| தொண்டர்வரிற் றொழுதுதா தியர்போற்றத் துணைமுலைகள் கொண்டநுசுப் பொதுங்குபதக் கொள்கையினிற் குறுகினார். |
5 1720. (இ-ள்.) செல்வமிகும் தாதையார்- செல்வ மிகுந்த தந்தையாராகிய தனதத்தனார்; பயில்பருவச் சிறப்பு எல்லாம் - மேலே முறைப்படி வருகின்ற பயிலும் பருவங்கள்தோறும் செய்யும் சிறப்புக்கள் எல்லாவற்றையும்; பல்பெருநல் கிளை உவப்ப - பல பெரிய நல்ல கிளைஞர்கள் உவப்படையும்படி; திருப்பெருகும் செயல்புரிய - திருப்பெருகும்படியான சடங்குகளாகிய செயல்களையெல்லாம் செய்ய; மல்கு...வளர்கின்றார் - பொருந்திய நிறைந்த - பெரும் பாராட்டுக்களுடனே வளர்கின்றாராகிய புனிதவதி யம்மையார்; விடையவர்பால்...வளர்வார் - இடபத்தையுடைய இறைவரிடத்தில் மிக்க அன்புடனே கூடிய அழகினுடைய கொழுந்து வளர்ந்தாற்போல வளர்வார். 1721. (இ-ள்.) வண்டல்...தொழுது - சிறுமியருடன் வண்டலாட்டயரும் மகளிர் விளையாட்டுக்களிலெல்லாம் வளர்பிறையைச் சூடிய சடையினையுடைய தேவதேவருடைய திருவார்த்தைகளே பொருந்த வருவனவாகப் பயின்றும், சிவன் அடியார்கள் வந்தால் அவர்களைத் தொழுதும் (இவ்வாறாக); தாதியர்போற்ற - தாதியர்கள் பாதுகாத்துக் கொண்டாட; துணை முலைகள்.....குறுகினார்- துணைமுலைகளைக் கொண்டு இடையானது துவளும் பருவங்கொண்ட வயதின் பருவத்தினை அடைந்தனர். 5 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. 1720. (வி-ரை.) பருவச் சிறப்பு எல்லாம் - தாலாட்டு முதல் நீராடல் வரை உள்ளனவாய்ப் பெண்களுக்குரிய ஏளைப் பருவங்களிற் செய்யப்படும் கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும். 879-ம், பிறவும் பார்க்க. பருவச் சிறப்பு - பருவங்கள்தோறும் செய்யப்படும் உரிய சடங்குகள். கிளை உவப்ப - "செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்" என்றும், "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான், பெற்றத்தாற் பெற்ற பயன்" என்றும் வருவனவாதி நீதியொழுக்கின்படி, கிளைஞர்கள் உவப்பச் செயல்புரியும் நியதியாலும், செல்வ மகப்பேற்றின் சடங்குகளில் கிளைஞர்கூடி மங்கலங்கள் நிகழ்த்தற்குரியார் ஆதலானும், இவ்வாறு கூறினார். "ஏதமில்பல் கிளைபோற்ற" (1284); "தொக்க பெருவிறல் வேடர்க் கெல்லாக், திருமலி துழனி பொங்க" (668) முதலியவை பார்க்க. திருப்பெருகும் செயல் - தந்தையார்செய்த சிறப்புக்கள் சடங்குகளின் அளவேயாயினும் அவை திருப்பெருகும் செயல்களேயாயின என்பது குறிப்பு. பாராட்டினுடன் வளர்கின்றார்- வளர்வார்- என்றது மிக்குறிப்பு. திரு - முத்தித் திரு. சிவத் தன்மை பெருக விளைவிக்கும் செயல்கள். வளர்கின்றார் - வளர்வார் - குறுகினார் என்று மேல்வரும் பாட்டினுடன் கூட்டி முடித்துக்கொள்க. வளர்கின்றார்- வளர்வார் - இரண்டும் வினைப் பெயர்கள், சுற்றம் பாராட்ட வளரும் வளர்ச்சி உண்மையில் அன்புடன் அழகின் கொழுந்து எழும் வளர்ச்சியேயாயிற்று என்க. அன்புடன் அழகின் கொழுந்து எழுவதென - உள்ள நிலையும் உடல் நிலையும் குறித்தது. உண்மைத் தன்மையான உயிரின் உயர்நிலையினையும், உலக நிலையினையும் ஒருங்கே பற்றிய வளர்ச்சி. சிறப்புப்பற்றி உடன் உருபை அன்பு என்பதனோடு சார்த்தி ஓதினார். அம்மையாரது சரித நிகழ்ச்சியில் இவ்விருவகை விளைவும் முற்ற வரும் நிலையும், அழகின் எழுச்சியரகிய விளைவு பின்னர் உதறப்பட்டொழிய (1766) அன்பு வளர்ச்சியரகிய முதிர்வேநிறைந்த பேய்வடிவுடன் நிலைபெற்றுத் திருவடிக் |