பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்971

 

தென்றுகொண்டு வரைந்ததன் பொருளாகிய தன்னையே தாம் கண்டனர் என்ற அரியதொரு பொருள் தர நிற்பதும் காண்க. "காண்பிட மேதெனிற், புண்ணியன் புகலூருமென் னெஞ்சுமே" (குறுந்); "அம்பலத் தாடி பாதமென் னெஞ்சுளிருக்கவே" (குறுந்); "தொண்ட ரகமலாற் கோயிலில்லை யையனை யாறனார்க்கே" (நேரிசை); என்றபடி இறைவரை அடியார்கள் மனத்தினுட் காணுமாறுபோல, நாயனாரை அப்பூதியார் திருமணத்தினுள்ளும் அவரது தண்ணீர்ப் பந்தரினும் காணலாம் என்க. தம்மை மறந்து சிவனையே நினைக்கும் நாயனார் தம்மை ஈண்டுக் காணலாயினர் என்பதுமாம். "சிக்கெனப் பிடித்தேன்" "புறம்போக வொட்டேனே" என்பவை இங்குப் பொருந்துவன.

6

1789.

"இப்பந்த ரிப்பெயரிட் டிங்கமைத்தா ரியா"ரென்றார்க்
 கப்பந் ரறிந்தார்க "ளாண்டவர செனும்பெயராற்
 செப்பருஞ்சீ ரப்பூதி யடிகளார் செய்தமைத்தார்;
 தப்பின்றி யெங்குமுள சாலைகுளங் கா"வென்றார்.

7

(இ-ள்.) இப்பந்தர்...என்றார்க்கு - "இந்தப் பந்தரை இந்தப் பெயரை இட்டு இங்கே அமைத்தவர் யாவர்?" என்று கேட்ட நாயனாருக்கு; அப்பந்தர் அறிந்தார்கள் - அந்தப் பந்தரின் வரலாற்றை அறிந்த அங்கு இருந்தவர்கள் - "ஆண்ட அரசு எனும் பெயரால்...கா" என்றார் - ஆண்ட அரசு எனும் பெயரினாலே சொல்லுதற்கரிய சிறப்புப் பொருந்திய அப்பூதியடிகளார் செய்து அமைத்தனர்; தவறுதல் எதுவும் இன்றி இன்னும் இவ்வாறே சாலை, குளம், சோலை இவைகளும் எங்கும் உள்ளன என்றார்.

(வி-ரை.) இப்பந்தர் இப்பெயரிட்டு இங்கு அமைத்தார் யார் - இப்பந்தர், இங்கு - இகரச்சுட்டுக்கள் பந்தரின் சிறப்பையும் இடவமைதியின் நலத்தையும் குறித்தன. இப்பெயர் - எதிர்பாராத இந்தப்பெயர் என்க. யார்? - இவ்வினா அங்குள்ளாரைப் பொதுப்பட நோக்கி அரசுகள் நிகழ்த்தியது தமக்குத் தாமே வினாவினவிக் கொண்டனர் என்றலுமாம். இகரச் சுட்டுக்கள் அரசு அப்பந்தரினுள் இருந்த அணிமை குறித்தன; "மச்சிது செய்தார் யாரோ?" (757) என்புழிப்போல, சிறந்த இந்த அறத்தினைச் செய்த நல்லோர் தமது பெயராற் செய்யாது வேறு பெயராற் செய்த கருத்தை அறிய விரும்பினரன்றித் தன்மைப் பற்றிய பெருமையாலன்று என்க."இதற்கென்னோ கருத்து?" (1790) என்றதும்; "வேறொரு பேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்?" (1794) என்றதும் காண்க.

"ஆண்டவரசு...கா" என்றார் - இது அங்கிருந்தார்கள் சொல்லியது. அவர்கள் அந்தப்பந்தரினை - அதன் வரலாற்றினை - அறிந்தவர்கள் என்பது. அவரைச் சார்ந்தார் புகழ்ச்சிமொழி யன்றி அப்பந்தர் முதலிய அறங்களை உள்ளவாற்றிந்தோர் எடுத்துக்கூறிய உண்மை மொழி என்பார், அவரை அறிந்தார் என்னாது அப்பந்தர் அறிந்தார்கள் என்றார்.

ஆண்ட அரசு என்னும் பெயரால் செய்தமைத்தார் - கா - என்று பிரித்து, அரசே! உமது திருப்பெயரால் செய்தனர்; அவரைக் காப்பீராக" எனத் தம்மை அறியாமலே அவர்கள் வாக்கில் வந்த உண்மையின் தொனிக்குறிப்பும் காண்க. 702 - 715 முதலியவை காண்க. இவர்கள் திருநாவுக்கரசர் பெருமானை நேர்கண்டு பேசப்பெறும் பேறு பெற்ற பெரு மக்களன்றோ?

அப்பூதியடிகளார் - முன்னர்த் திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் கூறிய தன் தொடர்ச்சியாக இப்புராணங் கூறினாராதலின் நாயனாரது பெயர் தானும்