ஞாபகப் படலம்
 
சூழ நின்றுவரும்தெளிவடைந்தார்
 
2617திறம் கொளீஇத் தெருள் தாசன் உள்
பிறங்கு ஒள் ஈடு உறு பெற்றியால்,
புறம் கொளீஇப் பொதிர் யாவரும்
அறம் கொளீஇத் தெளிவு ஆயினார்.
140
   
 
2618கனை வரும் கன மின் என
வினை வரும் பொருள் மேவு இலார்
புனைவு அரும் புகழ் வேத நூல்
அனைவரும் துதி பாடினார்:
141
   
 
2619“நஞ்சினோடு உறு நல் அமிர்து
எஞ்சி நோய் இட மாய்த்து எனத்
துஞ்சினார் துணிவோடு பொய்
விஞ்சி, வேதம் நஞ்சு ஆயதே.
142
   
 
2620“மெய் வகைப் பொருள் வீக்கிய
பொய் வகைப் பொருள் பேர்த்து இல,
மை வகைப் பொருள் மண்டு உளம்
உய் வகைப் பொருள் ஒன்று இலா.
143
   
 
2621“இருள் அடர்ந்த இரா அறத்
தெருள் அடர்ந்த ஒளி சென்று என,
அருள் அடர்ந்த இவன் ஓதியால்
மருள் அடர்ந்த பொய் மாய்ந்ததே!“
144
   
மனந்திரும்பிய சிவாசிவனால்மற்றையோரும் சூசையைப்போற்றுதல்
 
2622பேர் நல மணிக் குன்று உச்சி
  பெரு விளக்கு இட்டதே போல்,
சீர் நலம் பொலி மூதூரில்
  சிவாசிவன் விளங்கித் தோன்ற,
கூர் நலம் தெளிந்த காட்சி
  கொளீஇச் சிலர் குளிர்ப்பத் தேறி,
ஆர் நலம் புதைத்த மெய்ந் நூல்
  அருச்சனை கொண்டது அன்றே.
145
   
 
2623குவி மதத்து அயிர்ப்பில், கற்றோர்
  குழாம் குழாம் நகரத்து எங்கும்,
கவி மதத்து எழுந்த அந் நூல்
  கடக்கிலாது, அலைய, ஓர் நாள்
வி மதத்து அலர்ந்த சோலைத்
  தடத்து உறும் வளனைக் கண்டு,
செவி மதத் தீம் சொல் வெஃகி,
  செல்க ஈங்கு, அடிகள்!“ என்றார்.
146
   
 
2624“நாம் செய்த குறையோ? பல் நாள்
  நாம் இவண் தொழுத தேவர்
தாம் செய்த குறையோ? இக் கால்
  தளர் உணர்வு எஞ்ச, ஐ என்று,
ஆம் செய்த மலர் கொய் இந் நாடு
  அகன்று ஒருங்கு ஒளித்தது என்னோ?
தேம் செய்த மதுச் சொல் நல்லோய்,
  செப்புதி“ என்றார் மாதோ.
147
   
 
2625“உய் வகை இன்றி, மற்று ஓர்
  உழி அடுத்து உய்வார்!“ என்று
பொய் வகை முறுவல் காட்டிப்
  புகன்றனன் சூசை, “ஐயம்
மாய் வகை அருளிக் கேள்மோ,
  முதிர் தவத்து இறைவ!“ என்று
மெய் வகை உணர்வு நாடி
  வினாதத்தன் சொன்னான் மீண்டே:
148
   
வினாதத்தன்ஐய வினா
 
2626“எல்லை இற்று உயர்ந்த ஓர் நாதன்
  இவண் வர, மற்றத் தேவர்
ஒல்லையில் தளர்ந்த வண்ணத்து
  ஒருங்கு ஒளித்து அகலும் என்னத்
தால்லையில் பொறித்த எம் நூல்
  சொன்னவாறு இந் நாள் ஆகி,
வல்லையில் பொதிர்ந்த ஐயம்
  வளர் வினை ஆயிற்று“ என்றான்.
149
   
சூசையின்கேள்வியும்வினாதத்தன்பதிலும்
 
2627“விஞ்சிய வயத்து ஒன்று ஆகி
  வென்றன கடவுள் தானோ,
அஞ்சிய பலரோ வேண்டும்?
  அறைதியே“ என்றான் சூசை.
எஞ்சிய எமக்கே வேண்டும்
  இரு வகை“ என்ன முன்பான்,
துஞ்சிய கனவின் சூட்சி
  சூசை கேட்டு உரைத்தான் மீண்டே:
150
   
