇ,
இங்கு எதிர் தோழன் முன் கொணர்ந்த ஈரலை
பொங்கு அதிர்வு எழப் புகைத்து எரித்துப் போக்கினான்.
55
   
 
2533போக்கிய புகையொடு புழுங்கு பேய் இனம்
நீக்கிய நிலையின், ஆங்கு எவரும் நீர்த்து எழ,
வீக்கிய கொடி நலம் ஏய்ந்த காளை உள்
தேக்கிய மகிழ்வு அறா சிறந்து மூழ்கினான்.
56
   
வீடு திரும்பல்
 
2534இரு மணிப் படலையின் இருவர் வாழ்ந்து உராய்,
பரு மணிக் களிப்பின் நான் பலவும் சென்ற பின்,
திரு மணிக் கொடியோடு திரும்பச் செல உணர்ந்து
அரு மணிக் குன்று அனான் அமைதி கேட்டனன்.
57
   
 
2535விடையொடு வருந்தினும் தாதை, “மேவு அருள்
இடையொடு வளர்க“ என்று இள மின் கூட்டி, வான்
கொடையொடு வளர்ந்த சீர் குவி தன் அன்பு உரி
நடையொடு வேண்டுவ வெறுப்ப நல்கினான்.
58
   
 
2536“பறவையும் நிழலுமாய் உம்முள் பற்று உறீஇ,
உறவையும் மறக்கினும், உவந்து இல்லோர்க்கு எலாம்
கறவையும் மிக அருள் காமின்“ என்றனன்
நறவையும் மணத்தையும் நவிழ் பைந் தாரினான்.
59
   
 
2537தூம்பு உடைக் கைய மா, துரகம், சாடு, உயர்
கூம்பு உடைத் தேர், தசம், கொடி, குடைக்கொடு
தேம் புடை அலங்கல் வேல் சேனை சூழ் வர,
வீம்பு உடை மரபினோர் விரைவின் போயினார்.
60
   
மனைவியின்துயரைத்தெபீயன்ஆற்றுதல்
 
2538பண் நடையால் ஆடல் எனப் பரிவு அற்று இங்கண்
உள் நடையால் உவப்பில் இவை ஒழுகும் காலை,
புண் நடையால் மகற்கு அவண் தாய் புலம்பி நோக,
பெண் நடையால் உளி மயங்கிப் பெரிது நைந்தாள்.
61
   
 
2539“பொருள் இழந்தேம்மகன் இழந்தேம்புலம்ப நீ கண்
தெருள் இழந்தாய்இதோ கொடையின் செய்கை?“ என்றாள்
“அருள் இழந்தே சொல்லல்“என அழும் தொபீயன்,
மருள் இழந்தே கலங்காதான், மறுத்துச் சொன்னான்:
62
   
 
2540“அறம் ஒன்றே பயன், பேதாய்அஞர் தீது அல்ல,
மறம் ஒன்றே வினை, காணாய். வழங்கும் அன்பின்
திறம் ஒன்றே; நயம் பீடை சேர்த்தி ஈவான்
புறம் ஒன்றே ஒவ்வாக் கருணைப் பொலிவோன்,“ என்றான்.
63
   
 
2541“மைத் திறத்தால் நொந்து அழுவது எளிதே; வாடும்
மெய்த் திறத்தால் இறப்பு எளிதே, விளை நோய் தந்த
கைத் திறத்தால் தேறி, உளம் காய்ந்த துன்பம்
அத் திறத்தால் இன்பம் என்பது அரிதே“ என்றான்.
64
   
 
2542“காய் பதம் கண்டு அருங் கொல்லன்
  கரும் பொன் காப்பான்
நோய் பதம் கண்டு ஆற்றானோ,
  நுனித்த அன்பின்
தாய் பதம் கண்ட எந்தை?“ எனச்
  சாற்றும் வேலை,
சேய் பதம் கண்டு ஈண்டு ஒருவன்
  தூது சென்றான்.
65
   
தயோதரன்பெற்றோரை வணங்குதல்
 
2543“திங்கள் நாண் அரிவையோடு
  சென்றனன் காளை“ என்றாற்கு,
“எங்கணான் நம்பி?“என்றார்
  எழும் விரைவு இவரும் சென்றே,
“இங்கண் நாம், அடிகள்!“என்ன
  இருவர் தாள் தழுவி வீழ்ந்து,
தம் கண்நாள்மலர் நீர் ஆட்டித்
  தகும் துயர் ஆற்றினாரே.
66
   
