துள்ளிருக்கும் புராணர்" (பிள் - வீழி). மணியைப் பொன்னிற் பதிப்பதுபோலத் தாள் என்னும் புண்டரீகத்தை அகமாகிய மலரில் வைத்தனர் என்பது. அகமலரில் - அகம் - உள்ளம் இருதய கமலம் என்பர். இதயம் - பூசைத் தானமாதலிற் போற்றும் என்றார். "அரனை யஞ்செழுத்தா லர்ச்சித் திதயத்துல்" (சிவஞான போதம் 9 - 3 வெண்பா) என்றதற்குப் "புறம்பே ஞானபூசை செய்யு முறைப்படி இதய பங்கயத்தில் அவ்வஞ்செழுத்தா லமைந்த திருமேனியில் அம்முதல்வனை, அன்பு, கொல்லாமை, ஐம்பொறிகளடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம் என்னும் அட்ட புட்பங்கொண்டு அம்மனுவா லர்ச்சனை செய்து" என்று எங்கள் மாதவச் சிவஞான யோகிகளுரைத்ததனைக் காண்க. அகப்பூசையில் இருதயம், நரபி, புரு மத்தியம் இவற்றை முறையே பூசை, ஓமம், சமாதித் தானங்களாக ஆகமம் விதித்தது. "ஹ்ருத்பதமே பூஜயேத் வித்வாந்" - (சுப்ரபேதம்). போற்றுதல் - ஈண்டு அகப்பூசையில் அருச்சனை செய்தல் என்னும் பொருளில் வந்தது. பொற்பு - ஈண்டு அன்பின் மிகுதியினையும், நியதி - வழுவாதியற்றும் முறைமையினையும் குறித்தன. சிறப்புப்பற்றி அடியார் பணியை முன்வைத்ததுமன்றிப், பெருக உரைத்தருளிய திறமும் காண்க. நாயனாரது சரிதக் குறிப்புமாம். அதிபர் குறும்பனாராவர்; அவர், பயன் கொள்வாராயும், குறைந்தடைவாராயும் போற்றும் பொற்பினார் என்க. வருநிதியம் - என்பதும் பாடம். 3 1709. | இத்தன் மையராய் நிகழுநா ளெல்லை யில்லாத் திருத்தொண்டின் மெய்த்தன் மையினை யுலகறிய விதியால் வணங்கி மெய்யடியார் சித்த நிலவுந் திருத்தொண்டத் தொகைபா டியநம் பியைப் பணிந்து நித்த னருள்பெற் றவர்பாத நினைக்கு நியமத் தலைநின்றார். |
4 (இ-ள்.) இத்தன்மையராய் நிகழும் நாள் - மேற்கூறிய இத்தன்மையினையுடையராகி நிகழ்கின்ற நாளிலே; எல்லை இல்லா...உலகு அறிய - அளவுபடாத திருத்தொண்டினது உண்மை நிலையினை உலகு அறியும் பொருட்டு; மெய் அடியார் சித்த நிலவும் திருத்தொண்டத்தொகை - உண்மை யடியாரது சித்தத்துள் நீங்காது நிலைபெற்று விளங்கும் திருத்தொண்டத்தொகைத் திருப்பதிகத்தினை விதியால் வணங்கி - விதிப்படி வணக்கஞ் செய்து; பாடிய நம்பியைப் பணிந்து பாடியருளிய ஆளுடைய நம்பிகளைப் பணிந்துகொண்டு; நித்தன் அருள் பெற்று...தலைநின்றார் - நித்தராகிய சிவபெருமானது அருள் கூடியதனாலே அவருடைய திருபாதங்களை நியமமாக நினைக்கின்ற நிலையில் சிறந்து விளங்கினார். (வி-ரை.)இத்தம்மையராய் நிகழுநாள் திருத்தொண்டின் தன்மையினை உலகு அறிய; வணங்கித், திருத்தொண்டத் தொகைபாடிய நம்பியைப் பணிந்து திருஅருள் பெற்றதனால் அவர்பாதம், நினைக்கும் நியமத் தலைநின்றார் என்றுகூட்டி உரைத்துக் கொள்க. திருத்தொண்டின் மெய்த்தன்மையாவது திருத்தொண்டு ஒன்றே உயிருக்கு உறுதி தரும் சிறப்புவாய்ந்து நிலைபெற்று நிற்றல். உலகறிய வணங்கிப் பாடிய என்க. உலகம் தொண்டின் தன்மையினையறிந்துய்ய வேண்டுமென்னும் கருணைப் பெருக்கினால் தாம் விதியால் வணங்கி பாடியருளிய என்பது. விதியால் வணங்கி - அடியார் திருக்கூட்டத்தைக் கண்டு, இவர்க்கு யான் அடியேனாகப் பண்ணு நாள் எந்நாள் என்று கருதிப் பரமனார் தாள்களைப்பரவி வணங் |