தொடக்கம் |
வேதக் கெழுமைப் படலம்
|
|
|
| | 2872 | கோது இலார் தனக்கு வேற்று என்று கூட்டிலான், தீது உளார் தனக்கு எதிர் என்று சேர்க்கிலான், ஏதினால் இணை இலான், எதிர்ந்த, யாரையும் பேது இலா மறத்தொடு பகைக்கும் பெற்றியான்.
| 62 |
|
|
|
|
|
|
சினக்கரன் எருசலெம் மீது படையெடுதல் | | 2873 | அத் திறத்து ஆயினான் அரசர் யாரையும் மொய்த் திறத்து அடக்குபு, முதிர்ந்த வேத நூல் மெய்த் திறத்து யூதர் சீர் விளைந்த நாட்டு உறீஇப் பொய்த் திறத்து அருஞ் செயம் உணர்ந்து போயினான்.
| 63 |
|
|
|
|
|
|
| | 2874 | வேல் கடல் பரிக் கடல் வேழம் தேரொடு நால் கடல் ஒருப்பட, நடுங்க நால் திசை, நீல் கடல் எதிர்த்து என நினைப்பின் எய்தினான், நூல் கடல் வேந்து உறை நகரை நோக்கினான்.
| 64 |
|
|
|
|
|
|
தூது அனுப்புதல் | | 2875 | கார் விளை இடி மொழிக் கதத்தில், யூதர்தம் சீர் விளை மறை நலம் செகுத்து வந்து, தன் நீர் விளை மரை அடி பணிதல் நேர்கு இலால், போர் விளை சுடு மொழித் தூது போக்கினான்.
| 65 |
|
|
|
|
|
|
எருசிலெம் மன்ன்னும் தூதினுப் | | 2876 | கோன் நலமும் குல நலமும் குலத்து உரிய தொல் சுருதி நூல் நலமும் அவர் தொழுத நுனித்த ஒரு நாயகன் தன் வான் நலமும் ஒன்று எண்ணா, வரைவு அறும் தன் கடல் தானை வேல் நலம் ஒன்று ஊன்றிய சொல் வெடித்தான,் தூது உரைகொண்டான்.
| 66 |
|
|
|
|
|
|
| | 2877 | தீய் முகத்துப் பொங்கிய பால் தெள் நீர் இட்டு ஆற்றுவர் போல், வீய் முகத்துச் சுடுஞ் சொல்லான் விளைத்திட்ட வெம் வெகுளி, காய் முகத்துக் கோன், உணர்ந்த கருணையின் நீர் கொண்டு ஆற்றி, ஆய் முகத்துத் தேறி, அயிர்ப்பு அற, ஈர உரை வலித்தான்.
| 67 |
|
|
|
|
|
|
| | 2878 | உன் அல்லால் இவ் உரை செய்து உய்வார் ஆர்? உன் அரசன், என் அல்லால், என் இறைவன் இகன்றன பின், என் இறைவன் தன் அல்லால் விடை இங்கண் சாற்றுவர் ஆர்? சடுதிப் போய், வில் நல்லாய்! இம் மொழியை விளம்பு என்றான் மறைக் கோமான்.
| 68 |
|
|
|
|
|
|
| | 2879 | பார் இறைஞ்சும் தேவர்கள், எம் படைத் முகத்து் துஞ்சினரோ? நீர் இறைஞ்சும் தேவன் வலி மிக்கது கொல்? நெடிது எங்கும் போர் இறைஞ்சும் வேல் வேந்தன் புகைந்து உகுத்த புண்கண் உறா, கார் இறைஞ்சும் உன் நாட்டைக் காமின் என்றான் கடுஞ் சினத்தான்.
| 69 |
|
|
|
|
|
|
| | 2880 | துஞ்சினரோ மற்று எவரும் தொழும் தேவர், நும் படை முன் அஞ்சினரோ, அறிகிலன் நான்; என் இறையோன் வலி குன்றா விஞ்சினனோ, கண்டுணர்க; வினை வெம் போர் வேண்டினும், நான் அஞ்சினனோ? அத் திறத்து இன்று அமர்க என்றான் அற நீரான்.