தொபீயன்கண்ணொளி பெறுதல்
 
2544ஏற்றினான், உயிரோடு ஆக்கை
  இமிழ்த்து என அணைத்தான், கண்ணீர்,
தூற்றினான், “அழும் கண் அன்றித
  துலங்கு கண் இலெனோ“ என்னச்
சாற்றினான்; அரிய தோழன்
  தழுவினான். அவனும், “இந் நோய்
ஆற்றி நான் உவப்பச் செய்வேன்;
  அரிக இக் கவலை“ என்றான்.
67
   
 
2545நூல் வழி கொணர்ந்த பித்து
  நோம் இரு கண்ணில் பூசிச்
சேல் வழி சிலாம்பின் புல்லம்
  சிந்தி வீழ்ந்து இருளும் நீங்க,
நால் வழி அனைத்தும் தோன்றி
  நவை அறத் தொபீயன் காண,
மேல் வழி உதவி என்ன
  விமலன் பின் இவனைத் தாழ்ந்தான்.
68
   
 
2546திரு மணிக் குன்றின் சாயல்,
  சிறுவனும், ஒளி மீன் பூத்து
வரும் மணிச் சாயலாளும்,
  வளர் நிதிக் குப்பையோடு
பெரு மணிப் பேழைச் சால்பும்,
  பெற்ற மற்று எவையும் தன்கண்
இரு மணிக் களிப்பின் கண்டான்
  இருங் கொடைப் பயனின் மிக்கான்.
69
   
தொபீயன்வினாவும் தயோதரன்விடையும்
 
2547நல் வினை விளைவு கண்ட
  நகர் எலாம் நயப்ப, தோன்றல்
பல் வினை வழியில் ஆய
  பயன் எலாம் பணிப்ப, தாதை
வில் வினை வளைக் கை பற்றி
  வேறு இருந்து, “உரைமோ, காளாய்;
வல் வினை உணர்வின் தோழன்
  வழங்கு கைம்மாறு ஏது?“ என்றான்.
70
   
 
2548“கொடிய ஓர் வகுலி கொன்றான்,
  கொள் கடன் கொண்டான், பேய்கள்
கடிய ஓர் கவின் நல்லாளைக்
  கடியொடு சேர்த்தான், செல்வம்
பொடிய ஓர் அளவு அற்று உய்த்தான்,
  புலம்பும்உனக்கு இரு கண் தந்தான்.
படிய ஓர் கைம்மாறோ? சீர்
  பாதி இட்டு இறைஞ்ச“ என்றான்.
71
   
தொபீயன் துணைவனைப்போற்றி முகமன் கூறல்
 
2549கோதை வாய் விரை செய் மார்பன்
  கூய்மின் என்று, அவனும் வந்தான்
தாதை வாய் அமிர்தம் ஊறத்
  தன் கையால் முன் கை பற்றி,
காதை வாய் மடங்கச் செய்தாய்;
  கடிப் புகழ் இங்கண் வித்தி,
மேதை வாய்ப் பெருஞ் சீர் வான் மேல்
  விளைத்தி, மற்று அறிய நானோ?
72
   
 
2550அடிப் பணி செய்க நாமே.
  அரும் பொருளோடும் உய்த்த
கடிப் பணி பகுந்து ஓர் பாகம்
  கைக் கொள்க என்னப் போற்றிக்
கொடிப் பணி உலவும்மார்பன்
  குளிர்ப்ப ஓர் முறுவல் காட்டி,
துடிப்பு அணி மொழியால் சொன்னான்
  சுருதி நூல் அமிர்த வாயான்:
73
   
வானவன்தன்வரலாறு கூறி மறைதல்
 
2551“உருக் கொடு தோன்றி, நானே
  உரு இலா வானோன், இன்பப்
பெருக் கொடு தேவ பாதம்
  பெற்ற இரபயேல் என்பேன்.
மருக் கொடு மலர்ந்த பூப் போல்,
  வளர் அருள் கொடையின் பாலால்,
திருக் கொடு புகழ் நீ எய்தச்
  செலுத்தினான் என்னை நாதன்.
74
   
 
2552“இரவலர் தம் கை வேலி
  இடத்து அரும் பொருளை வித்திப்
புரவலர் புகழும் பொய்யாப்
  பொலிவொடு விளைத்தி வாழ்வும்,
பரவு அலர் மலர்ந்த சோலை
  படர் நிழல் மங்கா யாண்டும்
கரவு அலர் முகத்து இல்லோர் தம்
  கைக் கொளும் கொடை வித்து எஞ்சா.
75
   
 
2553“பொன் ஒளி சுடரச் செய் தீப்
  புரை, அறத்து உயர்ந்தாய் என்ன
உன் ஒளி சுடர, துன்பத்து
  உளைதியே துன்பம் தாங்கி
மன் ஒளி சுடர நெஞ்சின்
  மயக்கு இலாப்பொலிந்தாய் என்னப்
பின் ஒளி சுடர இச் சீர்
  பெற்றியே, கொடையின் மிக்கோய்!
76
   
