பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்865

 

பெருமணம் - செல்வநிலைக்கேற்பப் பெருவிழாவாகச் செய்த மணம்.

முன்னை - முன் மணம் புணர்ந்த என்ற பொருளில் வந்தது.

அறல் இயல் நறுமென் கூந்தல் - முதற் சாதிப்பெண்ணின் கூந்தலிலக்கணம். அறல் - கருமணல். இயல் - அதன் ஒழுக்குப் போன்றமைதல். நறுமை - இயற்கை மணம். மென்மை கூந்தலின் உயர்வு காட்டும் என்ப.

அணங்கு அனார் - அணங்கு - தெய்வம்; முன்னர்த் "திருமடந்தை" (1718) என்ற கருத்து. தெய்வம் அன்னார் என்று வணிகன் கொண்டவர் என்றலுமாம்.

அற்றம் - வஞ்சனை யொழுக்கமாவது விட்டு நீத்தலை உள் வைத்துக், கடல் வாணிபஞ் செய்து நிதிகொணர்தலை வெளிக்காட்டிப், போந்துவிட்ட செயல்.

புறம் ஒரு வெளியுறாமல் - புறத்தே மனைவிக்கும் பிறருக்கும் ஒரு சிறிதும் வெளிப்படாதபடி. ஒரு - ஒன்றும்; சிறிதும். பொதிந்த சிந்தனை - மறைத்து வைத்த சிந்தனை. சிந்தனை என்றதனால் உள்ளே பொதிந்து வைப்பினும் அது எவ்வாற்றானும் வெளிவருதல் ஆகாது என்றதனையே மறவாது சிந்தனையுட் கொண்டிருந்தான் என்பது குறிப்பு.

முறைமையின் - இல்வாழ்க்கை நிலையின் முறையில்.

முகமலர்ந்து - அகத்துள் வஞ்சனை பொதிந்து வைத்தானாயினும், "அகத்தினழகு முகத்திற் றெரியும்" என்றபடி இல்லாது, முகத்தின் மட்டில் மலர்ச்சியே பூண்டு என்பது. "மனத்தினுட் கறுப்பு வைத்துப் பொய்தவ வேடங் கொண்டு" (473) என்ற நிலையை இங்கு நினைவு கூர்க.

1753. (வி-ரை.) முதல் வணிகர் - அவ்வூரில் முதன்மை பெற்றோர். "பெரு வணிகர் குடி" (1717) என்றலுமாம்.

எய்திய திரு - ஈட்டியதனால் வந்த உலகச் செல்வம். இது முன்னை அம்மையாருடன் எய்திய தெய்வத் திருவினின் வேறாம் என்று குறிப்பார் "நிதிக்கிழவன் என்ன" என்றார்.

பொரு...புகழினான் - கடலிற் கப்பல்கள் செலுத்திச் செய்யும் மிக்க நிதி படைத்த வாணிபத்தின் புகழ். மனைவி - அம்மையாரை மனைவியார் (1746) - (1754) (1761) என்பதும், இவளை "மனைவி" என்பதும் கருதுக.

பெருகு ஒளி விளக்குப்போல் ஓர் பெண்கொடி - அம்மையாரது திருப்பெயரை மக்கள் இட்டு வழங்கி அவ்ழக்கினால் நலம் பெறும் மரபு இப்பெண் கொடிபானின்று தொடங்குவதாதலின், இனி ஒளி பெருகும் விளக்கு என்று உவமித்தார். இது உள்ளுறை. ஒவ்வொரு பெண்மகவும் ஒவ்வோர் குடியினை விளக்கம் செய்யவுள்ளதாதலும், முதல்மகவு பெண்ணாய்ப் பிறந்தால் குடி பெருகும் என்பது உலக வழக்காதலும் மேற்பார்வையான குறிப்பாகும். பெருகு என்ற குறிப்பு காண்க.

37

1754.

மடமக டன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான்முன்
புடனுறை வஞ்சி நீத்த வொரு பெரு மனைவி யாரைத்
தொடர்வற நினைந்து தெய்வத் தொழுகுல மென்றே கொண்டு
கடனமைத் தவர்தந் நாமங் காதல்செங் மகவை யிட்டான்.

38

(இ-ள்.) மடமகள்...பேணி - பெண் மகவைப் பெற்று அதற்குப் பேரிடும் மங்கலச்சடங்கு செய்ய எண்ணி; தான் முன்பு...கொண்டு - தான் முன்பு உடன் வாழ்தலை அஞ்சி நீத்துவிட்டு வந்த ஒப்பற்ற பெருமனைவியாரை இல்லறத் தொடர்பு அற நினைந்து தெய்வத்தன்மை வாய்ந்த தொழுதற்குரிய பொருளாவர் என்றே துணிவு கொண்டு; கடன் அமைத்து - உரிய சடங்குகளைச் செய்து; அவர்...