| "இளைய செய்கையிங் கநுசித மா" மென வெண்ணும் நினைவி னாலவர் தம்மைவிட் டகன்றிட நீப்பார், |
14 1842. | "மின்னெ டுஞ்சடைவிமலர்மேல் விழுந்தநூற் சிலம்பி தன்னை வேறொரு பரிசினாற் றவிர்ப்பது தவிர முன்னை ணைந்துவந் தூதிவாய் நீர்பட முயன்றாய்; உன்னை யானினித் துறந்தன னீங்"கென வுரைத்தார். |
15 1841. (இ-ள்.) மனைவியார்...கொள்ளார் - மனைவியார் செய்த அன்பினை மனத்துட் கொள்ளாதவராகி; புனையும் மார்பர் பூணுநூல் புனைகின்ற அழகிய மார்பினையுடைய திருநீலநக்கனார்; தம் பூசனை...நினைவினால் - தமது பூசனையினுள் இத்தகைய செய்கை இங்கு அநுசிதமாகும் என்று எண்ணும் நினைவு கொண்டதனால்; அவர்...நீப்பார் அம் மனைவியார் தம்மைவிட்டு நீங்கும்படி துறப்பாராகி, 44 1842. (இ-ள்.) வெளிப்படை. "மின்போன்று ஒளிவீசுகின்ற நீண்ட சடையினையுடைய விமலராகிய சிவபெருமானுடைய திருமேனியின் மேல்விழுந்த நூற் சிலம்பியை வேறு ஒருவகையினால் தவிர்க்காது, முன்வந் தணைந்து வாய்நீர்படும்படி முயன்றனை; நான் உன்னை இனி ஈங்குத் துறந்துவிட்டேன்" என்று உரைத்தனர். 45 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. 1841.(வி-ரை.) செய்த அன்பு - அன்பினாற் செய்த செயல். அன்பின் செயலை என்னாது செய்த அன்பினை என்றது, இச்செயலைத் தூண்டிய அன்பே கருதத்தக்கதன்றி, நாயனார் கொண்டதுபோலச் செயல்மட்டிற் காணத்தக்கதன்று என்று குறித்தற்கு. மனத்தினிற் கொள்ளுதல் - கருதி ஏற்றல். அமைத்துக்கொள்ளுதல்; பூசனைத் திறத்தில் - அநுசிதமாம் - தாம் செய்த பூசனையின் தூய்மையினைச் சிதைக்கும் தீய செய்கையால். அநு சிதம் ந - உசிதம் - உசிதமல்லாது; தகாத செயல். தகுதியன்று என்பதோடன்றி விலக்கத்தக்க தீமையும் பயப்பது என்றது குறிப்பு. அதர்மம் - என்புழிப்போல அ என்னும் நகரம் ஈண்டு மறுதலைப் பொருள்தந்து உசிதத்துக்கு மாறாகிய தீமை என்பது குறித்தது. தம்மைவிட்டு அவர் அகன்றிட - என்க. நீத்தல் - தமது மனைவியார் என்ற தொடர்பு அறத் துறந்துவிடல். நீப்பார் - நீப்பாராகி, எதிர்கால வினைமுற்றெச்சம். நீர்ப்பார் உரைத்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. 11 1842. (வி-ரை.) மீன்நெடுஞ்சடை மின் - மின் மின் னும்சடை சடை. மின்னல் போன்று விளங்கும். "மின்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணம் கீழ் சடை" (பொன்வ - அந்). விமலர் - மலமற்றவர் - இயல்பாகவே பாசங்களி னீங்கியவர். விமலராதலின் சிலம்பியைப் பதைப்பின்றி வேறுவகையாற்றவிர்க்கலாமென்பது குறிப்பு விமலராதலின் அன்பினால் வாய்நீர்பட. ஊதித் துமிதலால் அநுசிதப்படார் என்பதும் போதருதலின், அதனைத் தாமே மறந்து கூறினார் என்ற குறிப்பும்பட உரைத்த நயம் கருதுக. நூற்சிலம்பி - நூல் நூற்கும் இயல்புடைய சிலம்பி. வேறொரு பரிசு வாய்நீர்பட ஊதித் துமிதலன்றி வேறு செயல் வகை. |