 
2554ஓர் திறத்து இன்பம் துன்பம்
  ஒரு கையால் பகுத்த நாதன்
பேர் திறத்து இணங்கி வாழ்த்தி,
  பெறும் வினை களைக என்னக்
கார் திறத்து ஒளிரும் மின் போல்
  கதிர் எறித்து ஒளிப்ப வானோன்,
சீர் திறத்து அருளின் மிக்கோர்
  திருஉளம் இறைஞ்சி வீழ்ந்தார்.
77
   
 
2555மிடி முகத்து எஞ்சா, செல்வம்
  விளை முகத்து ஓங்கா நீரார்
படி முகத்து இணையா அன்பின்
  படும் குறை எவர்க்கும் நீக்கி,
கடி முகத்து அடைந்த வாழ்க்கை
  கனி பொதுப் பயன் நன்று ஆக,
இடி முகத்து உறை தீது என்ன,
  இமிழ் உறப் பகுத்து, வாழ்ந்தார்.
78
   
 
2556கொடை தரும் பயனே இஃதேல்,
  குளித்த கால் கெடும் என்று ஈந்து,
மிடை தரும் பொருளின் ஆக்கம்
  மேவுமின் என்றான் சூசை.
கடை தரும் அளவு அற்று அன்னார்
  களிப்பு உற, இரப்போர் வாழ்க
மடை தரும் நிறைவில் தானம்
  வழங்கும் நல் உணர்வில் தேர்ந்தார்.
79
   
அறப்பயன்மறுவுடலிலும் புகும் எனச்சிவாசிவன் கூறல்
 
2557கோலம் இட்ட அங்கக் குடம் ஒத்து, அவண்
சூலம் அக்கு அணி கொக்கு அணி தொக்கு அணி
சால, மிக்க தவத்து உருத் தாங்கி, நல்
சீலம் அற்ற சிவாசிவன் செப்பினான்.
80
   
 
2558அற்ற அல்லி அறாது உறு நூல் என,
பெற்ற இப் பிறப்பின் கொடை எப் பிறப்பு
உற்றது என்னினும் புக்கு ஒழியாது, உயிர்
பற்ற வந்து பயன் தருமே என்றான்.
81
   
முற்பிறப்பு என்பது கதை சூசை கூறுதல்
 
2559பேதை வாய் மொழி கேட்டு உளி, பேரருள்
கோதை வாய் மொழி மா தவன் கூறினான்:
“காதை வாய் மொழி கண்ணி உளம் கெட,
மேதை வாய் மொழி வேதம் அது என்பவோ?
82
   
 
2560“பிறப்பதும், பிறந்தார் எவரும் பினர்
இறப்பதும் பொது அன்றி, இறந்த பின்
புறப் படும் புரம் புக்கு, முன் ஆயவை
மறப்பதும் தவிர்ந்து, ஆர் வகுத்தார்?“ என்றான்?
83
   
சிவாசிவன்மறுப்பு
 
2561“முன் பிறந்தனர் முற்றும்இறந்தார் எனின்,
பின் பிறந்திலர் முன் பெறும் தீவினை
என்பு இறந்த பின், எவ்வழி வீயும்?“ என்று
அன்பு இறந்த சினத்து அவன் கூறினான்.
84
   
சூசையின்விளக்கம்
 
2562மருள் விளைத்த வழக்கு உரை கேட்டலும்
தெருள் விளைத்த திரு விளக்கு ஆயினோன்
அருள் விளைத்த தன் அன்பொடு நூல் மறைப்
பொருள் விளைத்த பயன் புகன்றான்; அரோ:
85
   
 
2563“வினை முதிர்ந்து விளிந்தனர் ஆவி போய்,
முனை முதிர்ந்த அழல் முதிர் பூதியில்,
கனை முதிர்ந்த பனிப்பொடு, எக் காலமும்,
புனை முதிர்ந்த சிறை புகுந்து ஓவும் ஆல்.
86
   
 
2564“செய்த நல் தவ வாள் கொடு தீ வினை
கொய்த பின் இறந்து ஆவி குளிர்த்து அருள்
பெய்த நெஞ்சு பெயர்கில பேரின்பம்
எய்த ஆண்டகை கண்டு என்றும் வாழும் ஆல்.
87
   
 
2565“இரு வகைப் படும் இவ் வுயிர் விட்டு, இடை
வரு வகைப் படும் மற்று உயிர் தன் வினை
ஒரு வகைப் படும் ஒப்பனைத் தீ உலகு
அரு வகைப் படும் அல்லலில் வீயும் ஆல்.
88
   
