பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்427

 

நீரானைக் காற்றானைத் தீயானானை நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆனை உரிவைப் போர்வையான், புலியதளுடையாப் போற்றினான், பாரான், மதியான், பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற நீரான், காற்றான், தீயானான், பாசுபதவேடத்தான், அகத்தியனை உகப்பான், நேரிழையைக் கலந்திருந்தே புலன்களைந்தும் வென்றான், மெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச் சென்றான், சந்தோக சாமம் ஓதும் வாயான், மந்திரிப்பார் மனத்துளான் வஞ்சனையா லஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயான், வருகாலம் செல்காலம் வந்தகாலம் முற்றவத்தை உணர்ந்தாரும் உணரலாகா ஒரு சுடர், பூதலமுமண்டலமும் பொருந்து வாழ்க்கை செய்வான், வெவ்வேறா யிருமுனறு சமயமாகிப்புக்கான், எப்பொருட்கும் பொதுவானான், தானன்றி வேறொன்றில்லாத் தத்துவன், தடவரையை நடுவுசெய்த திக்கான், கலந்தார்க் கென்றும் தேனவன், பத்தர்க்கு முத்திகாட்டும் வரத்தான், மாருதமா லெரிமூன்றும் வாயம் பீர்க்காஞ் சாத்தான் என்றிவை முதலான தன்மைகளா லறியப்படும் திருவீழிமிழலை யிறைவரைச் சேராதவர்கள் தீநெறிக்கே சேர்கின்றார்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) போர் ஆனை - போர்வல்ல யானையினுடைய பாரானை...தீயானான் - சிவனது எட்டுமூர்த்தம். பல்லுயிர் - ஆன்மா. சேராதார்...சேர்கின்றாரே - சிவனை அடையாமலே, நற்கருமஞ் செய்தலே நன்னெறிக்கு அமையும் என்னும் கருமயோக வாதிகள் முதலியோரை நோக்கி வற்புறுத்தி, உபதேசித்தருளியது. தீநெறிக்கே - ஏகாரம் பிரிநிலை. சேர்கின்றாரே - ஏகாரம் தேற்றம். -(2) சவந்தாங்கு....தரித்தான் - சைவ அகப்புறச் சமயங்களாறனுள் ஒன்றாகிய மாவிரதியர் கோலம். 888-ம், ஆண்டுரைத்தவையும், பிறவும் பார்க்க. சுத்த சைவத்தின் வேறாதலின் பவந்தாங்கு என்றார்.-(3) நேரிழையை...வென்றானை - "பொறிவாயி லைந்தவித்தான்" (குறள்). மெல்லியலாள்...சென்றான் - கந்தபுராணம் - தவங்காண் படலம் பார்க்க. -(4) சந்தோக சாமம் - சந்தசுகளின் - சுரங்களின் - நிறைவுள்ள சாமவேதம் வஞ்சனையால் - மெய்யன்பின்றி.-(5) அமுதமுண்ட.....உலவாதான் - சிவனது இறைமை. வருகாலம்...உணர்ந்தாரும் - மூன்றுகாலமு முணரும் பெருஞானிகளும். உம்மை - உயர்வுசிறப்பு. இருவிசும்பு - பெரிய வானம். ஏனையவற்றுக்கெல்லாம் இடங்கொடுத்தலின் இருவிசும்பு என்றார். ஒரு - இரு - சொல்லணி. -(6) பூதலமும்....செய்வான் - உலகைப் படைத்தும் காத்தும் நிகழ்விப்பவன். -(7) தானன்றி - இறைவனாவான் தானேயன்றி. தடவரை - மேரு. உலகுக்கு அச்சுப்போன்று, அதனைச் சுற்றி உலகம் சுழல்வதனால் நடுவுசெய்த திக்கு என்றார். வரையை முன்னிட்டுத் திசைகள் வகுக்கப்படுகின்றன என்பது. -(8) கலந்தார் - உள்ளங் கலந்தவர். -(9) பரத்தானை....பலவானனை - கடந்த அப்புறத்தே ஒன்றாகி, இப்புறத்தே பலவாகி. மாருதம் - சாத்தான் - மாருதம், மால், எரி என்ற மூன்றும், ஈர்க்கும் அம்பும் அதன் கூர்வாயும் ஆகிய, சரம் - அம்பு. எதிர்நிரனிறை. சிரம் - சிரமாலை. -(10) ஆங்கு - அந்தச் சடை நுனியில். செறிந்தான் - செறிந்திருக்கச் செய்தான்.

1519.(வி-ரை.) முன்னாள் - முன்னொரு காலம். ஒரு கற்பம். அழற்றூணில் இறைவர் வெளிப்பட்டு அருளுவதன் முன் என்றலுமாம்.

அயனும் திருமாலும் - முடிவும் முதலும் - அடியும் முடியும்; எதிர்நிரனிறை. முடிவு என்பதனை நீளும் முடி என்றும், முதல் என்பதனை ஆழும் வேர் என்றும் கொண்டு அயன் - மால் என்பவற்றுடன் நிரனிறையாக்கிக் கூட்டுதலுமொன்று.

பொன்னார் மேனி - "பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேனி" (பொன்வண் - அந் - 1), "பொன்னார் மேனியனே" (நம்பி). பொன் - செம்பொன்.

பொன்னார்மேனி மணிவெற்பு - படிக்காசு வைத்த பிற்சரித விளைவுக் குறிப்பு, "செங்கனகக் குன்ற வில்லியார்" (1517) என்ற குறிப்பும் காண்க.