பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்841

 

(இ-ள்.) மகட்கொடையின்.......கொடுத்ததன்பின் - மகளை மணஞ்செய்து கொடுத்த அதனால் மிகவும் மகிழ்ச்சி பெருகுதற்கேதுவாக அளவில்லாத தனங்களையெல்லாம் (தனதத்தன்) கொடுத்ததன் பின்னர்; நிகர்ப்பரிய....குலமகனும் - ஒப்பற்ற பெருஞ்சிறப்பினையுடைய நிதிபதியின் மகனாகிய பரமதத்தனும்; தகைப்பில் பெரும்....மேவினான் - அடங்காத பெருவிருப்பினால் மனையில் தங்கியபடி இல்வாழ்க்கையின் வரும் எல்லா வளங்களையும் தனது மரபுக்கேற்ற முயற்சிகளால் பெருகச்செய்து மிகுதியாக்கும் வாணிபச் செய்கைகளில் மேன்மையடைந்த நிலையைப் பொருந்தினான்.

(வி-ரை.) தனதத்தன் கொடுத்ததற்பின் - என்று எழுவாய் முன் பாட்டிலிருந்து வருவிக்க. அணிமாடம் மருங்கமைத்ததன்றி மற்றும் தணி வாழ்க்கைக்கு வேண்டிய தனங்களை எல்லாம் அளவில்லாது அளித்தனன்.

மகட்கொடை - பெண் கொடுத்த நிலை. மகட்கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் - வரம்பில்லாத சீதனப்பொருள்கள் என்க. மகிழ் சிறக்கும் தனம் - மகட்கொடை நேர்ந்தபோது உடன் கொடுக்கும் சீதனத்தின் அளவே பெண்கொண்டாருக்கு உளதாம் மகிழ்ச்சியின் அளவும், அது கண்டு பெண் பெற்றார்மகிழும் அளவுமாம் என்பது உலகியல்பிற் காணப்படும் உண்மையாதல் குறிப்பு.

கொடுத்ததற்பின் - இதுவரை மகட்கொடுத்தாரின் செயல் கூறி இனி, மகட்கொண்டார்அதனைப் பயன்படுத்தும் வகையால் கணவன் செயல் மேற்கூறுகின்றார்.

குலமகன் - குலம் - நன்மை என்ற பொருளில் வந்தது.

தகைப்பு - அளவுபடுதல். காதல் - இல்வாழ்க்கையின் விருப்பம் என்ற பொருள் தந்து நின்றது.

மணைவளம்...கொள்கை - மனையின்கண் இருந்தபடியே பெரும் இலாபங்கருதிச் செய்யும் வாணிபம். வீட்டைவிட்டு வெளியே சென்று கலம் ஏறியும், வேற்று நாடு புகுந்தும் பொருள் ஈட்டும் வாணிபமும் இவர்க்கு உரித்தாதலின் வேறாய் அறியப்படுதற்கு மனைவளம் பெருக்கி மிகப் புரியும் என்றார். மற்ற வாணிபம் மேல் 1748 - 1751 வரை பாட்டுக்களிற் காண்க. பெருக்கி மிகப் புரியும் பொருகச் செய்து அப்பெருக்கு மேன்மேலும் மிகும்படியும் செய்கின்ற கொள்கை. குறித்த வாணிபம் என்ற பொருளில் வந்தது.

13

1730.

ஆங்கவன்ற னில்வாழ்க்கை யருந்துணையா யமர்கின்ற
பூங்குழலா ரவர்தாமும் பொருவிடையார்திருவடிக்கீழ்
ஓங்கியவன் புறுகாத லொழிவின்றி மிகப்பெருகப்
பாங்கில்வரு மனையறத்தின் பண்புவழா மையிற்பயில்வார்;

14

1731.

நம்பரடி யாரணைந்தா னல்லதிரு வமுதளித்துஞ்
செம்பொன்னு நவமணியுஞ் செழுந்துகிலு முதலான
தம்பரிவி னாலவர்க்குத் தகுதியின்வேண வேகொடுத்தும்
உம்பர்பிரான் றிருவடிக்கீ ழுணர்வுமிக வொழுகுநாள்;

15

1732.

 பாங்குடைய நெறியின்கட் பயில்பரம தத்தனுக்கு
 மாங்கனிக ளோரிரண்டு வந்தணைந்தார்சிலர்கொடுப்ப
 வாங்கவைதான் முன்வாங்கி யவர்வேண்டுங் குறையளித்தே
"யீங்கிவற்றை யில்லத்துக் கொடுக்க" வென வியம்பினான்.

16