344 1610. | காதணிவெண் குழையானைக் காளத்தி மலைக்கொழுந்தை வேதமொழி மூலததி விழுந்திறைஞ்சி யெழுந்துபெருங் காதல்புரி மனங்களிப்பக் கண்களிப்பப் பரவசமாய் நாதனை"யென் கண்ணுளா" னெனுந்திருந்தாண் டகநவின்றார், |
1611. | மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குறமுன் னேநிற்குஞ் சிலைத்தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதஞ் சேர்ந்திறைஞ்சி, யலைத்துவிழுங் கண்ணருவி யாகத்துப் பாய்ந்திழியத் தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார். |
346 1609.(இ-ள்.) வெளிப்படை. பொன்முகலி என்னும் திருநதியினுடைய தூய நெடுந் தீர்த்தத்தில் முன்னே முழுகித், திருக்காளத்தித் தொடர்மலைகளின் தாழ்வரையில் தலை நிலம்பொருந்த பணிந்து எழுந்து, சிவந்த கண்ணுடைய விடையினை ஊர்தியாக உடைய ஒப்பற்ற பெருமான்நிலைத்து எழுந்தருளிய அந்த மலையின்மேல் ஏறி, வலமாக வந்து வணங்குவாராய், 344 1610. (இ-ள்.) வெளிப்படை. காதில் அணிந்த வெள்ளிய சங்குக்குழையினை யுடையவரைத், திருக்காளத்தி மலையின் கொழுந்து போல்பவரை, வேத மொழியின் மூலமானவரைக் கீழே விழுந்துவணங்கி, எழுந்து பெரிய ஆசை மேற்கொண்ட மனங்களிப்பவும், கண்கள் களிப்பவும் பரவச மடைந்து, இறைவரைப் போற்றி, "என் கண்ணுளான்" என்ற மகுடம் பொருந்திய திருத்தாண்டகப் பதிகத்தினை அருளிச் செய்தாராய், 345 1611. (இ-ள்.) வெளிப்படை. மலைச்சிகரததில் சிகாமணியாய் முளைத்து எழுந்தருளிய இறைவரது பக்கத்திற் பொருந்த முன்பு நிற்கும் வில்லேந்திய கையினையுடைய திருக்கண்ணப்ப தேவரது திருப்பாதங்களைச் சேர்ந்து வணங்கிப், பெருகி விழுகின்ற கண்ணீர் அருவி போலத் திருமேனில் பாய்ந்து வழியத், தலையின் மேலே கூப்பிய கைகளோடும் வணங்கி வெளியே போந்து அணைந்தனர். 346 இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபாக்கி உரைக்க நின்றன. 1609. (வி-ரை.) பொன்முகலித் திருநதி - 743 -ல் உரைத்தவை பார்க்க. புனித நெடுந் தீர்த்தம் - கண்ணப்ப நாயனாரது (கங்கையினும் புனிதமாகிய) திருவாய்க் கலசத்தின் வழி இறைவரது திருமுடிமேல் ஆட்டப்பட்ட தூய திருமஞசனமாயினமையின் இவ்வாறு விதந்தோதினார். முன் முழுகி - நீர்மூழ்கி வழிபாடு தொடங்குதல் யாண்டும் விதிக்கப்பட்ட இயல்பேயாயினும், இங்குச் சிறப்பாக இத்திருநதித் தீர்த்தத்தினை வழிபட்டு அதனுள் முழுகுதலே வழிபாட்டின் ஒரு பகுதியாக அமைந்த தென்பார் விதந்து எடுத்தோதினார். காளத்தி மொய்வரை - காளத்தியைத் தொடர்ந்த மலைத்தொகுதி. நீண்ட மலைத்தொடர்களின் ஒரு பகுதி திருக்காளத்தி. தனி - விடை - என்று கூட்டி யுரைத்தலுமாம். |