 
2566“கோது கொள் நிதி பொன் செயும் கொல்லரே
ஊது கொந்து அழல் ஒப்பனை செய்து என
தீது கொள் உயிர் தீது அளவு அன்ன தீ
போது மட்டும் பொருந்த வருத்தும் ஆல்.
89
   
 
2567பொன் விளக்கிய போதில் அக் கொல்லரே
மின் விளக்கிய மேல் நகை செய்து என
இன் விளக்கிய அவ் வுயிர் எம் பிரான்
மன் விளக்கிய மார்பு அணி ஆகும் ஆல்.
90
   
 
2568சொன்ன முன் கதிகள் கடை தோன்று இலா
இன்ன பின் கதி ஈறு உளதாய், இறந்து
அன்ன தீ உறை அவ் உயிர்க்கு ஈங்கு நம்
பல் நல் ஆட்சியின் பாசறை குன்றும் ஆல்.
91
   
 
2569அரிய வேதம்எட்டெட்டும் எண் ஆகமத்து
உரிய இவ்வழி ஒன்று அலது இல்லையால்,
பிரிய மாண்ட உயிர், பின்பு பிறத்தலே
கரிய கங்குல் கனா“ என ஓதினான்.
92
   
வறுமைக்கும் செல்வ வேற்றுமைக்கும் சிவாசிவன்
காரணம் கேட்டல்
 
2570“கூறிய இந் நிலை உளதேல், குன்று உடலும் உடல் வனப்பும்
  குறையும் வாழ்வும்
மாறிய இந் நிலை உலகில் வழங்கிய கால் நீதி இதோ
  வழுவோ? கூறாய்
தேறிய இந் நிலை, மிக்கோய்“ என்று சிவாசிவன் கேட்ப,
  தெளிந்த ஆர்வத்து
ஊறிய இன் நிலை மதுச் சொற் பூங் கொடியோன்
  உரி மறை நூல் உரைத்தான் மீண்டே
93
   
சூசை விடை கூறுதல்
 
2571“ஆதி இலா, ஈறும் இலா, இணை இன்றி என்றும் உளோன்
  அமலன் ஒன்றே
பேதி இலா வானவரும் எம் உயிரும் படைப்புண்ட
  பின் ஈறு இல்லா.
ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன
  உரி நூல் ஈது ஆய்,
நீதி இலா நவை உறும் முன் முதல் படைப்பு எம்
  உயிர் கொண்ட நிலைமை என்னோ?
94
   
 
2572பார் முகத்து முதல் உடல் புக்கு எம் உயிர்கள் தோன்றிய கால்
  பரிவு அற்று எல்லாச்
சீர் முகத்து வாழ் அரசர் யாவரும் கொல் பல் முகத்துச்
  சென்றார்? என்னில்,
பேர் முகத்து வயத்து இறையோன் நீதி அதோ? நீதி அதேல்,
  பிறழா நீதி
ஓர் முகத்து முன் வினைகள் இன்றி இன்றும் இவ் விகிர்தம்
  உளது ஆம்“ என்றான்.
95
   
தலைவிதியும் திருவுளமும்
 
2573“முன் பிறப்பின் விடங்கம் உறத் தலைவிதி காரணம்“என்றான்.
  “முன்பால் நீதி
தன் பிறப்பின் அன்பு உயர்ந்தோன் வேறு பட விதி எழுதல்
  தயவே? என்ன,
“ சொல் பிறப்பின் அடங்காதான் திருஉளமே“ என அன்னான்
  சூசை மீண்டே,
“பின் பிறப்பின் வீற்று இயற்றும் திருஉளமும் தான் என்றால்
  பிழையோ?“ என்றான்.
96
   
 
2574வைகறை ஒத்து அள் இருளும் ஒளியும் இல் சிவாசிவன் உள்
  மயங்கி நிற்ப,
“மொய் கறை அற்று உணர்க என, முந்நீர் சூழ் பூதலத்தில்
  முயலின் மிக்கோன்
செய் கறை அற்று உயர் நீதித் திறம் காட்டி, நெடிது உண்ட
  தெளியா மையல்
பெய் கறை அற்று ஒளி மொய்ப் பெருஞ் சுருதி விளக்கு ஏந்திப்
  பெரியோன் சொன்னான்:
97
   
பொருளும் அருளும்
 
2575தெருள் செல்வம் மிக்க இறையோன் முள் திலத்தும்
  பெய் முகில் போல் சிந்திப் பெய்த
பொருள் செல்வம் வறிது என்னப் பூரியர்க்கும் சால்பு இறைப்பான்;
  பொருவா மாட்சி
அருள் செல்வம் நசைக்கு அளவா யாவரும் கைக்கொண்டு ஓங்க
  வயமே தந்தான்,
மருள் செல்வம் மற்றவையும் ஆகியது அறப் பயனோ,
  மதியின் மிக்கோய்?
98
   