| 70 |
|
|
|
|
|
|
| | 2881 | அருள் புரிந்த தூது உரைத்தேன்; ஆர்ந்த மணி முடி நல்லோய்! மருள் புரிந்த மனத்து எண்ணா, மன்னன் அருள் மறுத்தாயே! வெருள் புரிந்த வெஞ் சினப் போர் வினை நின்பால் என்று இறைஞ்சி இருள் புரிந்த இரவில் சென்று, இவை இறைவற்கு இயம்புகின்றான்.
| 71 |
|
|
|
|
|
|
| | 2882 | சீர் மீது ஆடிய செருக்கின் தெளியாக் கோன,் இவை கேட்டு, போர் மீது ஆடிய சேனைப் பொலிவு எண்ணா மறுத்தானோ? கார் மீது ஆடிய கொடி நீள் மாட நகர் காடு ஆக்கி பார் மீது ஆடிய வெருவே படும் நாளை எனத் துயின்றான்.
| 72 |
|
|
|
|
|
|
பாசறையில் சினக்கரன் படைகள் மாய்தல் | | 2883 | குன்று உச்சிச் சுடர்ப் பழியாக் கொளுத்திய புன் விளக்கு அன்றோ, வென்று உச்சி வான் ஆளும் வேந்தன் எதிர், பூ உலகில் நின்று உச்சி நிறுவு அரசர் நினைத்த பகை ஆம் காணாய்.; அன்று உச்சி முடி கவிழ அவற்கு ஆங்கு ஆயவை கேண்மோ.
| 73 |
|
|
|
|
|
|
| | 2884 | நேர் அறு நூல் தெளிவு அறிவின் நீதி வலோன் பகைத்து, இரவில் பார் அறுநூங்கு இரதம், உகள்பரி, கரி, வாள், வில், வேலக், என்று ஆர் அறு நூங்கு அடல் தானை அற்று அறக், கண் இமையா முன் ஓர் அறுநூறு உறழ் முந்நூறு உடை ஐயாயிரர் மாய்ந்தார்.
| 74 |
|
|
|
|
|
|
| | 2885 | பான் இறைவன் செக்கர் வான் பந்தல் கீழ் விளக்கு ஏந்த ஈன் இறைவன் அறு தானை இற்று, அழிந்த நிலை கண்டான் வான் இறைவன் திறம் கண்டான் வாழ்க்கை அறநகை கண்டான் தான் இறைவன் அலன் என்னத்தளர்ந்து அஞ்சிஓடினன் ஆல்
| 75 |
|
|
|
|
|
|
| | 2886 | நெடிது அழுங்கிப் பெருங் கள்வன் நீதி திறத்து இறந்து என்னக, கொடிது அழுங்கி எஞ்ச அன்று அக் கொலை கர்ணவிளியாக் கோன், கடிது அழுங்கி ஓட, எதிர் கடுகி, நகை உய்த்தாய்! என்று, இடி தழுங்கி வீழ்ந்து அனைய இரு மைந்தர் கரத்து இறந்தான்.
| 76 |
|
|
|
|
|
|
மன்ன்ன் கட்டளை | | 2887 | மஞ்சு இவர் குன்றின் தெள் நீர் வழங்கும் அந் நாட்டில் பின் நாள் நஞ்சு இவர் சின்னத்தின் காய்ந்த நபூக்கன் என்ிற அரசன், செங்கோல் நெஞ்சு இவர் செருக்கின் கோட, நீண்ட நாட்டு எங்கும், யூதர் விஞ்சு இவர் இறைவன் தாழ்தல், வினை மிக, விலக்கினானே,
| 77 |
|
|
|
|
|
|
| | 2888 | கொன் வளர் தருக்கில் பொங்கும் குணத்து அவன், பினர், தன் சாயால் பொன் வளர் உருவம் ஆக்கி, பூண் வளர் சிறப்பின் மண்ணி, பின் வளர் இழிவு எண்ணாத பேதமைத் திறத்து, அது ஒன்றை, மன் வளர் தேவன் ஆக வணங்க என்று ஏவினானே.
