1889. | "திங்கண்முடியார் பூசனைகண் முடித்துச்செய்யுங் கடன்முறையால் அங்கி தனைவேட் டமுதுசெய்து பள்ளிகொள்வீ"ரென,வவர்க்குத் "தங்கள் பெருமான் றிருமணலிக் கெழுச்சி சேவித் துடனண்ண எங்கு மெல்லா ரும்போத விழிவு தொடக்கிற் றெனை"யென்று. |
24 1890. | "ஆத லாலே குளித்தடுத்த தூய்மை செய்தே யகம்புகுந்து வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டு; மதற்குநீ சீத நன்னீர் முதலான கொண்டிங் கணைவா" யெனச்செப்பக் காதன் மனையார் தாமுமவை கொணரு மதற்குக் கடிதணைந்தார். |
25 1888. (இ-ள்.) பொழுது வைகச் சேவித்து - பகற்பொழுது உள்ள அளவும் சேவித்துக்கொண்டிருந்து; புனிதர் மீண்டும்....தொழுது - இறைவர் மீளவும் திருக்கோயிலுக்கு எழுந்தருளவே, தொழுது; தம் ஊர்....துயில - தமது தலத்தில் சேர்ந்து தூயதமது திருமனையினுள் புகுதாமல் இழுதுபோன்ற திணிக்க இருள்சேரும் இரவில் மனைப் புறங்கடையில் உறங்கினாராக; இல்லத்து....மொழிகின்றார் - இல்லறங்கள் முற்றும் செய்யும் மனைவியார் வந்து நாயகரை உள்ளே புகும்படி மொழிவாராய்; 23 1889. (இ-ள்.) "திங்கள் முடியார்......பள்ளிகொள்வீர்" என - பிறையைச் சூடிய முடியினையுடைய பெருமானின் பூசனைகளை முடித்துச், செய்கின்ற கடமை முறைமையின்படி அக்கினி காரியமும் செய்து பள்ளிகொள்வீராக" என்று சொல்ல; அவர்க்கு.....என்று - அவருக்குத் "தம் தலைவராகிய சிவபெருமான் திருமணலிக்கு எழுந்தருளும் எழுச்சியினைச் சேவித்து உடன்கலக்கும்படி எவ்விடத்தும் எல்லாரும் கலந்து போந்ததனால் என்னை இழிவு தீண்டிற்று" என்று கூறி; 24 1890. (இ-ள்.) "ஆதலாலே....அணைவாய்" என்ச் செப்ப - ஆதலினாலே குளித்துப் பின் அடுத்த தூய்மைகள் செய்த பின்பே மனையிற் புகுந்து வேதங்களின் தலைவரது பூசனையைத் தொடங்கவேண்டும்; அதற்கு நீ குளிர்ந்த நல்ல நீர் முதலாயினவற்றைக் கொண்டு இங்கு சேர்வாயாக" என்று சொல்ல; காதல் மனையார்...அணைந்தார் - அன்புடைய மனைவியாரும் அவற்றைக் கொண்டு வருதற்கு விரைந்து சென்றனர். 25 இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. 1888. (வி-ரை.) பொழுது வைக - வைகுதல் - நீடுதல், பொழுது பகற் பொழுது; பகற்பொழுது முழுமையும். பொழுதுவைக - நீண்ட நேரம் என்றலுமமையும். புனிதர் மீண்டும் கோயில் புகத் தொழுது - திருமணலியினின்றும் திருக்கோயிலுக்கு எழுந்தருளத் தொழுது விடைகொண்டு; திருவாரூர்க் கோயிலுக்குள் இறைவர் எழுந்தருளுமளவும் சேவித்து என்பதாம். தூய மனையுட் புகுதாறே - தூய மனை - பகலிலும் இரவிலும் ஆகமப்படி சிவபூசை நியமமும், வேத விதிப்படி முத்தீவேள்வி நியமமும். அடியார் கூட்டமும் நிகழ்தற் கிடமாதலின் தூயமனை என்றார். திருவோலக்கம் சேவித்து வருதலால் எல்லாக் குலத்தவரும் உடன்போத இழிவு தொடக்கிற்று (1888) என்று எண்ணினாராதலின் மனையின் தூய்மைக் கிழுக்காகுமென்று கருதி உட்புகாதாராயினர் என்று காரணக் குறிப்புப்படத் தூய மனையுட் புகுதாதே என்றார். |