சூசை, பலதேவர்களை வணங்கலாகாது எனல்
 
2628“குல நலம் எண்ணா, வாய்ந்த
  குண நலம் உணரா, காவல்
இல நலம் விற்கும் மாதர்
  இழிப் படும் நினைவு ஈது அன்றோ?
இல நலம் புணர் மெய்ந் நாதன்
  மரபு உறாது, ஒருவன் அன்றிப்
பல நலம் பிரிந்த தேவர்
  பணிதல் பேதைமை ஆம்“ என்றான்.
151
   
 
2629“குரு சிலர்க்கு அமைச்சர் வீரர்
  கொள்கையின், முதல்வற் சூழ்ந்து
வரு சிலர் தேவர் என்னில்,
  வழு அதோ?“ என்ன அன்னான்,
குருசிலர் நாமம் தானும்,
  கோ உரிப் பணிவும் சூழ்ந்து
வரு சிலர்க்கு இட்ட காலை
  வழு அன்றோ?“ என்றான் சூசை.
152
   
 
2630“இரவலர் மாட்சி ஒப்ப,
  ஈடு அறிவு இன்மை காட்டும்
புரவலர்ச் சூழ்ந்த வை வேல்
  பொருநரும் அமைச்சர் தாமும்,
ரம் வல நாதன் தன்னால்
  உணரவும் செயவும் வல்ஆய்,
பரம் வல நூலும் வேலும்
  பரிசு இலாது இழிவு ஆம்“ என்றான்.
153
   
வினாத த்தனை அடக்கும்வசிட்டனின்தெளிவும்ஆர்வமும்
 
2631“அரும் பொருள் இருளில் தேடி
  அயர்வது என்? தேவ தன்மை
வரும் பொருள் அறியாது அன்றோ
  மருண்ட சொல் வளர்த்தி? வேதம்
ரும் பொருள் அனைத்தும் வாய்ந்த
  தவ விளக்கு எறிப்பக் கண்டோய்,
அரும் பொருள் இறைமை சொல்லாய்“
  என்றனன் வசிட்டன் என்பான்.
154
   
சூசை கடவுளின் இயல்புகளை விளக்குதல்
 
2632மற்றவர், “இனிது ஈது, அடிகளே“என்ன
  மலர் மது வாயினன் அருளி,
கற்றவர் பருகப் பகர்குவ, புகழ்வ,
  காம் உறிக் கேட்டனர் களிப்ப,
ற்று அவர் தெளிய முளரி வாய் மதுவின்
  முகைப்பன குளிர்ப்பன, சலம் அற்று
உற்றவர் வான்மேல் உய்ப்பன தெய்வ
  ஓதிகள் நுவலிய வலித்தான்:
155
   
 
2633“ஈறு இல நன்மை நிறைவும் ஓர் குறை முற்று
  இன்மையும் தொழத் தகும் தெய்வம்
மாறு இல இயல்பே. வேர் இதாய்க் கிளைத்து
  வரும் சினை என நூலோர்
ஆறு இலக்கணங்கள் உரைத்து ‘அவை உள்ளோன்
  ஆண்டகை; இலன் அலன் என்றார்.
தாறு இல சுடரை மை வரிந்து என்ன
  சாற்றுதும் புன் சொலால் அவையே.
156
   
இறைமையின்ஆறு இலக்கணங்களும் விளக்கமும்
 
2634“தன் வயத்து ஆதல், முதல் இலன் ஆதல்,
  தகும் பொறி உரு இலன் ஆதல்,
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல்,
  வயின் தொறும் வியாபகன் ஆதல்,
பின் வயத்து இன்றி ஒருங்கு உடன் அனைத்தும்
  பிறப்பித்த காரணன் ஆதல்
பொன் வயத்து ஒளிர் வான் முதல் எலா உலகும்
  போற்றும் மெய் இறைமையின் நிலையே.
157
   
 
2635“மிக்கதும் தன்னோடு ஒப்பதும் இல்லா
  மேன்மையே இறைமையின் இயல்பு ஆய்,
ஒக்க அது படைத்த காரணம் இன்றி
  ஒருங்கு தான் ஆதலும், நிலையே
தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன்
  நடக் கையால் வரின் வழு என்னத்
தொக்கு அது நீக்கி, தன் வயத்து ஆதல்
  சொல்லிய ஆறினுள் முதற்றே.
158
   