| 78 |
|
|
|
|
|
|
சூளைத் தீயில் வேகாத இளைஞர் | | 2889 | சீர் தங்கும் வயத்து ஒன்று ஆம் எம் தேவனை அன்றி, மற்ற ஏர் தங்கும் உருவத் தேவர் இறைஞ்சு இலேம் என்ன மூவர் கார் தங்கும் இடியின் காய்ந்தோன், கடுகி, அவ் யூதர் தம்மைப் பீர் தங்கும் உருத் தீச் சூளை பெய்மின் ஈண்டு என்றான் மாதோ.
| 79 |
|
|
|
|
|
|
| | 2890 | வம்மிய புகையின் சூளை, வாய் அங்காந்து எரிந்த செந் தீத் தும்மி, அவ் ஏவல் செய்தோர் தொகு உயிர் நக்கிக் கோறி, பொம்மிய உவப்பின் மூவர் புணர்ந்த கட்டு அன்றி, வேகா, பம்மிய பைம் பூஞ் சோலைப் பதி என அங்கண் வாழ்ந்தார்.
| 80 |
|
|
|
|
|
|
| | 2891 | அந் நிலை கேட்ட மன்னன் அதிசயித்து அணுகி நோக்க, வெந் நிலைச் சூளை நால்வா,் மெலிவு அற உவப்பக் கண்டே, இந்நிலை வியப்பில் பொங்கி, ஈண்டு இவண் வம்மின்! என்ன பைந் நிலை மலரின் மூவர் பனி முகத்து எய்தி நின்றார்.
| 81 |
|
|
|
|
|
|
நபூக்கன் திகைப்பும் கடைசிக் காலமும் | | 2892 | நால்வரும் கண்டேன், மற்று ஓர் நவியன் எங்கு? என்ன, அன்னார் மேல் வரும் திறத்து, எம் தேவன் விட்ட விண்ணவன் தான் என்றார்; போல்வரும் இன்றி, யூதர் போற்றிய கடவுள் மாண்பும் நூல் வரு மறையின் சால்பும் நோக்கினன், மருளும் நீக்கான்.
| 82 |
|
|
|
|
|
|
| | 2893 | தன் திறத்து ஊக்கித் தேவன் தான் என உணர்ந்த பாலால், பின் திறத்து, எவரும் அஞ்சப் பெருஞ் சினத்து அன்ன தேவன் மன் திறத்து உயிரே மாறா மா உருக் கொளீஇத், தள்ளுண்டு, கொன் திறத்து எஞ்சிக், காவில் குனிந்து, புல்மேய்ந்து நின்றான்
| 83 |
|
|
|
|
|
|
| | 2894 | ஏழ் வரும் வருடத்து இவ்வாறு இழிபட, விலங்கின் சாயல் போழ் வரு நெஞ்சின் நோகப் புணர் அறிவு எஞ்சான், தன்னைத் தாழ்வு அரும் உளத்து, அந் நாதன் தாழ்ந்த பின், உரித் தன் மெய்யும் கேழ் வரு முடியும் பெற்றுக் கெழும் விளக்கு எவர்க்கும் ஆனான்.
| 84 |
|
|
|
|
|
|
யூதர்கோயிலிற் கொள்ளைய் எல்லியோதுரன் கதி | | 2895 | மீட்டு, அன்னார் இறைஞ்சும் கோயில், மிக்கு அருந் திரு உண்டு என்னக் கேட்டு, அந் நாட்டு அரசன் ஏவ, எல்லியோதுரன் போய், கேழ்த்த நாட்டு, அன்னார் வெருவி நைய நண்ணி, எண் இல கொல் வேங்கைக் கூட்டு அன்னார் அபயர் சூழக் கோயிலை இரவின் புக்கான்.