அறமே பொது
 
2576“சலத்து எல்லாம் ஓர் நிலையோ?
  தருக்கு எல்லாம் ஓர் கனியோ? தரணி எங்கும்
நிலத்து எல்லாம் ஓர் விளைவோ? நமக்கு எல்லாம் ஓர் முகமோ?
  நிலையும் பல் ஆய்க்
குலத்து எல்லாம் பொது நின்று குன்றாச் சீர் அறம் ஒன்றே
  குறை ஒன்று இன்றிப்
புலத்து எல்லாம் ஆகும் எனின், புற விகிர்தம் ஒன்று எண்ணார்
  புலமை மிக்கோர்.
99
   
வறுமையும்செல்வமும் மனிதகுலத்தை அனைக்கும் இருகைகள்
 
2577“காறு படும் திறத்து இவன் கைப்பொருள் அவற்கே
  இவற்கு அவன் கைக் கருமம் வேண்டி
வேறுபடும் மனுக்குலமே ஒருப்படுத்தும் இரு கையாம்
  மிடி வாழ்வு. அன்றிக்
கூறுபடும் திறத்து என்றும் வாழ்ந்து அறவோர்,
  அழத் தீயோர் குவவில் காண்கில்,
ஈறுபடு நாளில் வரும் இரு வினை வீயாப் பயன் பின்பு
  இல்லை என்பார்.
100
   
 
2578“திறம் தகா வாழ்வு இதுவாய், திறம்பா வான் வாழ்வது எனத்
  தெளிய நாமே,
பிறந்த கால் உயர் குலமும் சீர்த் திறமும் தெரிந்து இங்கண்
  பிறப்பார் இன்றி,
இறந்த கால் உயர் வான்மேல் இணையா வாழ்வு உற்று ஆளும்
  இயல்பு ஒன்று அன்றோ
மறம் தகா நல்வினை நாம்செய் அளவுஒத்து அன்று எவர்க்கும்
  வழங்கும்?“ என்றான்.
101
   
உன்விதி இது என்று அடித்தான் -றுமான்
 
2579இற்று எலாம் இயம்பியும், “ இவை“ சிவாசிவன்,
“முற்று எலாம் விதி; விதி முயலின் ஆம்“என,
அற்று எலாம் பொறா நுமான், “அதற்கு ஓர் ஞாபகம்
உற்று எலாம் தீர்ப்பல்“ என்று உரைத்து எழீஇயினான்.
102
   
 
2580பிடித்து இழுத்து இறுத்திப்பேர் விதி, அடா!“ என,
அடித்து அடித்து உதைத்து, “ இது விதி, அடா!“ என,
இடித்து இடித்து, “அழற்க நீ, விதி அடா!“என,
வெடித்து அவர் நகக்கொடும் விதி விலக்கினார்.
103
   
சிவாசிவன், விதியே ஊழ்வினை எனல்
 
2581கூன் முகத்து அடும் விதிக் கொடுமை ஈது எனத்
தான் முகத்து ஒரு நகை தரும் சிவாசிவன்,
“நூல் முகத்து உரைத்தவை நுதலித் தேற்று அரும்
பால் முகத்து ஒரு மொழி பகவர்வல்கேள்“ என்றான்.
104
   
 
2582ஏற்ற அரும் உணர்வினோய், இயைந்த நூல் நலோர்
போற்ற அரும் ஊழ்வினை எனப் புகன்ற பின்,
மாற்ற அரும் தலைவிதி மறுப்பவோ?“ என்றான்.
தேற்ற அரும் அயிர்ப்பு அற வளனும் செப்பினான்:
105
   
சூசை, ஊழ்வினை என்பது ஆதித்தாய்
தந்தையரால் வந்த வினை எனல்
 
2583“ஊழ்வினை என்னினும், உரிமை ஓர்ந்து உழி,
மாழ் வினை இயற்ற நீ வகுத்த அக்கரத்து
தாழ் வினை என்பவோ? இறைவன் சாற்றிய
கீழ் வினை இல மறை விரும்பிக் கேட்டி ஆல்.
106
   
 
2584“தீட்டிய விதி அலால், செயப்படா செயும்
கோட்டிய வினை, விதிக் கோட்டம் ஆம் அலால்,
வாட்டிய மனம் செயும் வடு அதோ? இவ்வாறு,
ஈட்டிய அறம் மறம் இரண்டு இல் ஆம் அரோ.
107
   