 
2636“அன்ன வாய், தன்னை ஆக்கினோன் இல்லாது
  ஆயின காலமும் இல்லாது
உன்ன வாய் ஆகி, வந்த நாள் உளதேல்,
  ‘தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம்‘,
என்ன வாய்ந்து, ‘இணையாச் சிறப்பு மெய் இறையோன்
  இன்று உளன்; அன்று இலன், என்னா,
மன் அவாய் என்றும் தான் உளன் ஆகி
  மாய்ந்த நாள் அனைத்தையும் கடந்தோன்.
159
   
 
2637எல்லையே, இடும் ஓர் காரணம் இறைவற்கு
  இல்லதால் எல்லையும் இல்லை.
குல்லையே நின்று, ஒவ்வோர் உறுப்பு எல்லை
  கொண்டன இல்லதேல், வடிவும்
இல்லையே. அவ்வாறு அளவு உளது அன்றி,
  இடர் இடும் உரு உடல் என்ன,
வல்லையே மிக்க ஓர் அளவு இலாற்கு, இல்லை
  வழங்கும் ஐம்பொறிக்கு உரி வடிவே.
160
   
 
2638“சீர் வளர் ஞானம் நீதி அன்பு ஊக்கம்
  திறன் தயை ஆனந்தம் மற்றை
ஏர் வளர் குன்றா நன்னர் உண்டாகி,
  எலாம் அனைத்து ஆகி ஒன்று ஆகி
நேர் வளர் பொலிவின் மிகை குறை பன்மை
  நீப்பன நிறைப்பன ஆகி,
பேர் வளர் இறைவற்கு உரு இதே. உரிய
  பிணைவு இல இயல்பு இதே அன்றோ.
161
   
 
2639“எப் பொருள் அனைத்தும் எவ் உலகு அனைத்தும்
  இடை விடா நிறைப் பட நின்றே,
அப் பொருள் தொறும் தான் குறுகு இலா முழு நின்று
  அப் பொருள் அழிவில் தான் அழியா
மெய்ப் பொருள் ஞானத்து அனைத்தையும் உணர்ந்து
  விளை திறன் நீதியால் நடவி,
மைப் பொருள் அடராச் சோதியாய், நிலையாய்,
  மன்னனாய் அனைத்துமாய் நின்றோன்.
162
   
 
2640“இரு வகை வழங்கும் காரணம் இன்றி,
  இயை வினை இன்றி, நாள் இன்றி,
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி,
  வரும் பொருள் என் அளவு இன்றி,
திரு வகை பொறித்த வீற்று வீற்று அனைத்தும்
  செய்து அளித்து அழிப்ப வல் ஒருவன்,
அரு வகை வயத்து ஓர் காரண முதலாய்,
  ஆதியாய், அந்தமாய், நின்றோன்.
163
   
இறைமையில் ஒன்று குறைந்தவன் கடவுள்ஆகான்
 
2641“சீரிய சவிய மிக்கன அமான
  சிறப்பன தூயன யாவும்
நீரிய முறையில் உளன் அவன் தேவன்,
  நீங்கில் ஒன்று அவன் அலன் ஆகி,
காரிய நலத்து அவ் இலக்கணம் ஆறும்
  கடவுள்வாய் உள என்பார். அவற்று ஒன்று
ஆரிய வளப்பின் தன் இடத்து இல்லான்
  ஆண்டகை அவன் அலன் அன்றோ.
164
   
 
2642“சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகிச்
  சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம்?
ஊர் எலாம் ஒருவன் ஆள் அரசு ஆய்,
  மற்று ஒருவர் கேட்டு ஒழுகுதல் அரசோ?
ஏர் எலாம் உள பல் தேவர் வேறு ஆக,
  இவற்கு உளது ஒன்று அவற்கு இலதாய்,
நீர் எலாம் இல ஒவ்வொருவற்கு ஒன்று இன்றி
  நீர்த்த ஓர் இறையும் இல்“ என்றான்.
165
   