| 85 |
|
|
|
|
|
|
| | 2896 | புக்கன அளவில், வானில் பொன் பரத்து ஒருவன் ஏறு மிக்கன சினக் கொக்கு, அன்னான் வியன்ற மார்பு உதைத்து வீழ்த்த, தொக்கன எவரும் ஓடச், சூழ் இரு வானோர் தோன்றி, நக்கன கதத்து, அன்னானை நண்ணி, மத்திகையால் பெய்தார்.
| 86 |
|
|
|
|
|
|
| | 2897 | ஈறு உயிர் ஆக நிற்ப இனைந்து, இருங் குரவன் வேண்டி, வீறு உயிர் ஆகத் தேற்றி, விண்ணவர் இருவர், இவ் வாய்த் தேறு உயிர் இறைவன் வாழ்த்தத் திசை எலாம் உணர்த்தி என்ன ஊறு உயிர் உய்ந்து வாழ்நாள் உள் அளவும் ஏத்தினானே.
| 87 |
|
|
|
|
|
|
| | 2898 | இத் திறத்து உயர் அவ் வேதம் இகன்றன அரசர் ஈராறு, அத் திறத்து இழி பட்டு எஞ்ச அறிது நான்; அன்ன தேவன் மைத் திறத்து இகன்ற யாரும் வையகத்து உய்யார், காளாய்! பொய்த் திறத்து உணர்ந்த தீமை போக்குதி என்றான் மூத்தோன்.
| 88 |
|
|
|
|
|
|
நாவகன் அவன் தந்தையும் வாக்குவாதம் | | 2899 | பால் நிமிர் கனி அருட் பவளக் குன்று இழி தேன் நிமிர் மொழிப் புனல் செறிந்த வாரியுள், கோல் நிமிர் வில்லினன் குளித்து, இன்பு உண்டு அலால், நீல் நிமிர் இருள் உளம் நீங்கு இல் ஆயதே.
| 89 |
|
|
|
|
|
|
| | 2900 | திங்கள் நீர்க் கதிர் அணி தியங்கு மார்பினோன், தம் கண் நீர்க் கடவுளும் மறையும் தாம் உணர்ந்து, அங்கண் நீர்த்து ஒழுக, மற்று அருளிக் கேட்டி ஒன்று இங்கண் நீர்த்த, அடிகளே என்று செப்பினான்.
| 90 |
|
|
|
|
|
|
| | 2901 | உய் வகை இன்றி வந்து, உலைந்து, எம் நாட்டு உரி ஐ வகை முறை அற அணுகி ஓர் முனி மை வகை மொழியொடு மருட்டி, நாடு எலாம் பொய் வகை அழிப்பது பொறுப்பவோ? என்றான்.
| 91 |
|
|
|
|
|
|
| | 2902 | தாதை, நெட்டு உயிர்ப்பினோடு இரங்கிச் சாற்றினான்: மேதை கெட்டு, இருண்டு இரு விழி கெட்டு, எள்ளிய பேதை, மட்டு உண்டு எனப் பிதற்றிப் பில்கிய காதை உட் கொண்டு, நீ கலங்கல் நீர்மையோ?
| 92 |
|
|
|
|
|
|
| | 2903 | கால் திறத்து ஆடிய கலைப் பதாகை போல் மால் திறத்து உரைப்பவர் வழுது கேட்கிலாய்.; வேல் திறத்து அங்கண் நான் இருந்த வேலையில், நூல் திறத்து அவர் முறை நோக்கி வாழ்த்தினேன்.
| 93 |
|
|
|
|
|
|
| | 2904 | தம் முறை எவர்க்கும் நீர்த் தகுதியாய்ப் பொது மெய்ம் முறைச் சுருதியும், வினைகள் தீர் அறத்து அம் முறை அனைத்தும் நன்று ஆகக் காண்டியேல், வெம் முறை வெருளொடு வெறுத்தல் வேண்டுமோ?
| 94 |
|
|
|
|
|
|
| | 2905 | பூ நக, புள் நக, புனல் செய் பொய்கைகண் தே நக, மலர்ந்த கா- சென்று, அன்னான் சொலும் பா நக உணர்வு கேட்டு, அறத்தின் பாலதோ கூ நக இழிவு அதோ கூறு நீ என்றான்.