 
2585“இவ் விதி இலை என இயம்பும் ஊழ்வினை
மெய் விதி மறையினால் விளங்க மாக்களை
செவ் விதி இறைவன் முன் சிருட்டித்து ஆய கால்
உய் விதி இழந்தவர்க்கு உற்றது ஓதுவாம்:
108
   
 
2586“உரு மணிக் குன்று அனான் ஒருவன் ஆண் அலால்,
திரு மணிக் கொடி அனாள் தெரிவை ஆக்கினோன்,
இரு மணிப் படலையின் இருவர்ச் சேர்த்து, அலர்
மரு மணிச் சோலைகண் வைத்து, ‘வாழ்க‘ என்றான்.
109
   
 
2587காதல் மிக்கு, இமிழ் எலாம் கலந்த வாழ்க்கை உண்டு,
ஆதல் மிக்கு, ஆண்டகைக்கு இறை அது ஆகவே,
‘சாதல் மிக்கு உறும்‘எனத் தகைத்த ஓர் கனி
நாதன் மிக்கு உரைத்து, உணா நனி விலக்கினான்.
110
   
 
2588புண் தகா விளிவு உறாப்புதல்வரோடு நீர்
மண் தகா நலத்தொடு வாழுவீர் மறுத்து
உண்ட கால் உவர்ப்பு உளைப்பு உலப்பு மற்ற நோய்
விண்ட கா அகன்று உறீஇ விம்முவீர் என்றான்.
111
   
 
2589மொய்த்தது ஓர் வான் நலம் முரிந்து இழந்து, உளம்
தைத்தது ஓர் பழி விடாச் சவம், ‘மனுக் குலம்
வைத்து அது ஓர் அளவு இல வாழுமோ?‘ எனப்
பைத்தது ஓர் அரவு உருப் பட வந்து ஆயதே.
112
   
 
2590பேதையாய்ப் பிரிந்த பெண் பிணம் கண்டு, ‘இக் கனி,
கோதையாய், உணாமை என்? குணம் இதே‘, என,
‘வாதை ஆய் இறத்தல் ஆய் வரம் இலேம் என்றான்
தாதையாய்க் கடவுள்‘ என்று அரிவை சாற்றினாள்.
113
   
 
2591“கழீஇயின மணி நலாய், கலங்கல் தேன் துளி
தழீஇயின இக் கனி அருந்தின், சாவு இலாது,
எழீஇயின உணர்வு உறீஇ, இறைவர் மானுவீர்
குழீஇயின வரத்து எனக் கூளி கூறிற்றே.
114
   
 
2592“கண் வழி புக்க அவாக் கழுமி அக் கனி
பண் வழி மொழியினாள் பரிந்து உண்டாள், அது
தண் வழி இமிழ் அலால் சாவு இலாது, மற்று
ஒண் வழி ஆடவற்கு உய்த்து, ‘உண்மோ‘ என்றாள்.
115
   
 
2593“கனி முகம் கண்டுழி வெருவி, காந்தைதன்
பனி முகம் கண்டுழிப் பரிவு உற்று ஏங்கினான்.
துனி முகம் கண்ட பேய், ‘துறக்கின்‘, மாது இறீஇத்
தனி முகம் காண்டி‘ என்று உளத்தில் சாற்றிற்றே.
116
   
 
2594“மண் நலம் பொறித்தது ஓர் வதனம் வெஃகியே,
உள் நலம் கெட, ஒருங்கு உலகு எலாம் கெட,
பெண் நலம் கொடியது ஓர் பெரு நஞ்சு ஆகி, மேல்
விண் நலம் கெடும் கனி விழுங்கினான்“ என்றான்.
117
   
விகரன் வினாவும், சிவாசிவன் சிரிப்புரையும்
 
2595“பொன் ஆர் மணிப் பூண் சாயலில் தேம்
  பூங் கொம்பு அனையார் திரு முகத்தின்
முன் ஆர் நிற்பார்?“ என்று எவரும்
  மொழிந்து பனிக்கும் உளத்து எஞ்ச,
“அன்னார் அன்று அக் கனி அருந்தி
  அழிவார் என்ன அறிந்து இறையோன்
இன்னா உகும் அப் பணி செய்வது
  என்னை“ என்றான் விகரன் என்பான்.
118
   
 
2596“பூண் தார் அரசன் வளர்த்த மதுப்
  பொழி காய் உண்பார் என்று அறிந்தும்,
‘தீண்டாது‘எனலும், தீண்டினரைத்
  தெண்டித்திடலும் கொடிது எனவோ?
வேண்டாச் சொல்லாய், சொல்மின்“ என
  விளம்பி நக்கான் சிவாசிவன் தான்.
தாண்டா உணர்வின் மறை வாயோன்
  தயவே தளிர்த்து மீண்டு உரைத்தான்:
119
   
