அடியார்கள் உரைப்ப - அடியவர்கள் வீண் பேச்சுப் பேசாது இத்தகைய திருவார்த்தைகளையே பேசுபவர் என்பது குறிப்பு. நாயனார் தில்லையை அடைந்து தரிசிக்கும் முன்பு பிள்ளையாரும் வந்து தரிசித்துச் சார்ந்தனர்; ஆதலின் அடியவர்கள் அதனை உரைத்தனர்போலும். விடையுயர்த்தார் - சிவம் பெருக்கி - என்பனவும் பாடங்கள். 177 1443. | ஆழிவிட முண்டவரை யம்மைதிருப் பாலமுக முண்ட போதே யேழிசைவண் டமிழ்மாலை "யிவனெம்மா" னெனக்காட்டி யியம்ப வல்ல காழிவரும் பெருந்தகைசீர் கேட்டலுமே யதிசயமாங் காதல் கூர வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு மனத்தெழுந்த விருப்பு வாய்ப்ப, |
178 1444. | அப்பொழுதே யம்பலத்து ளாடுகின்ற கழல்வணங்கி யருள்முன் பெற்றுப் பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி புரண்டுவலங் கொண்டு போந்தே யெப்புவனங் களுநிறைந்த திருப்பதியி னெல்லையினை யிறைஞ்சி யேத்திச் செப்பரிய பெருமையினார் திருநாரை யூர்பணிந்து பாடிச் செல்வார், |
179 1445. | தொண்டர்குழாம் புடைசூழத் தொழுதகரத் தொடுநீறு துதைந்த கோலங் கண்டவர்தம் மனங்கசிந்து கரைந்துருகுங் கருணைபுறம் பொழிந்து காட்டத் தெண்டிரைவாய்க் கண்மிதப்பி லுகைத்தேறுந் திருநாவுக் கரசர் தாமும் வண்டமிழா லெழுதுமறை மொழிந்தபிரான் றிருப்புகலி மருங்கு சார்ந்தார். |
180 1443. (இ-ள்.) அம்மை திருப்பால் அமுதம் உண்டபோதே - அம்மையாருடைய திருமுலைப்பாலமுதத்தினை ஞானத்தோடும் உண்டருளிய அப்பொழுதே; ஏழ்இசை வண்தமிழ் மாலை - ஏழிசைகளும் பொருந்தும் வளப்பமுடைய தமிழ் மாலையினை; ஆழிவிடம் உண்டவரை "இவன் எம்மான்" எனக் காட்டி இயம்பவல்ல - கடல் விடத்தையுண்ட சிவபெருமானை "எமது பெம்மான் இவன்" என்று சுட்டிக்காட்டிப் பாடியருளவல்ல; காழிவரும் பெருந்தகைசீர் கேட்டதுமே - சீகாழியில் அவதரித்த பெருந்தகையாளராகிய திருஞானசம்பந்த பிள்ளையாருடை சிறப்புக்களைக் கேட்டவுடனே; அதிசயமாம் காதல் கூர - அதிசயமாகிய உணர்ச்சியுடன் எழுந்த காதல் கூர்ந்ததனாலே; வாழி அவர் ... விருப்பு வாய்ப்ப - வாழ்வு தரும் அவரது மலர்போன்ற திருப்பாதங்களை வணங்குதற்குத் தமது திருமனத்தில் எழுந்த விருப்பம் வாய்ப்ப, 178 |