மகவுதன்னைப் பேரிட்டேன் - மகவுக்கு அத்தெய்வத்தின் பேரை இட்டேன். ஆதலாலே பொற்பதம் பணிந்தேன் - "வணங்குவதென்கொல்" என்று கேட்ட வினாவுக்கு விடையாக வணங்கியதற்குக் காரணம் கூறியவாறு. நீரும் போற்றுதல் செய்மின் - நீவிர்களும் இவரை மானுடம் என்று எண்ணி ஏமாறாது உரியபடி வழிபட்டுய்யுங்கள். நான் வணங்கியதுபற்றி வெள்கி அது தகாதென்று நீங்கள் கருதியது தகாது. நான் அறிந்து ஒழுகிய ஒழுக்கத்தை உரைத்தேன். நீவிர் இதுகாறும் அறியாமலும் வழிபட்டு நன்மை பெறாமலும் இருந்ததுதான் தவறு. இனியாவது அறிந்து வழிபட்டு உய்யுங்கள் - என்று அவர்களை வழிப்படுத்தியவாறு. இவ்வாறு தன்னை அறியாமலே அவர்களுக்கு விடை சொல்லும் முகத்தால் அவர்களையும் வழிப்படுத்தினான் என்க. இப்பாட்டினால் வணிகன் தன் சிந்தனையில் வஞ்சனையாகப் பல காலம் பொதிந்து வைத்த கருத்தை முதல் முதல் உலகறிய வெளியிட்ட நிலை கூறப்பட்டது. அம்மையார்பால் வணிகனது உலகத்தொடர்பு வணிகனளவில் கனி கண்டு மறைந்த அன்றே நீங்கினும், அம்மையார் அவனது மனநிலை அறியாராதலின் அவரது திருமனங்கொண்ட அளவில் உலகநிலைக் கற்பு ஒழுக்கம்பற்றி இதுவரை நிலவிற்று. இச்செய்தி கேட்டவுடன் அது நீங்கும்நிலை மேல்வரும் பாட்டாற் கூறுவார். நானறிந்தகன்று - என்பதும் பாடம். 47 1764. | என்றலுஞ் சுற்றத் தாரு"மிதுவென்கொ"லென்று நின்றார்; மன்றலங் குழலி னாரும் வணிகன்வாய் மாற்றங் கேளாக் கொன்றைவார் சவடயி னார்தங் குரைகழல் போற்றிச், சிந்தை யொன்றிய நோக்கின் மிக்க உணர்வுகொண் டுரைசெய் கின்றார். |
48 1765. | "ஈங்கிவன் குறித்த கொள்கயைிது; வினி யிவனுக் காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங், குன்பால் ஆங்குநின் றாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப் பாங்குற வேண்டு" மென்று பரமர்தாள் பரவி நின்றார். |
49 1764. (இ-ள்.) என்றலும்...நின்றார் - என்று இவ்வாறு வணிகன் சொல்லக் கேட்டலும், சுற்றத்தார்கள் "இது என்னை கொல்லோ?" என்று ஒன்றும் தோன்றாது நின்றனர்; மன்றல்...கேளா - மணந் தங்கிய கூந்தலையுடைய அம்மையாரும் வணிகன் சொல்லிய மாற்றத்தைக் கேட்டு; கொன்றை...போற்றி - கொன்றையணிந்த நீண்ட சடையினையுடைய சிவபெருமானது சத்திக்கின்ற கழலினையணிந்த திருப்பாதங்களைத் துதித்து; சிந்தை...கொண்டு - மனம் ஒன்றிய அகநோக்கின் மிக்க உள்ளுணர்ச்சியினை மேற்கொண்டு; உரைசெய்கின்றார் - உரை செய்வாராகி. 48 1765. (இ-ள்.) ஈங்கு இவன் குறித்த கொள்கை இது - இங்கு இவ்வணிகன் உட்கொண்டு குறி வைத்த கொள்கை யிதுவாகும்; இனி - இனிமேல்; இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி இங்குக் கழித்து - இவன் பொருட்டுத் தாங்கிக்கொண்டு நின்ற அழகு நிற்றற்கிடமாகிய தசை பொதிந்த சுமையினை இங்குக் கழித்துவிட்டு; உன்பால்...வேண்டும் - உன்னிடம் அவ்வுலகத்தில் நின்பாதங்களைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்; என்று...நின்றார் - என்று வேண்டிப் பரமருடைய திருவடிகளைத் துதித்து நின்றனர் 49 |