பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்857

 

முதல் கையிற் கனிவந்த அளவுவரை நிகழ்ச்சி யெல்லாம் கொள்ள உரைத்த கவிநலம் காண்க. முடிபு ஈசனருளால் வந்தது என்றுரைத்தனர்என்பது வரும் பாட்டிற் காண்க. புகுந்த என்றதனால் ஒருவர்மனையுட் புகுந்தார் - (1733) என்றபடி அடியார்புகுந்தபடியினையும், தம் கையினுள் கனிபுகுந்த விதம் ஈசனருள் என்றதனையும் குறிப்பின் உணரவைத்த நலமும் காண்க. காரைக்காற் பதிபுகுந்தார்(1726); ஒருவர்மனையுட் புகுந்தார்(1733) கனிபுகுந்தபடி என்ற குறிப்பெல்லாம் காண்க.

சீலத்தார் - என்பதும் பாடம்.

28

1745.

"ஈசனரு" ளெனக்கேட்ட வில்லிறைவ னதுதெளியான்,
 வாசமலர்த் திருவனையார்தமைநோக்கி "மற்றிதுதான்
 றேசுடைய சடைப்பெருமான் றிருவருளே லின்னமுமேரர்
 ஆசில்கனி யவனருளா லழைத்தளிப்பா"யெனமொழிந்தான்.

29

(இ-ள்.) ஈசனருள்...இல் இறைவன் - "ஈசனருளே கனியளித்தன" என்று அம்மையார்சொல்லக் கேட்ட இல்லத்துக்குடையவனாகிய வணிகன்; அது தெளியான் - அதன் உண்மையில் மனத்தெளிவு பெறாதவனாகி; வாசமலர்....நோக்கி - மணம் பொருந்திய மலரில் எழுந்தருளிய திருவினை ஒத்த அம்மையாரைநோக்கி; "மற்றிதுதான்....அளிப்பாய்" என மொழிந்தான் - மற்று இந்தக் கனி ஒளிபொருந்திய சடையினையுடைய சிவபெருமானது திருவருளால் பெறப்பட்டது என்பது உண்மையாயின் இன்னமும் ஒரு குற்றமற்ற இது போன்ற கனி ஒன்றினை அவர்அருளால் அழைத்து அளிப்பாயாக!" என்று சொன்னான்.

(வி-ரை.) ஈசனருள்...தெளியான் ஈசனருள் என - பெற்றது எங்கு? என்றும், அளித்தார்யார்? என்றும் கேட்ட கணவனுக்கு கொடுத்தது ஈசனருளேயாம் என்று விடை கூறிய முடித்தபடி; என - என்று அம்மையார்கூற.

இல் இறைவன் இல் - வீடு - வீட்டுக்குடையவன். இல் மனைவி எனக்கொண்டு மனைவிக்குக் கணவன் என்றலுமாம். "மனைப்பதியாகிய வணிகன்" (1738) "இல்லாலன்" (1736) என்றவை காண்க. இல்லாளன் என்புழிப்போல, இறை இல்லான் - இறைமைத் தன்மை (கணவனார்தன்மை) வாய்க்கப்பெறாதவன் - இழந்துபடவுள்ளவன் என்பதும் குறிப்பு.

தெளியான் - மனங்கொள்ளான்; உண்மை யென்னும் தெளிவு பெறாதவனாகி முற்றெச்சம். தெளியானாய் - மொழிந்தான். சிவனருட்டன்மையிற் பயிலாதவனாதலின் "அருள்தந்ததாகில் இன்னுமொரு கனி அழைத்து அளி" என்றான். இதுவே இந்நாள் மாக்களின் மனநிலை, இவ்வணிகன் சிவனடிமைத் திறமும் பண்பும் சிறிதும் பயிலாதவன் என்பதனை உய்த்துணர வைத்த நயம் காண்க. "குணம் பேசிக் குலம் பேசி" (1289) என்றும், "வேளாண் குடித்தலைவர், மின்னார் செஞ்சடை யண்ணல் மெய்யடிமை விருப்புடையார்" (1287)என்றும், திலகவதியம்மையாருக்கு நேர்ந்த மணமகன் றிறத்தை அறிவித்த ஆசிரியர், இங்குப் "புகழ் வணிகன் பயந்தகுல மைந்தனுக்கு....மகட் பேச" (1723) என்றும், "நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு" (1726) என்றும் குலம் பற்றிய அளவில் அறிவித்த குறிப்பும், "முன்னீராடிப் புகுந்தடிசில் புரிந்தயில" (1738) என நீராடிய பின் வேறு நியமங்கள் ஒன்றுமின்றிச் சோறுண்பவன் என்ற குறிப்பும், இவ்வணிகன் நற்குலத்து வந்தானாயினும் பண்டைத் தவத்தால் நிதிபடைத்தானாயினும் இந்நாள் இவ்வகைய மாக்கள் பலரையும் காண்கின்றவாறே "பாங்கிற் றிருநீறு பண்டு பயிலாதா" (641)னாய் நின்றான் என்பது கருதவைத்த உயர்கவி மாண்பும்