பக்கம் எண் :


632திருத்தொண்டர் புராணம்

 

இசைக்கும் தாள வொத்து. - (4) தோளைக் குளிர - "கையாரைக் கூப்பியும்" (அற் - அந்). - (5) காடொடு நாடு மலையும் கை தொழுது - இவை முன்னர்க் கயிலைக்குச் சென்றபோது தொழுது சென்றவை. கை தொழுது ஆடா - அந்நினைவு கொண்டு தொழுதுகொண்டே ஆடி. ஆடல் - ஐந்தொழிற் பெருங்கூத்தும், ஆனந்தக் கூத்தும். - (6) உண்மெலி...உருகா - இவை நாயனாரின் மனநிலை. பகன்றில் - பகா அன்றில் என்பது பகன்றில் என நின்றது. இணைபிரியாத அன்றிற்பறவை. ஒடு - உடனாகி. - (7) வடிவொடு வண்ணம்...வாழ்வேன் - இறைவரது வடிவையும் வண்ணங்களையும் மனத்துக்கிசையப் பாடி. "வண்ணமும் வடிவும் கண்டு" (திருக்கழிப்பாலை - குறுந்.) வாழ்வேன் - அவரை வாயார வாழ்த்துவதனால் நான் வாழ்வடைந்தேன். "வாழ்த்துவதும் வானவர்க டாம் வாழ்வான்" (திருவா.) இடி குரல் - இடிபோன்ற குரல். - (8) பெரும்புலர் காலை - வைகறை. விடியல். பெறுமலர் - பெறும் - கிடைக்கப்பெற்ற. விதிக்கப்பெற்ற. - (9) கயிறு அறுக்ககில்லேன் - கயிறு - பாசம். பாசம் போக்கமாட்டாது. அற்றருள் பெற்று (என்போலன்றிப்) பாசம் அற்று, அதனால் அருள்பெற்று. - (10) எங்கருள்...இனி - இது நாயனார் அப்போது கொண்ட மனநிலை. ?- (11) களவுபடாததோர்...கடைக் கணிக்கின்றேன் - களவுபடாததோர் காலம் - களவில்லாத - பாசமறும் - ஒரு காலத்தை; காண்பான் - காணும் பொருட்டு. பெறவேண்டி; கடைக் கணித்தல் - முயற்சித்தல். நாகு - ஏறு - சரம் அசரம் இருவகையுள்ளும் பெண் ஆண் குறிப்பன. இப்பதிகத்தினுள் ஏனைப் பத்துப் பாசுரங்களினும் சரவருக்க உயிர்களையே கூறிய நாயனார் இவ்வொருபாசுரத்தில் சராசரங்கட்குப் பொதுவாகக் கூறியதன் துணையால் "நிற்பவும் சரிப்பவுமான" (1638) என்றும், "விரவுஞ் சராசர மெல்லாம்" (1649) என்றும் உரை விரித்தனர் ஆசிரியர்.

IIதிருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

ஆரார் திரிபுரங்க ணீறா நோக்கு மனலாடி யாரமுதே யென்றே னானே!
கூரார் மழுவாட் படையொன் றேந்திக் குறட்பூதப் பல்படையா யென்றேனானே!
பேரா யிருமுடையா யென்றே னானே! பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றே னானே!
ஆராவ முதேயென் னையா றனே! யென்றென்றே நானரற்றி நைகின் றேனே!

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திரிபுரங்கள் நீறாக நோக்கும் அனலாடி! ஆரமுதே! பூதப்படையாய்! என்று பலவாறும் பரவி ஏத்தித் திருவையாறனே! என்றென்றே நானரற்றி நைகின்றேனே.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஆரார் - பகைவர்; அனலாடி ஆரமுது - முரண் அணி. புரங்களில் வாழ்ந்தபகைவர்க்கு அனலாடியாகவும், அடியர் மூவர்க்கு அமுதாகவும் ஒரே காலத்தில் இருதன்மைப்பட நின்றவர். ஆரமுதே - பொதுவாய் அன்புடையார்க்கு அமுதாவார் என்றலுமாம். (2, 6-ம் பார்க்க). பூதப் பல்படை - பலவகைப்பட்ட பூதகண்ஙகளைப் படையாக வுடையவர். என் ஆரா அமுதே - என்க. கயிலைச்சாரலில் இறந்து படாமற் காத்துக் காட்சி தந்து ஆட்கொண்டவர் என்ற குறிப்பு. என்றென்றே - இனைய பலவும்; நைகின்றேன் - அன்பினால் மனமுருகி வருந்துகின்றேன். "நையுமனப் பரிவோடும்" (1678). - (2) தீறாநோக்கும் தீர்த்தா - புரமெரித்தமையும் அவர்களைப் புனிதமாக்குதற்கு என்பார் தீர்த்தா என்றார். ஏவார் சிலை - ஏ - அம்பு பொருந்திய என்றது அம்பு எய்யப்படாமலே நின்று செயல் நிகழ்ந்தமை குறிப்பு. இடும்பைக் கடல் - கயிலைக்குச் சென்று காண இயலாது இடையிற் செயலின்றித் தங்கிய குறிப்பு. (4) பார்க்க. ஆவா என்று - இறைவர் முனிவராய் வந்தருளிய