முன்னோரின் குருட்டுக் கொள்கைக்கு அனைவரும் வருந்துதல்
 
2643ஒள் கை நீட்டி அல் ஒருவி வெஞ் சுடர் எழுந்து ஒளிர.
அள் கை நீட்டிய அம்புயம் அக் கதிர் அருந்தும்
கொள்கை, நீட்டிய கொழுங் கதிர் ஓதியைச் செவியாம்
விள் கை நீட்டினர் வேட்டு உளத்து அருந்துபு தெளிந்தார்.
166
   
 
2644“விண் செய் வெஞ் சுடர் விலக எண் இல சுடர்த் தீபம்
மண் செய் மாக்களே வளர்த்து என, காப்பியக் கவிகள்
பண் செய் பா அகப்படாத உயர் இறைமையை உணரா,
எண் செய் ஈறு இலா இறைவரை விகற்பித்தார்“ என்றார்.
167
   
 
2645“நதி தள்ளிக் கரை நாடிலாது அலையினோடு
  உறல் போல்,
மதி தள்ளிப் பலர் வாரியோடு இழிவு
  உற ஒழுகி,
கதி தள்ளிக் கெடுங் கடவுளர்
  இறைஞ்சினம். இன்னே,
பொதி தள்ளிக்குணப் பொருவு இலான்
  உணர்ந்தனம்“ என்றார்.
168
   
 
2646“இற்றை நாள் அளவு இரா இருள்
  இறாது, உலகு உதித்த
அற்றை நாள் உள ஆரணம்
  எங்கணும் பொழிந்த
கற்றை நாமும் நம் முந்தையர்
  காண்கிலாது என்னோ?
மற்றை நாதன் நீர் இதோ?“ என வசிட்டன்
  நொந்து உரைத்தான்.
169
   
சூசை குருட்டுக் கொள்கை பரவியதற்குக் காரணம்கூறல்
 
2647நனை வரும் பல நளினம் விள்ளா
  கதிர்க் குறையோ?
புனைவு அருங் குணம் முழுது உளான்;
  பொருவு இலான், பொலிந்த
நினைவு அருந் திற நிமலன்‘ என்று
  அறைதிரே; அறைந்தும்,
சினை வரும் பலர்ச் சேர்த்தினீர்“ என
  வளன் சொன்னான்.
170
   
 
2648“வினை செய் பாவம்உள் விளைத்த நள்
  இருட் புகை மொய்ப்ப,
புனை செய் ஆசையின் பொறி தளர்ந்து
  அறிவு எலாம் மயங்க,
சுனை செய் பாசியில் தொகு நிலை
  இல மனம் தளம்ப
முனை செய் பேய் உறீஇ, முழுவதும்
  மருட்டினது“ என்றான்.
171
   
 
2649“வெறியின் சூழ்ந்த பல் விழைவு அதே கொடிது என, தாழ்ந்த
தறியின் சூழ்ந்து உழி தடம் உணர் ஒடுங்கு என, நசை தாழ்
பொறியின் சூழ்ந்து உளம் பொங்கிய துயர் உறீஇ கற்ற
நெறியின் சூழ்ந்த நல் நிலை உறும் பால் அரிது“ என்றான்.
172
   
 
2650“சுனைய நீகமே துளி மது உணாது என, முன்னோர்
நனைய தாமரை நவிழ்ந்த வாய் நல்கிய தீம் தேன்
அனைய ஓதிய அரும் பொருள் கை கொளா, பொய்யே
புனைய ஆயின புரை வளர் வெளிறு இதே“ என்றான்.
173
   
 
2651“நாதன் மிக்கு உரி நலமும் நல் மறையும் ஈங்கு உணர்வது
ஆதல் மிக்கு உற, அவா இருள் உளம் புகா வேண்டும்
காதல் மிக்க உழி கற்றவும் கைகொடா“ என்ன
ஓதல் மிக்க உழி, உணர்வு மிக்கு அனைவரும் தெளிந்தார்.
174
   
மாலைவேளை - அனைவரும்பிரிதல்
 
2652சோலை வாய்ப் பறை துவைத்த புள்
  களிப்பு எழீஇச்சுடர் போய்
மாலை வாய் இருள் விம்மி, வான்
  மீன் பரப்பு அரும்பும்
வேலை வாய், “பினர் வெஃகு உரை
  விளைக“ எனப் பிரிந்து,
காலை வாய் ஒளிக் கருத்து எழீஇ
  அனைவரும் போனார்.
175