24. பேயார்என்கிற காரைக்காலம்மையார்புராணம் தொகை | | (பெருமிழலைக் குறும்பர்க்கும்) "பேயார்க்கு மடியேன்" |
திருத்தொண்டத் தொகை (4) வகை | "‘நம்பன் றிருமலை நான்மிதியே?னென்று தாளிரண்டு மும்பர்மிசைத்தலை யானடந் தேற, வுமைநகலுஞ் செம்பொன்னுருவ "னென் னம்மை" யெனப்பெற் றவள்செழுந்தேன் கொம்பி னுகு காரைக் காலினின் மேய குலதனமே" |
- திருத் தொண்டர்திருவந்தாதி (29) விரி 1717. | மானமிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில் ஊனமில்சீர்ப் பெருவணிகர்குடிதுவன்றி யோங்குபதி கூனல்வளை திரைசுமந்து கொண்டேறி மண்டுகழிக் கானன்மிசை யுலவுவளம் பெருகுதிருக் காரைக்கால். |
1 புராணம் :- பேயார்என்ற பெயராற் போற்றப்பட்ட காரைக்கால் அம்மையாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி நிறுத்த முறையானே, திருநின்ற சருக்கத்துள் நான்காவது காரைக்காலம்மையாரது புராணங் கூறத் தொடங்குகின்றார். தொகை:- "பேயார்" என்றறிந்து போற்றப்படும் அம்மையார்க்கும் நான் அடியேனாவேன். பேயார்- என்றது அம்மையார் இறைவரை வேண்டிப் பேய்வடிவம் பெற்றதானும் தம்மைக் "காரைக்காற்பேய்"என்று தம்முடைய திருப்பாட்டுக்களில் தமது பெயர்பொறித்திருத்தலானும் போந்த பெயர். ஆயின் ஆசிரியர் இப்புராணத்தை அதுகொண்டு "பேயார்புராணம்" மென்றாதல் அம்மையாரது இயற்பெயர்பற்றிப் "புனிதவதியார்புராண" மென்றாதல் பெயர்புனைந்தாரிலர். "அம்மை" என்று இறைவர் அழைத்த அப்பெருமை கொண்டே காரைக்கால் "அம்மையார்" புராணம் என்று இதற்குப் பெயரிட்டனர் என்பது "காரைக்காலம்மை பெருமை கூறுவாம்" (1716) என்று தொடங்கியும், "கீத முன்பாடுமம்மை" (1782) என்று முடித்தும் முன்னும் பின்னும் வைத்தமையானும், "வேணியினாரம்மை'யென மதுரமொழி கொடுத்தருளப் பெற்றாரை" (1781) என்று விதந்து போற்றிக் கூறியவாற்றானும் விளங்கும். பேயார்க்கும் உம்மை எண்ணும்மை. வகை :- நம்பன்...ஏற - இறைவர் வீற்றிருக்கும் திருமலையாதலின் இதனைக் காலால் மிதித்து நடவேன் என்று துணிந்து தாள்களிரண்டையும் மேலே தூக்கித் தலையினால் நடந்து மலையினை ஏற, உமை நகலும் - உமையம்மையரர் திருநோக்கம் செய்து ‘இவன் அன்பு இருந்தவாறு என்னே!' என்று முறுவல் செய்யவும்; செம்பொன்...பெற்றவள் - செம்பொன் மேனியாகிய சிவபெருமான் |