| 95 |
|
|
|
|
|
|
நாவகன் சூசையிடம் வருதல் | | 2906 | அய்ய! நன்று இதுஎன அடியைத் தாழ்ந்து போய், உய்ய நன்று உகும் மறை உணர்வு அவா இலா, வெய்ய நெஞ்சு உணர்ந்த தீ வினை முடித்திட, மைய நெஞ்சு உணர்வினோன் வளனை அண்டினான்.
| 96 |
|
|
|
|
|
|
தீமையை ஒழிக்குமாறு சூசை பொதுவல் கூறுதல் | | 2907 | தீய உள் ஒளித்து, இனியவை முகத்திடைத் தீட்டிப் போய், அலர்ந்த பூம் பொழிலிடத்து அவன் வரக் கண்டு, தூய நல் தவ விளக்கு எறிந்து இருள் இல சூசை, ஆய யாவையும் ஆசு அறக் கண்டு என, அறிந்தான்.
| 97 |
|
|
|
|
|
|
| | 2908 | வரை கிடந்து இன மணி கொழித்து ஒழுகிய நதி சூழ் கரை கிடந்த மா வழை மகிள் சண்பகம் கமழ் கா நிரை கிடந்தவர்க்கு உரைத்து என, நாவகன் நெஞ்சில் புரை கிடந்தவை பற்றி, மாமுனி இவை புகன்றான்.
| 98 |
|
|
|
|
|
|
| | 2909 | உயிர் ஒன்றே உடையீர் என, உயிர் உணும் கூற்றாம் செயிர் ஒன்றே, முழுதும் ஒருவுமின்; வித்திய செயிரே துயர் ஒன்றே விளைத்து அடும் எனச் சூழ்ந்துளி, துகள் தன் பெயர் ஒன்றே பெறல் அஞ்சுவர்-பெருந்தகை நீரார்.
| 99 |
|
|
|
|
|
|
| | 2910 | அண்டம் மீ வரை நெற்றியில் பனி இை;. அறமே மண்ட வாழ்பவர் மருள ஓர் கேடு இலை; அன்னார் உண்ட நஞ்சும், அவ் உயிர்க்கு அமுது ஆகி, மற்று அமிர்தம் கொண்ட தீயவர்க்கு, அஃது உயிர் கொலும் விடம் ஆம் ஆல்.
| 100 |
|
|
|
|
|
|
| | 2911 | பொன்றும் யாவுமே; புரை செயும் பகை ஒன்றே பொன்றாச், சென்று சென்று, அடி சென்ற தன் நிழல் என, நீங்காது; இன்று தீமையை இவன் பிறர்க்கு எண்ணிய தன்மைத்து, அன்று தீமையே அவன் தனக்கு அமைவது காண்பான்.
| 101 |
|
|
|
|
|
|
| | 2912 | தீய காஞ்சிரம் நட்ட பின் தீம் கனி கொயவோ? தீய வித்தினர், தீயவை விளைவது காண்பார்; தீய செய்தனர் தீயவர் என்பவர்; மருளாத் தீய பட்டனர் தேவர் ஒத்தார் எனப் படுவார்.
| 102 |
|
|
|
|
|
|
| | 2913 | அடும் செந் தீயினும் அட்ட அகில் மணம் இனிது அன்றோ? சுடும் செந் தீயினும் சுட்டு ஒளிர்ட நிதி இனிது அன்றோ? கொடுஞ் செந் தீ எனக் கொதித்து இன்னா ஆக்கலின், இனிது ஆம் படும் செந் தீ எனப் பாசறை படுவதே -என்றான்.
