தொகை   | "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட  |   |    திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன்"  |     - திருத்தொண்டர் தொகை  வகை   | நற்றவ; னல்லூர்ச் சிவன்றிருப் பாதந்தன் சென்னிவைக்கப்  |   | பெற்றவன்; மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றா  |   | ளுற்றவ; னுற்ற விடமடை யாரிட வொள்ளமுதாத்  |   | துற்றவ; னாமூரி னாவுந் காசெனுக் தூமணியே.  |  
  24   | மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியாற்  |   | றிணியன நீள்கத வந்திறப் பித்தன; தெண்கடலிற்  |   | பிணியன கன்மிதப் பித்தன; சைவப் பெருநெறிக்கே  |   | யணியன நாவுக் கரையர் பிரான்ற னருந்தமிழே.  |     25   - திருத்தொண்டர் திருவந்தாதி  விரி  1266.  | திருநாவுக் கரசு, வளர் திருத்தொண்டி னெறிவாழ  |   | வருஞானத் தவமுனிவர் வாகீசர், வாய்மைதிகழ்  |   | பெரு நாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகி   |   | லொருநாவுக் குரைசெய்ய வொண்ணாமை யுணராதேன்.  |     1 திருநின்ற சருக்கம் :- இது, நிறுத்த முறையானே, ஐந்தாவதாகத், திருத்தொண்டத்தொகையினுள் "திருநின்ற"என்று தொடங்கும் நான்காவது திருப்பாசுரத்திலே துதிக்கப்பட்ட அடியார்களின் சரிதங்களைக் கூறும் பகுதி. அந்த அடியவர்களாவார், திருநாவுக்கரையர், குலச்சிறையார், பெருமிழலைக் குறும்பர், பேயரர் (காரைக்காலம்மையார்), அப்பூதியார், நீலநக்கனார், நமிநந்தியார் என்ற எழுவர். புராணம் :- இஃது அவ்வெழுவருள் திருநாவுக்கரையர் என்ற திருப்பெயருடைய நாயனாரது சரித வரலாறும் பண்புங் கூறும் பகுதி. மேல் வகுத்த முறையே, இனித், திருநின்ற சருக்கத்தில் முதலாவதாகிய திருநாவுக்கரசு நாயனாரது சரிதங் கூறத் தொடங்குகின்றார். தொகை :- நீங்காது நிலைத்த திருவாகிய செம்பொருளையே செவ்விய பற்றுக் கோடாகக் கொண்டருளிய திருநாவுக்கரசு நாயனாருடைய அடியார்களுக்கும் நான் அடியேனாவேன் என்பதாம். திரு - முத்திச்செல்வம். இறைவனது திரு. "போகமுந் திருவும் புணர்ப்பானை" (நம்பிகள் - ஆரூர் - தக்கேசி). நின்ற திரு என மாற்றுக.  |