மனையாக்குதலாலும், பின்னர் ஆளுடைய பிள்ளையார் அடியார் திருக்கூட்டத்துடன் எழுந்தருளும் பேறுபெற உள்ளமையாலும் காவல்பெற்ற தென்றதாம். கடி - கடிந்த என்று, மனைக்குரிய மனைவியாரைக் கடிந்து போந்த மனை என்ற குறிப்பும்தர நின்றது; மேலே அடைமொழியின்றி "மனையின்" (1847) என்பதும் காண்க. 16 1844. | அஞ்சு மள்ளமோ டவர்மருங் கணைவுற மாட்டார் நஞ்ச முண்டவர் கோயிலி னங்கையா ரிருந்தார்; செஞ்சொ னான்மறைத் திருநீல நக்கர்தா மிரவு பஞ்சின் மெல்லணைப் பள்ளியிற் பள்ளிகொள் கின்றார்; |
17 1845. | பள்ளி கொள்பொழு தயவந்திப் பரமர்தாங் கனவில் வெள்ள நீர்ச்சடை யோடுதம் மேனியைக் காட்டி, "உள்ளம் வைத்தெமை யூதிமுன் றுமிந்தபா லொழியக் கொள்ளு மிப்புறஞ் சிலம்பியின் கொப்பு"ளென் றருள, |
18 1846. | கண்ட வப்பெருங் கனவினை நனவெனக் கருதிக், கொண்ட வச்சமோ டஞ்சலி குவித்துடன் விழித்துத், தொண்ட னார்தொழு தாடினார்; பாடினார்; துதித்தார்; அண்ட நாயகர் கருணையே போற்றிநின் றழுதார்; |
19 1847. | போது போயிருள் புலர்ந்திடக் கோயிலுட் புகுந்தே, ஆதி நாயக ரயவந்தி யமர்ந்தவங் கணர்தம் பாத மூலங்கள் பணிந்துவீழ்ந் தெழுந்துமுன் பரவி மாத ராரையுங் கொண்டுதம் மனையின்மீண் டணைந்தார். |
20 1844. (இ-ள்.) நங்கையார் - அம்மையார்; அஞ்சும்...அணைவுற மாட்டார் - பயந்த வுள்ளத்தினோடும், அவர் பக்கத்தில் அணைய மாட்டாதவராய்; நஞ்சமுண்டவர் கோயிலில் இருந்தார் - விடமுண்ட பெருமானது கோயிலில் தங்கியிருந்தனர்; செஞ்சொல்...தாம் - செம்மையாகிய சொற்களையுடைய நான் மறைவல்ல திருநீலநக்கர்தாமே; இரவு...பள்ளிகொள்கின்றார் - அன்றிரவில் பஞ்சுபெய்த மெல்லணையில் துயில்கின்றாராகவே; 17 1845. (இ-ள்.) பள்ளிகொள் பொழுது - அவ்வாறு துயின்ற பொழுதில்; அயவந்திப்பரமர்...காட்டி - அயவந்தியில் எழுந்தருளிய சிவபெருமான் அவரது கனவில் எழுந்தருளிக் கங்கை நீர் ததும்பும் சடையுடனே தமது திருமேனியைக் காட்டி; உள்ளம்....கொப்புள்" என்று அருள - மனத்தில் அன்பு வைத்து எம்மை முன் ஊதித் துமிந்த பக்கம் ஒழிய மற்று இப்புறமெல்லாம் சிலம்பியின் கொப்புளங் கொள்ளும்; (காண்பாயாக)" என்று அருளிச் செய்ய, 18 1846. (இ-ள்.) கண்ட...கருதி - கண்ட அந்தப் பெருங்கனவை நனவெனவே கருதி; கொண்ட...விழித்து - பெற்ற பயத்துடனே அஞ்சலியாகத் தலைமேற் குவித்த கைகளுடனே விழித்து எழுந்து; தொண்டனார் - தொண்டராகிய திருநீலநக்கனார்; தொழுது ஆடினார்...அழுதார் - தொழுதுஆடினார்; பாடினர்; துதித்தனர்; அண்டநாயகராகிய சிவன் பெருங்கருணையினையே போற்றி நின்று அழுதனர்; 19 1847. (இ-ள்.) போது...புகுந்தே - இரவுப்பொழுது நீங்கி இருள்போய்ப் புலர்ந்திடத் திருக்கோயிலினுள் சென்றே; ஆதிநாயகர்...பரவி - ஆதிநாயகராய் அயவந்தியில் எழுந்தருளிய அங்கணருடைய பாதமூலங்களிற் பணிந்து கீழே |