B. வைத்தியலிங்க முதலியார்; ஆவர்; காரைக்காலம்மையார் புராணப் படங்களைத் தமது சொந்தச் செலவில் எடுப்பித்தவர் அவ்வூர்ச் சப்ரிஜிஸ்தரார் "சிவநேசர்" திரு. C. இராச கணபதி பிள்ளை அவர்கள் இது மட்டுமன்றி அம்மையார் புராணம் தனிப் பதிப்புக்கும் ரூ. 150 அனுப்பி அன்புடன் உதவினார்கள். அப்பூதியடிக ணாயனார் புராணப் படங்கள் பெறும் பொருட்டு அங்கு இருமுறை சென்று படங்கள் எடுப்பித்தும் தலக் குறிப்புக்கள் எழுதியும் கும்பகோணம் உயர் சைவத் திருவாளர் குமாரசாமி செட்டியாரவர்களும்; அவ்வாறே திருச்சாத்தத் திருமங்கைப் படங்களை எடுப்பித்தும், திருஏமப்பேறூர்ப் படங்களை எடுக்க உடனிருந்து உதவியும் திருவாரூர் வக்கீல் திரு. K. சண்முகம் பிள்ளையவர்களும் பேருதவி புரிந்துள்ளார்கள். இவற்றுக்கு அவ்வக் கோயிலதிகாரிகளும் அன்புடன் விடையளித்தனர். இவ்வெளியீட்டுக்குப் பொள்ளாச்சித் தாலூக்காத் தென்சித்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சொந்தக்காரர்கள் ரூ. 200 அன்புடன் அளித்து ஊக்கப்படுத்தினார்கள். இவர்களுக்கெல்லாம் எனது மனமார்ந்த நன்றி செலுத்துகின்றேன். 3. தனிப் பதிப்புக்கள் இவற்றுள், காரைக்காலம்மையார் புராணம் காரைக்கால் சப்ரிஜிஸ்தரார் ‘சிவநேசர்' திரு. C. இராச கணபதி பிள்ளையவர்கள் உதவியினாலும், அப்பூதியடிக ணாயனார் புராணம், பண்ருட்டி மிராசுதார் திரு. A. C இராசகோபால் செட்டியார் அவர்கள் உதவியினாலும் தனிப் பதிப்புக்களாகவும் வெளிவந்துள்ளன. ஆனால் அப்பூதி நாயனார் புராணம் தனிப் பதிப்பு வெளிவருமுன் அன்பர் A. C. இராசகோபால் செட்டியார் அவர்கள் சிவபதமடைந்து விட்டமை பற்றி மிக வருந்துகின்றேன். 4. பல அன்பர்களின் உதவி முன் பகுதிகளில் உதவி புரிந்த எல்லா அன்பர்களும் இப்பகுதியிலும் முன்போலவே உதவி புரிந்தார்கள். அப்பூதி நாயனார் புராணம் தனிப் பதிப்பு வெளியிடும் முயற்சியிலும், இப்பகுதிக்கு அச்சுக்கு வேண்டிய காகிதம் அவ்வப்போது மிக்கசிரமம் கொண்டு பெறும் முயற்சியிலும் திருத்துறையூர் திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சித்தாந்தக் கழகத் தலைவர் திரு. K. ஆறுமுக நாயனார் அவர்கள் பெரிதும் உதவியுள்ளார்கள். இவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி உரியது. 5. பிரிவாற்றாமை எனது உரை வெளியீட்டுக்குப் பக்கத்துணையாகி அவ்வப்போது வேண்டிய திருத்தங்களைச் செய்துபகரித்துவந்த என் நண்பர் பறங்கிப்பேட்டை வித்வான் சைவத் திரு. ச. பெரியசாமி பிள்ளை அவர்கள் இப்பகுதி வெளிவருமுன் சிவபதமடைந்து விட்டார்கள். அதனால் இவ்வெளியீடு ஒரு பெரிய உதவியை இழந்துள்ளது. இவ்வெளியீட்டில் மிகப்பெரிய அருட்கடைக் கண்ணோக்கம் வைத்து, திருநாவுக்கரசு நாயனார் புராணம் முற்றும் தமது ஆதீனத் தனிப் பதிப்பாக வெளிவரச் செய்தும், மேலும், அவ்வப்போது வேண்டிய அருளாணைகள் செய்தும் உதவி புரிந்தருளிய |