பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்855

 

இடலும் - கணவனது பரிகலத்தில் இடுதலும்.

இடலும் - அயின்று என்றது உணவின் ஆசை கொண்டு நாவின் சுவைப்புலனுக்கு அடிமைப்பட்டு நேர்மை தவறினானாதலின் இடுதலும், வேறொன்றும் எண்ணாது மிக விரைந்து உண்டுவிட்டான் என்ற விரைவுக் குறிப்புப்படக் கூறியது காண்க.

உற்ற சுவை - உற்ற - இறைவரருளால் பொருந்திய என்ற குறிப்புப்பட நின்றது.

அமுது - தேவாமிர்தம் என்பர். அமுதினும் மேற்படுதல் - சுவையாலும் பயனாலும் மிகுதல். இங்குப் பயனால் மிகுதலாவது ஏனை யமுதம்போ லன்றிச், சிவனருள் வெளிப்பாட்டினைக் காண உதவுதல். மேற்பட - மேற்படும்படி; அம்மையாரை "மானிட மிவர்தா மல்லர்- நற்பெருந் தொய்வமா"வர்(1763) என்று தெளியவும் வணங்கவும் பேறு பெறுவித்தது இச்சுவையே யாதலின் அமுதினும் மேற்பட்டதென்பதாம். அவன் தந்த கனி அடியார்க்காகிய பின், அருளொடு மீண்டு வந்ததாதலின் சுவை மேம்படமக் காரணமாயிற்றென்க; கடன், வட்டியுடன் திரும்ப வருதல்போல. "தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருதல்" என்ற நீதியுரையும் காண்க.

முற்றரும் - முன்தரும் - முன் நான் அனுப்பி வைத்த.

முவுலகில் - மூவுலகிலும். முற்றும்மை தொக்கது. வணிகன் வாக்கில் அவனை யறியாமலே உண்மை போந்தது. மேல் - நடு - கீழ் என்ற மாயா புவனங்கள் எல்லாவற்றுக்கும் வேறாய், அப்பாற்பட்ட சிவபுவனத்தின் விளைவாகிய கனியாதல் குறிப்பு.

பெற்றது வேறு எங்கு - மூவுலகினும் பெறற்கரிதாயினமை துணிந்தானாதலின் மூவுலகமுமல்லாது வேறு எங்கு என்றான். பெற்றது எங்கு? என்றதனை, யார்கொடுத்தார்- என்னிடம் பெற்றதன்று - வேறு யாவரிடம் பெற்றது - என்றது பொருள்பட அம்மையார்உணர்ந்தனர். "எய்தவருங் கனியளித்தார்யார்?" என்னும் கணவனுக்கு (1744) என்பது
காண்க.

26

1743.

அவ்வுரைகேட் டலுமடவா "ரருளுடையா ரளித்தருளுஞ்
செவ்வியபே ரருள்விளம்புந் திறமன்"றென் றுரைசெய்யார்;
கைவருகற் புடைநெறியாற் கணவனுரை காவாமை
மெய்வழியன்" றெனவிளம்பல் விடமாட்டார்; விதிர்ப்புறுவார்;

27

1744.

"செய்தபடி சொல்லுவதே கட" னென்னுஞ் சீலத்தான்
 மைதழையுங் கண்டர்சே வடிகண்மனத் துறவணங்கி
"யெய்தவருங் கனியளித்தார்யா?"ரென்னுங் கணவனுக்கு
 மொய்தருபூங் குழன்மடவார்புகுந்தபடி தனைமொழிந்தார்.

28

1743. (இ-ள்.) அவ்வுரை கேட்டலும் - தாம் எதிர்பார்த்திராத நிலையிற் போந்த அந்த வினாவைக் கேட்டலும்; மடவார்- அம்மையார்; அருளுடையார்....உரை செய்யார்- தம்பால் அருள் உடையாராகிய இறைவர்தமக்குச் செய்தபெரிய அருளிப்பாடு பிறர்பாற் சொல்லத்தக்கதன்று என்ற நிலையினால் அதனைச் சொல்லவுமாட்டார்; கைவரு...விரும்பல் விடமாட்டார்- கைவரும் கற்பு நெறியினால் கணவன் சொல்லினைச் சோர்வுபடாமற் காவாது விடுதல் மெய்ந்நெறி யன்று என்ற நிலையினால் அதனைச் சொல்லுதலை விடவுமாட்டார்; விதிர்ப்புறுவார்- இவையிரண்டுக்கு மிடைப்பட்டு நடுக்கமுற்றனராகி.

27

1744. (இ-ள்.) செய்தபடி....சீலத்தான் - எவ்வாறாயினும் செய்தபடி சொல்லுவதே கடமையாம் என்னும் சீலத்தை துணிந்தமையினாலே; மைதழையும்...