வேல் நிழல் - என்ற பாடங்கொண்டு அக்கடுஞ் சுரத்தின் உள்ள வேல்மரங்களில் நிழலில் பகற்கதிர் புகுந்தது போலும் என்றுரைப்பர் இராமநாதச் செட்டியார். புக்கழல் சூழலான புகும் - என்பதும் பாடம். 356 கையினாற் றாவியும், மார்பினால் உந்தியும், உடலினாற் புரண்டும் செல்லுதல். கைகளால் தாவிச் செல்லல் 1622. | இங்ங னம்மிர வும்ப கற்பொழு தும்ம ருஞ்சுர மெய்துவார் பங்க யம்புரை தாள்ப ரட்டள வும்ப சைத்தசை தேயவும் மங்கை பங்கர்தம் வெள்ளி மால்வரை வைத்த சிந்தை மறப்பரோ? தங்க ரங்க ளிரண்டு மேகொடு தாவி யேகுதன் மேவினார்; |
357 மார்பின் உந்திச் செல்லல் 1623. | கைக ளும்மணி பந்த சைந்துற வேக ரைந்து சிதைந்தபின் மெய்க லந்தெழு சிந்தை யன்பின் விருப்பு மீமிசை பொங்கிட மொய்க டுங்கனல் வெம்ப ரற்புகை மூளு மத்த முயங்கியே மைகொள் கண்டர்த மன்பர்செல்ல வருந்தி யுந்தினார் மார்பினால்; |
புரண்டு செல்லல் 1624. | மார்ப முந்தசை நைந்து சிந்தி வரிந்த வென்பு முரிந்திட நேர்வ ருங்குறி நின்ற சிந்தையி னேச மீசனை நேடுநீ டார்வ மங்குயிர் கொண்டு கைக்கு முடம்ப டங்கவு மூன்கெடச் சேர்வ ரும்பழு வம்புரண்டு சென்றனர் செம்மையோர்; |
செயலின்றித் தங்குதல் 1625. | அப்பு றம்புரள் கின்ற நீளிடை யங்க மெங்கு மரைந்திடச் செப்ப ருங்கயி லைச்சி லம்படி சிந்தை சென்றுறு மாதலான் மெய்ப்பு றத்திலு றுப்ப ழிந்தபின் மெல்ல வுந்து முயற்சியுந் தப்பு றச்செய லின்றி யந்நெறி தங்கி னார்தமி ழாளியார். |
360 1622. (இ-ள்.) இங்ஙனம்...எய்துவார் - மேற் கூறிய இவ்வண்ணமாக இரவிலும் பகற் பொழுதிலும் கடத்தற்கரிய பெருஞ் சுரத்திற் செல்கின்றவராகிய நாயனார்; பங்கயம்...தேயவும் - தாமரைபோன்ற திருப்பாதங்கள் பரடுவரையும் தசை தேய்ந்து போயனவாகவும்; மங்கை..மறப்பரோ? - உமை யொரு பாகரது பெரிய வெள்ளி மலையின்மேல் ஊன்றவைத்த நினைவை மறந்து விடுவரோ?; (மறக்காதவராய்த்) தம் கரங்கள்...மேவினார் - தமது இரண்டு கைகளையுமே கொண்டு தாவிச் செல்வாராகி; 357 1623. (இ-ள்.) கைகளும்...சிதைந்தபின் - கைகளும் மணிக்கட்டுகள் அசைந்து போகும்படி தேய்ந்து சிதைவுற்ற பின்பு; மெய்...பொங்கிட - மெய்யுடன் கலந்து எழும் சிந்தையில் அன்பினாலாகிய பெரிய விருப்பம் மேலும மேலும் அதிகரிக்க; மொய்கடும் கனல்வெம் பரல்புகை மூளும் - நெருங்கிய கடிய தீப்போலும் பரற்கற்களின் புகையானது எழுகின்ற; அத்தம் முயங்கியே - வழியைச் சார்ந்து; மைகொள்...அன்பர் - திருநீலகண்டராகிய சிவபெருமானது அடியவராகிய நாயனார்; செல்ல மார்பினால் வருந்தி உந்தினர் - மேற்செல்வதற்காக மார்பினால் வருத்தத்துடன் உந்திச் சென்றனராகி; 358 1624. (இ-ள்.) மார்பமும்....முரிந்திட - மார்பும் தசைகள் தேய்ந்து சிதறி, ஒன்றோடொன்று வரிந்து கட்டப்பட்ட மார்பு எலும்புகளும் முரிந்தனவாக; நேர்வரும் குறிநின்ற சிந்தையின் நேசம் - அடைதற்கரிய குறிக்கோள் நிலைபெற்று நின்ற திருவுள்ளத்திற் கொண்ட அன்பு; ஈசனை நேடும் நீடு ஆர்வம் - சிவபெருமானை நாடிக் காணவேண்டுமென்னும் நிலைத்த ஆர்வமானது; அங்கு |