| 103 |
|
|
|
|
|
|
நாவகன் சினவுரை | | 2914 | இனைய சாற்றலும், எரி நெஞ்சான் விய்ப்பு உற, நினைத்தது அனைய கேட்டலும் அயர்ந்த பின், தீயவா,் தீய புனைய ஆக்கலே புண்ணியம்! என்று உளம் புழுங்கி, முனைய ஓதினான;. முனிவனும் மீண்டு இவை மொழிந்தான்:
| 104 |
|
|
|
|
|
|
சூசையின் அமுத மொழி | | 2915 | மெய் நினைந்து, பொய் விளைத்து எழுதிய படம் போல, மை வளர்ந்து உள வஞ்சகர் மெய் ஒன்றை ஊன்றிப் பொய் விளைந்த சொல் பொருந்தி, உள் கொள்வதும் வேண்டாம்; மொய் மலிந்துளி, முழுது ஒன்னார் இறைஞ்சிய வேலோய்!
| 105 |
|
|
|
|
|
|
| | 2916 | நிலத்தின் தன்மையால் நீர் திரிந்து அனைய, பற்று உளம் தன் புலத்தின் தன்மையால் புறத்து அவை தோன்றலால், அன்பின் நலத்தின் தன்மையால் தீயவும் நல்ல ஆம்; பகை கொள் சலத்தின் தன்மையால் நல்லவும் தீய ஆம் சகத்தே.
| 106 |
|
|
|
|
|
|
| | 2917 | கண் புறத்து எழில் காட்டிய காஞ்சிரம் இனிதோ? முள் புறத்தில் உள் முதிர் சுவைச் சுளைப் பலா இனிதோ? விண் புறத்து எரி மின்னொளி விரும்பிலன் ஆகி, உள் புறத்து, நல்லவையும்-அல்லவையும் என்று உணர்வாய்.
| 107 |
|
|
|
|
|
|
| | 2918 | செய்த தீமையே, செய்தவர் மேல் வரும் தன்மை, பொய் தகாது எனப் பொன் மணி வீங்கிய தோளாய்! எய்த ஓர்ந்தவை இழுக்கு என விடுதி என்று உரைத்தான்; மை தகா மறை வளர் கொழுகொம்பு அனை நீரான்.
| 108 |
|
|
|
|
|
|
நாவகன் சூசையின் கன்னத்தில் அறைதல் | | 2919 | விண்டு என வீங்கு தோளான் வினா ஒளித்து உணர்ந்த யாவும் கண்டு என முனிவன் சொல்ல, கனன்று உளம் புழுங்க, செந் தீ உண்டு என வியப்பின் கேட்ப, உடைந்து என நாணி, பின் உள் கிண்டு என எழுந்த சீற்றம் கிளைத்து, எரி இடியின் பாய்ந்தான்,
| 109 |
|
|
|
|
|
|
| | 2920 | பண் ஒன்று பாடல் ஒன்றப், பகர்வு ஒன்றும் செய்கை, நன்றே; புண் ஒன்று படல் நன்று என்றாய்., புண் படுக என்ன எள்ளி கண் ஒன்று கதத்தின் சீறிக் கன்னம் மேல் புடைத்தான் அன்னான். விண் ஒன்று மதியின் சூசை மிக மகிழ்ந்து இலங்கி நின்றான்.
| 110 |
|
|
|
|
|
|
சூசையின் அருட்பார்வையால் மனந்திருப்பிய நாவகன் சற்று | | 2921 | தனிக் கதிர் உணர்வின் மிக்கோன் தயை உறீஇ மகிழ நோக்கி, பனிக் கதிர்ப் பகையாம் கஞ்சம் படுத்திய முகம் செய் வில்லால், நுனிக் கதிர் சுரக்கும் வேலோன் நொந்து, உளம் தெளியத் தேறித் துனிக் கதிர் ஒழிய வீழ்ந்து, துணை அடி தொழுது சொன்னான்.
| 111 |
|
|
|
|
|
|
| | 2922 | துய்ப் பட இனிய சொல்லால் சுட்டிய உணர்வில் தேற்றேன்; பொய்ப்பட உரைக்கின்றோரும் பொருந்து நூல் எளிய சொல்வார்; மைப்பட இவண் நான் செய்த வடுவினைப் பொறுத்த சால்பே மெய்ப்பட உரைத்த வேத விதி எனத் தெளியக் கண்டேன்.
