யாச் செலவமாகிய முத்தி தருதலின் இவ்வாறு வழங்கப்படும். "முத்தி தருவது நீறு" (தேவா) சாதனம் உருத்திர சாதனம் எனப்படும் உருத்திராக்கம். கோவணம் - சிவனையன்றி வேறு பற்றுக்கோடில்லாதார் சிவனடியார்களாதலின் அவர்கள் வேறு ஆடை அணிகலன் முதலியவையின்றிக் கீளும் - கோவணமும் உடுத்து ஒழுகுபவர். "ஆரங் கண்டிகை யாடையங் கந்தையே" (144) அன்றியும் கோவணமுடுத்து உழல்வது சிவன் றிருவேடமுமாம். "சாம்பர பூச்சங்கீ, ளுடையுங் கொண்ட வுருவம்" (பிள் - தேவா - கோலக்கா - 1); "கொடுங்குழை புகுந்தவன்றுங் கோவண மரைய தேயே?", "கோவண முடுத்த வாறுங் கோளாவசைத்த வாறுந், தீவணச் சாம்பற் பூசித் திருவுரு லிருந்த வாறும்" (கனிநேரிசை), "மன்னு கலை துன்னுபொருண் மறைநான்கே வான்சரடாத், தன்னையே கோவணமரச் சாத்தினன்காண் காழவோ" (திருவா) முதலியவை காண்க. பூதி கோவணம் - சாதனத்தாற் பொலிந்து - "நல்லியல்பாகுங் கோவணம் பூதிசாதனங் கண்டால்" (ஆலவாய் - தேவா - 8) என்றதை எடுத்துக் காட்டியவாறு, "நல்லியல்பாகும்" என்ற கருத்தினைப் பொலிந்து என்றதனால் விளங்க வைத்தார். ஆரதேவர் தம் அஞ்செழுத்து - சிவன் திருநாமமாகிய சீபஞ்சாக்கர மகா மந்திரம். அஞ்செழுத்து ஆம் அவை - திருவைந்தெழுத்து முழுமையும் கூடி ஓர் மந்திரமாயினும், அதனுள் ஐந்தெழுத்துக்களும் தனித்தனி ஓரோர் பொருளையுணர்த்தி நிற்ரலின் அவை என்று பன்மையாற் கூனிறார். "மன்னுமஞ்செழுத்தாகிய மந்திரந், தன்மைலொன்று வல்லவரா" (திருக்குறுந்) என்பதும் காண்க. அதனையே பலமுறையும் பயிலுதலின் பன்மையாற் கூறியதுமாம். ஓதும் நாவணக்கத்தால் உரைப்பவர் - "நாவணங் கியல்பா லஞ்செழுத்தோது" (ஆலவாய - 8) என்ற தேவாரத்தை விளக்கியபடி. ஓதும் நா எப்போதும் பயிற்சியால் ஓதும். "நான மறகநனும் கொல்லும்நா" (நமது கொடுமும்) என்ற படி எப்போதும் சொல்லும் என்க. வணக்கத்தால் உரைப்பவர் - "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்" என்றபடி உரைப்பவர். பொலிந்து என்றதனால் செய்யும், வணக்கத்தால் - என்றதனால் மனமும், உரைப்பவர் - என்றதனால் மொழியும் கூடி முகாரண வழிபாடும். காண்போர் அறிய உணர்த்தி வைக்கும் பண்பு காட்டியபடியாம். பண்பினார் - என்ற கருத்துமிது. 1697 முதல் 1701 வரை ஐந்து பாட்டுக்களாலும் அடியாரிடத்துத் திண்மை வைப்பினாற் குலச்சிறையார் செய்யும் திருத்தொண்டினியல்பு கூறப்பட்டது. 7 1702. | இன்ன நல்லொழுக் கத்தினா; ரீறில்சீர்த் தென்ன வன்னெடு மாறற்குச் சீர்திகழ் மன்னு மந்திரி கட்குமே லாகியார்; ஒன்ன லார்ச்செற் றுறுதிக்க ணின்றுளார்; |
8 (இ-ள்.) இன்ன நல் ஒழுக்கத்தினார். (அவர்) இவ்வாறாகிய நல்லொழுக்கத்தில் நின்றவர்; ஈறில்...மேலாகியார் - முடிவில்லாத சிறப்பையுடைய பாண்டியராகிய நின்றசீர் நெடுமாறனாருக்குச் சிறப்புச் செய்து விளங்கிய மந்திரிகளுள் மேம்பாடாகிய நிலைபெற்றவர்; ஒன்னவார்ச் செற்று...நீன்றுளார் - பொருந்தாதவர்களை - பகைவர்களை - அழித்து உறுதி பயக்கும் துறையில் நிலைபெற்றுள்ளார்; (வி-ரை.) இன்ன நல்லொழுக்கத்தினார் - முன்னர்க் கூறிப் போந்த ஐந்து திருபபாட்டுக்களினும் காட்டப்பட்ட திறத்தின் வழாதவர் (1696) - இசைத்து |