முற்சிறப்பும் ஊழ்வினையும்இது எனல்
 
2597“மானா விடம் உண்டு அன்று அன்னார்
  வான் பேறு இழந்தே, வரம் இழந்தே,
தேன் ஆர் அலர்க் கா இழந்தே தாம்
  சிந்தை பனிப்ப, நாமும் அழ
நானா நஞ்சும் நல்குரவும் நகவும்
  நோயும் கொடுங் கூற்றும்
கான் ஆர் முள்ளும் கொல் விலங்கும்
  கடிது இவ் உலகில் படர்ந்தனவே.
120
   
 
2598“வாயே உணும் நஞ்சுத் உறுப்பு எல்லாம்
  மருவி வருத்தும் வண்ணம் என,
தாயே தாதை கொண்ட வினை
  தனையராம் நாம் கொண்டு அழுங்க,
தீ ஏவிய தீதொடு சனித்துத்
  தெளியா உணர்வின் மனம் கலங்க,
நோயே பால் உண்டு, இடர்க் கரத்தின்
  நுடங்க வினையின் விளைவு உற்றோம்.
121
   
 
2599“சொன்ன குரவர் காலம் அதைத்
  துதி நூலோர் ‘முற்பிறப்பு‘ என்றார்;
முன்னம் அவரால் எமக்கு உற்ற
  முதிய வினை ‘ஊழ்வினை‘என்றார்.
இன்ன வினை அல்லாது, தலை
  யெழுத்தும் வேறு ஊழ்வினையும் இலை;
அன்ன பிறப்பு அல்லாது, இறந்தே
  அயர்ந்து பிறப்பார் இலை“ என்றான்.
122
   
சிவாசிவன் உளம்தெளிந்து உரைத்தவை
 
2600விரிந்து ஆய் கதிர் செய் விடியல் என
  விளம்பும் தெளிந்த சிவாசிவனே:
“பரிந்தாய் என் நோய் உரை வாளால்;
  பசு மண் பகைவன் கை நாணின்
அரிந்தாய் உளத்தின் மருள் எல்லாம்;
  அழுதே உயிரே ஊட்டி அருள்
புரிந்தாய்; புரந்தாய், சுடர்த் தவத்துப்
  புலமை புல்லாக் கலை நல்லோய்!
123
   
 
2601“கனியே உண்டு வந்த வினை
  கண்ணிக் கற்றோர் ஓதிய நூல்
நனியே உணரா, பொய் கலந்தே,
  நல் நீர் கடலுள் கலந்தது போல்,
துனியே தளிர்ப்பத் தலைவிதியும்
  தொலையாப் பிறப்பும் புக்கனவோ!
இனியே வந்த வினை பரியும்
  இயல்பு ஒன்று இலையோ? காண்“ என்றான்.
124
   
சூரையின்மறுமொழி
 
2602விரை செய் கொடியோன் விழா அணியின்
  விரும்பி நோக்கி, “மீண்டு உய்யப்
புரை செய் வினை எம்மால் ஆற்றா.
  பொதிர் அன்பு ஆற்றா அருட் கடவுள்
மரை செய் உடல் கொண்டு அவதரித்து, எம்
  வடுத் தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்பக்
கரை செய் கடல் மிக்கு இடர் கொண்டு
  காப்பான் என்னும் மறை“ என்றான்.
125
   
 
2603“எந் நாட்டு, எந் நாள், எக் குலத்தே
  இறையோன் பிறப்பான் என, அன்னான்
அந் நாட்டு ஒளிப்பத் திருவுளம் என்று
  அறிந்த சூசை, “மறை நூலோர்
முன் நாள் சொன்ன நிலை நோக்கின்,
  முகைத்த என் நாட்டு, என் குலத்தே
இந் நாள் கடவுள் மகன் ஆனான்
  என்பது உரிய இயல்பு“ என்றான்.
126
   
 
2604“பருதி முன்னி இரவு அஃக,
  பருவம் இன்றி வனம் பூப்ப,
இருதி நாக்கு ஆய் ஓர் நவ மீன்
  இலங்க இறையோன் அடி வீழ்ச்சி
கருதி அரசர் மூவர் உற,
  காட்சி அமுதர் கண்டு உவப்பச்
சுருதி நாதன் பிறந்தது எனத்
  துணிவின் தெளிந்தார் சிலர்“ என்றான்.
127
   