| 112 |
|
|
|
|
|
|
| | 2923 | வில் பொறா வாவல் எல்லை விழுங்குவது உணர்ந்ததே போல், சொல் பொறா வெளிற்றின் சொன்ன பொய் உணர்ந்து, இமிர் இவ் வேதத்து எல் பொறாப் பேதை நானும் இகன்று அதை ஒழித்தல் ஓர்ந்தேன்; அல் பொறாது இலங்கும் நின்தன் அருளினால் உணர்வு உற்றேனே.
| 113 |
|
|
|
|
|
|
| | 2924 | நாவலின் நிழல் செய் இன்ன நாடு அலால் அறியா, வேற்றுக் காவலின் நாட்டில் உள்ள கலை நலம் உளத்தில் எள்ளி, பூவலில் நின்ற மீன் போல் பொலி உணர்வு இன்றி, பாவக் கூவலில் நின்ற என்னைக் குணுங்கு இனம் மருட்டிற்று அன்றோ.
| 114 |
|
|
|
|
|
|
| | 2925 | கரை கொன்ற கடலின் பொங்கிக் கதத்து உண்மை உணராப் பாலால், நிரை கொன்ற மனத்தில் ஓர்ந்த நினைவு எலாம், நிரையின் கண்டு, புரை கொன்ற தவத்தின் மிக்கோய்! புகன்ற போது உளத்தின் நாணில், வரை கொன்ற திண்ண மார்பில,் வடு அற உருகாது ஆனேன்.
| 115 |
|
|
|
|
|
|
| | 2926 | உணங்கிய மரத்தில,் செந் தீ உடன்று என, கொண்ட நாணத்து, அணங்கிய நெஞ்சில் சீற்றம் அழன்று, உனைப் புடைத்தக்கால், நீ வணங்கிய தன்மை காட்டும் மாட்சி கண்டு, ஒருங்கு பாவத்து இணங்கிய முறைக் கல்லூரி என் வழி ஒழியத் தேர்ந்தேன்.
| 116 |
|
|
|
|
|
|
| | 2927 | காமமே அன்றி நல் நூற் கல்வி ஒன்று அறியா, பூண்செய் தாமமே அன்றி வாய்ந்த தகவு இல பாவி நானே, வீமமே இன்றி உற்ற வினை, அறுத்து அளித்தி.; மற்று உன் நாமமே அன்றி நானும் நயப்ப ஒன்று உரைக்கல் தேற்றேன்.
| 117 |
|
|
|
|
|
|
முனிவர் நாகனைத் தழுவிதலும் மக்கள் மகிழ்ச்சியும் | | 2928 | என்று இவை உணர்வின் சொல்லோடு எரி வினை அவிப்பக் கண்ணீர் குன்று இயை அருவி போலக் கூர்ந்து எழுந்து ஒழுகிற்று ஆகி, சென்று இயை அன்பும் மார்பும் சென்று ஒன்றத் தழுவிச் சூசை, அன்று இயை எவரும் தம்முள் அதிசயித்து, உவப்பின் மிக்கார்.
| 118 |
|
|
|
|
|
|
| | 2929 | தெளி வளர் அழல் இட்டு ஊதிச் செற்ற இரும்பு, இரதப் பாலால் ஒளி வளர் பசும் பொன் ஆதல் உண்டு என உரையின் கேட்டோம் இளி வளர் கொடிய நீரான், இன்று நற் பொறையின் பாலால் களி வளர் தருமன் ஆதல் கண்டு, அது தெளிந்தோம் என்றார்.
| 119 |
|
|
|
|
|
|
| | 2930 | தொல் வினை என்னும் சூலால் தொடர் வினை தளிர்த்து விம்மும் புல் வினை புல்லா, நோற்ற புலமையோன் ஒருவன் செய்த வல் வினை, உலகம் யாவும் வளம் பெறப் பயத்தது அன்றோ? நல் வினை விளைவு காண்மின் நயப்ப! என்று எவரும் வாழ்ந்தார்.
