பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்867

 

1755. (வி-ரை.) இந்நிலை - முன் 1748 முதல் 1754 வரை உள்ள ஏழுபாட்டுக்களாலும் தொடர்ந்து கூறிவந்த வரலாற்றின்படி வணிகன் வாழ்ந்த நிலைமை. இவன் - வணிகன். இங்கு - பாண்டி நாட்டு ஓர் பட்டினம். இதுவரை வணிகனது செய்தி கூறிவந்தாராதலால் நம் கருத்துக்கள் அணிமையில் உள்ள வணிகன்பாலும் அவன் தங்குமிடத்திலும் அவன் நிலையிலும் தங்கிருந்தமை குறிக்க அணிமைச் சுட்டுக்கள் மூன்றும் அடுக்கிக் கூறினார்.

இப்பால் - அவ்வாறு வரலாற்று முறையில் வணிகனது செய்தி அணித்தாயுள்ளதாயினும், நமது சிந்தையில் என்றும் அணுக்கராய் உள்ளவர் அம்மையார் என்பது தோன்ற இப்பால் என்றார்.

கன்னி மதில் - காவல் கட்டழியாத மதில்; பகைவர்களால் அழிக்கப்படாத மதில் என்று குறிக்க இவ்வாறு கூறுதல் மரபு.

தன்னிகர் கடந்த செல்வ - மகளார் என்று கூட்டுக. அம்மையாரைத் தனக்கு மகளாராகப் பெற்றது ஒப்பில்லாத பெருமையாதலின், தன் நிகர் கடந்த தனதத்தன் என்று கூட்டினுமமையும்.

கற்பினோடு மனையறம் புரிந்து - கணவனும் பெரியோருங் கற்பித்தவாறு மனையினிடையமர்ந்து உலக நிலையில் உரிய அறங்களைச் செய்து. புரிந்து - என்பது பாடமாயின் மனையறங்களை வழுவாமற் காத்து என்க. மனையறம் - இல்லத்தில் உள்ளவர் செய்வன. அறம்புரிந்து மனை வைக என்று கூட்டிப் பதிதருமம் பசுதருமம் என்ற இரண்டினையும் மனையின் வைகிச் செய்திருந்தனர் என்பதுமாம்.

எய்த விருந்தனன் - என்பதும் பாடம்.

39

1756. (வி-ரை.) "விளைவளம்...இருந்தான்" - இது அம்மையாரின் கிளைஞர்கள் கேள்வியுற்ற செய்தி.

விளை வளம் - விளை - விளைக்கும் - வாணிபத்தின் மூலம் உளதாக்கும். வளம் - நிதியும் அயல்நாட்டுப் பண்டங்களும் பிறவுமாம். பெருக்க - பெருக்கி வருவேன் என்று.

ஓர் மாநகர் - "ஓர் பட்டினம்" (1750) பார்க்க.

அமர்ந்து - விரும்பி. அங்கு அமர்ந்து இனிதிருந்தான் என்ற இலேசினால் இப்பால் காரைக்கால் நகரின் தொடர்பை விரும்பாமலும் அதனை இனிதாகக் கொள்ளாமலும் என்றது குறிப்பு.

கேட்டார் - அறிந்த அயலவர் வந்து கூறக் கேட்டார். இச்செய்தி இவர்களுக்கு வந்து சேர்தற்கு இவ்வாறு ஒரு சில ஆண்டுகள் சென்றதென்னை? எனின், அவ்வணிகன் முன்னை மணத்தின் செய்தி ஒரு சிறிதும் புறம் வராமற் காத்தமையும், அந்நாடு கப்பற் செலவிற் சாரும் நெடுந்தூரமுள்ள வேறு நாடாயினமையும், அந்நாளிற் போக்குவரத்து வசதிகளும், செய்திகளை அறியும் பிற வசதிகளும் இல்லாமையும், பிறவும் அச்செய்தி விரைவிற் பரவாமற் செய்தன என்க. குறிப்பிடப்படாத பிறர் சொல்ல என்பார் இன்னாரிடமாக என்றுங் கூறாது விடுத்தார்.

அன்றே - அதிசயக் குறிப்புப்பட நின்ற அசை. "மம்மர்கொள் மனத்தர்" என மேற் கூறுதல் காண்க.

40

1757.

அம்மொழி கேட்ட போதே யணங்கனார் சுற்றத் தாருந்
தம்முறு கிளைஞர்ப் போக்கி யவனிலை தாமுங் கேட்டு,
மம்மர்கொண் மனத்த ராகி, "மற்றவ னிருந்த பாங்கர்க்
கொம்மைவெம் முலையி னாரைக் கொண்டுபோய் விடுவதென்றார்.?

41