 
2605“கான் ஆர் கொடி மேல் பூ அனைய
  கரத்தில் பொலிந்த திரு மகனும்
மானா உறுதி மனத்து உரைப்ப,
  மருள் தீர்ந்து அன்னான் தெளிந்து உவப்பத்
‘தேன் ஆர் இந் நாடு இறைஞ்சிய பொய்த்
  தேவர் ஒளித்த திறம் கண்டேன்
ஈனார் எழ வான் வேந்து உதித்தான்‘
  என்ன உளத்தில் தேறுகின்றான்.
128
   
சிவாசிவன் மனமாற்றம்
 
2606இற்று எலாம் இயம்பினான் இக்கு உலாம் பதாகையான்.
மற்று எலாம் மனத்து உள் ஆய் வான நாதன் ஓதலான்
உற்று எலாம் சிவாசிவன் ஓங்கி ஓங்கு ஞானம் உள்
பெற்று எலாம் வெறுத்தனன் பீலி பெற்ற பாணியான்.
129
   
 
2607கரம் அணிந்த சூல வேல், காது அணிந்த குண்டலம்,
உரம் அணிந்த அக்கு அணி, உள் அணிந்த மாசொடும்
சிரம் அணிந்த கொக்கு இறை தீது அணிந்த கோலமாய்ப்
புரம் அணிந்த மற்று எலாம் போட்டு உதைத்து இரட்டினான்:
130
   
 
2608உற்ற கோலம் வீண் அடா ஒண் தவங்கள் வீண்அடா,
கற்ற நூலும் வீண் அடா கை உதாரம் வீண் அடா
பெற்ற பேறும் வீண் அடா பேர் அறங்கள் வீண் அடா
மற்ற யாவும் வீண் அடா மண்ணை போற்றலால் அடா
131
   
சிவாசிவன்இறைவனை வாழ்த்துதல்
 
2609“ஆதி ஈறு இரண்டு இலோய்,
  ஆசு இலோய், அமைந்த முப்
போது இலோய், உறுப்பு இலோய்,
  பொற்பு எலாம் அணிந்து உளோய்,
கோது இலோய், எதிர்ப்பு
  இலோய், கோ வணங்கும் ஒன்று உளோய்,
நீதி ஆதி நீர் எலாம்
  நீர்த்து அணிந்த நாதனே!
132
   
 
2610இங்கும் அங்கும் எங்கும் ஒன்று
  என்று நின்று ஒருங்கு உளோய்,
தங்குகின்ற என் குறை
  தாங்கி நீங்கி வீடு இட
அங்கம் ஒன்றி உற்றியே
  அங்கு உறாது, நான் இவண்
பொங்குகின்ற இன்பொடு உன்
  பூம் பதங்கள் போற்றினேன்.
133
   
 
2611“தீ அளித்த காம் உறீஇத் தீது அமிழ்ந்தி மூழ்கி, யான்
பேய் அளித்த மால் இருள் பெற்று, அறாச் செருக்கு உறீஇத்
தாய் அளித்த அன்பினும் சாற்று அரும் தயாபரா,
நீ அளித்த கைக் கொடு நீசரைக் குரங்கினேன்.
134
   
 
2612“கோவில் வீற்றிருந்த நீ கோது கொள் எனைக் கொள
மேவி, வீற்றிருந்து யான் வீட்டில் வாழ மைந்தன் ஆய்ப்
பூவில் வீற்றிருந்து இரா, பொங்கு அரந்தை பூண்டியோ!
நாவில் வீற்றிருந்த நூல் நாடி வாழ்த்த அன்பு இதோ.
135
   
 
2613“ஆசு எனும் பெருங் கடல் ஆழ்ந்து நீந்தி ஏறினேன்.
தேசு எனும் பெருங் கதிர் செய்து எறித்த சோதியோய்
மாசு எனும் பெருங் கறை மாறினாய் எனா, நினைத்
தாசு எனும் பெரும் பெயர் தாங்கி வாழ்த்துவேன்“ என்றான்.
136
   
சூசை இறைவனுக்கு நன்றி கூறிச் சிவாசிவனைத்தழுவுதல்
 
2614தான் உயிர்த்த தவத்தினால்
கான் உயிர்த்த கொடிக் கையான்
ஊன் உயிர்த்த உருப் பிரான்
மான் உயிர்த்த அருள் வாழ்த்தினான்.
137
   
 
2615தூக்கினான் விழி தூவும் நீர்
நீக்கினான் நிறை மார்பு உற
வீக்கினான், விளை ஆர்வமாய்
நோக்கினான் மறை நூலினான்.
138
   
 
2616உரு ஒளித்து உறை நாயகன்
மரு ஒளித்த மலர்க் கணால்
திரு ஒளித்த தெருள் கொடு
பொரு ஒளித்த அருள் போக்கினான்.
139