உலகமெல்லாம் உய்யவே - இவ்வொரு மொழியாகிய அம்மையாரின் திருப் பெயர் ஒன்றினை வழிபடுதலாலே உலகம் உய்யப்பெறும் என்பது. மொழியை வழிபடுதல் - மனம் வாக்குக்களால் சிந்தித்தலும் சொல்லுதலும், ஏகாரம் தேற்றம். 58 1775. | அங்கண "னம்மை யே!" யென்றருள்செய, வப்பா!" வென்று பங்கயச் செம்பொற் பாதம் பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச், சங்கவெண் குழையி னாருந் தாமெதிர் நோக்கி, "நம்பால் இங்குவேண் டுவதென்?" னென்ன விறைஞ்சிநின் றியம்புகின்றார், |
59 1776. | இறவாத வின்ப வன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் "பிறவாமை வேண்டு; மீண்டும் பிறப்புண்டே லுன்னை யென்றும் மறவாமை வேண்டு; மின்னும் வேண்டுநான் மகிழ்ந்து பாடி யறவாநீ யாடும் போதுன் னடியின்கீ ழிருக்க" வென்றார். |
60 1775. (இ-ள்.) அங்கணன்...அருள்செய - இறைவர் "அம்மையே!" என்று அருளிச் செய்ய; "அப்பா" ...தம்மை. "அப்பா!" என்று ஆர்வம்படச் சொல்லிக்கொண்டு தாமரைபோன்ற அழகிய பொன்போன்ற பதங்களில் பணிந்து வீழ்ந்து எழுந்து நின்ற அவரை; சங்கவெண்...நோக்கி - சங்கினாலாகிய வெள்ளிய குழையை யணிந்த சிவபெருமானும் எதிர்நோக்கி; "இங்கு...என்ன - இங்கு நம்மிடம் நீ வேண்டும் வரம் என்னை?" என்று அருள; இறைஞ்சி நின்று இயம்புகின்றார் - பணிந்து நின்று சொல்வாராகி, 59 1776. (இ-ள்.) இறவாத...வேண்டுகின்றார் - என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிக்கொண்டு, பின்னும் வேண்டுவாராய்; "பிறவாமை வேண்டும்...இருக்க" என்றார் - "இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும்; ஆனால் மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாதிருக்கும் வரம் வேண்டும்; அறவா! மேலும் வேண்டுவது தேவரீர் அருட்கூத்து ஆடுகின்றபோது மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டு உமது திருவடியின் கீழே இருக்கும் பேறு ஆகும்" என்றனர். 60 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1775. (வி-ரை.) அங்கணன் - இமயவல்லி திருக்கண்ணோக்கில் "எற்பின்யாக்கை யன்பு" என்னே? என்றமைய, இறைவரது திருக்கண் நோக்கில் "நம்மைப் பேணும் அம்மை" என்றமைந்து அவ்வாறே அழைக்கப்பெறும் சிறப்பு நோக்கி அங்கணன் என்றதாம். அருட்பார்வை செய்து என்றபடி. அங்கண்மை - அருள் நோக்கம். அருள்செய என்ற குறிப்புமது (753 பார்க்க). "அப்பா" என்றது உலகமெலாம் தோன்றி நின்றொடுங்குதற்குக் காரணமானவன் என்ற பொருள் தந்து நின்றது. "ஒடுங்கி மலத்துளதாம்" (சிவஞான போதம் 1 சூ); "உலகமெலாம் ஈன்றவனே" (நம்பி - தேவா - வெண்பாக்கம்); "யாவர்க்குந் தந்தைதா யெனுமவர்" (திருஞான - புரா - 69) முதலிய திருவாக்குக்கள் காண்க. உனது படைப்பிலே வந்து நின்று மீள உன்னிடம் வந்து ஒடுங்குகிறேன் என்றது குறிப்பு. தம்மைப் பேணிய அன்பின் தன்மைபற்றி அம்மை என்று இறைவர் அருள, அத்தன்மையும் நீ தரவந்தது; நீயே முதல்வன் என்று அம்மையார் கூறிய குறிப்பும் காண்க. தம்மை அடிபணிந்த திருநாவுக்கரசு நாயனாரை ஆளுடையபிள்ளையார் எடுத்திறைஞ்சி "அப்பரே" என, அவரும் "அடியேன்" என்றார் (1447) என்ற கருத்தை இங்கு வைத்துக் காண்க. |