| 120 |
|
|
|
|
|
|
சூசை நாவகனுக்குக் கூறிய அறிவுரை | | 2931 | குடம் புரை இரு புயம் குழைத்த சாந்தினை நடம் புரை அசை குழை நக்கி, வில் செய, படம் புரை அருள் எழில் பரப்பினாற்கு, இவை வடம் புரை சுருதி சூழ் வளன், விளம்பினான்:
| 121 |
|
|
|
|
|
|
| | 2932 | நாடலே அருந் தவ நலத்தைக் கண்டு, நீ நீடலே புகழ்வது நீர்மையோ? இனிது ஆடலே முடவற்கும் இனியது ஆம் அன்றோ? கோடலே குணம் எனக் குறிப்பின் தேறுவாய்.
| 122 |
|
|
|
|
|
|
| | 2933 | மின் நிழல் என மிளிர்ந்து ஒழி வெறுக்கை செய் கொன் நிழல் வெறுத்து, அறம் கொண்டு நின்றியேல், நின் நிழல் என, நினை இறைவன் நீங்கு இலாது இன் நிழல் இயற்றி, நீ இனிதில் வாழ்க என்றான்.
| 123 |
|
|
|
|
|
|
| | 2934 | படைப்பதற்கு அரிய நல் பரிவின், தாதையும், கிடைப்பதற்கு அரியது ஓர் பொருள் கிடைத்து எனா, உடைப்பதற்கு அரிய இன்பு உளத்தில் உண்டு, உளத்து அடைப்பதற்கு அரிய அன்பு அருளைக் காட்டினான்.
| 124 |
|
|
|
|
|
|
நல்லோர் நாவகனைப் புகழ்தல் | | 2935 | கழீஇயின மணி எனக் கசடு அற்று, ஆர் அருள் தழீஇயின நாவகன் தயங்கி, அந் நகர்க்கு எழீஇயின திரு விளக்கு என நின்று, ஏத்தினார் குழீஇயின நலோர் எலாம் குழாம் குழாம் கொடே.
| 125 |
|
|
|
|
|
|
வாமனும் நாவகனும் | | 2936 | வேல் முகத்து ஒத்த நல் வீர நாவகன், நூல் முகத்து ஒத்து என நோக்கி, வாமனும் தேன் முகத்து அலர்ந்த நெஞ்சு உவப்பச் சேர்ந்து, தாம் வான் முகத்து இரு சுடர் மருளச் தோன்றினார்.
| 126 |
|
|
|
|
|
|
| | 2937 | கேத காரணத்து இவை சுரமி கேட்டலின், நாத கார் இடித்தென நைந்து அரற்றினாள்: நீத காதலின் மிகு நீர நாவகா,! ஆ, தகாது இது! என அகடு அதுக்கினாள்.
| 127 |
|
|
|
|
|
|
| | 2938 | தீய்ந்த ஓர் கறல் எனக் கருகி, சிந்தை கெட்டு, ஆய்ந்த ஓர் நிலைப் பயன் இதோ!என்று ஆர்த்து, உணாக் காய்ந்த ஓர் சுவா எனத் தனைக் கடித்து, அழல் தோய்ந்த ஓர் அரவு எனச் சுருண்டு விம்மினாள்,
| 128 |
|
|
|
|
|
|
| | 2939 | தே இழுக்கு உற, இவன் சென்று யாவரும், பூ இழுக்கு உற உளம் பொறுப்பதோ! எனா, நாவு இழுத்து இறந்து, எரி நரகில், தான் தொழும், ஆவி இழுக்கு இடும் குணுங்கு உவப்ப மூழ்கினாள்.
| 129 |
|
|
|
|
|
|
| | 2940 | தீயவை உணர்ந்தனள், தீய உண்டு, எரி போய், அவை புகழ்ந்த நூல் புதைப்ப, உள்ளிய வாய் அவை வளர் மறை வழங்கிற்று ஆயதே; தூயவை தூய வாய்த் துளங்கும் பீடையால்.
| 130 |
|
|
|
|
|