பெரியோர் மரபு. "இறுமாந் திருப்பன் கொலோ" என்ற நாயனாரது தேவாரமும், "யாவரும் பெற்றறியா வின்பத்துள் வைத்தாய்க்கு", "அம்மையெனக் கருளிய வாறார்பெறுவா ரச்சோவே" என்பனவாதி திருவாசகங்களும், "சேவடிக்கீழ், ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில்" என்ற திருப்பல்லாண்டும், பிறவும் பார்க்க. ஏகாரம் அசை.  78 வேறு 1344.  | இன்ன தன்மையி லிவர்சிவ நெறியினை யெய்தி மன்னு பேரருள் பெற்றிடர் நீங்கின வண்ணம் பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரிற் புன்மை யேபுரி யமணர் தாங் கேட்டது பொறாராய்,  |  
 79 1345.  | "தரும சேனர்க்கு வந்தவத் தடுப்பருஞ் சூலை  யொருவ ராலுமிங் கொழிந்திடா மையினவ ருயப்போய்ப்  பெருகு சைவராய்ப் பெயர்ந்துதம் பிணிமொழிந் துய்ந்தார்;  மருவு நம்பெருஞ் சமயம்வீழ்ந் தது"வென மருள்வார்,  |  
 80 1346.  | "மலையும் பல்சம யங்களும் வென்றுமற் றவரால்  நிலையும் பெற்றவிந் நெறியினி யழிந்த"தென் றழுங்கிக் ‘கொலையும் பொய்ம்மையு மில'மென்று கொடுந்தொழில் புரிவோர்  தலையும் பீலியுந் தாழவந் தொருசிறை சார்ந்தார்.  |  
 81 1344.(இ-ள்.) வெளிப்படை. இத்தன்மையில் இவர் சிவநெறியினை அடைந்து, நிலைபெற்ற பேரருளைப பெற்றுத், துன்பத்தினின்றும் நீங்கிய படியினை, எடுத்துப் பேசப்படும் பழைமையிற் பொருந்திய பாடலிபுத்திரம் என்னும் நகரத்தில் இருந்த, புன்மைகளையே புரிகின்ற சமணர்கள் கேட்டு அதனைப் பொறாதவர்களாகி, 79 1345.(இ-ள்.) வெளிப்படை. "தருமசேனருக்கு வந்த அந்தத் தடுத்தற்கரிய சூலை இங்கு ஒருவராலும் நீங்காமையால், உய்யும்பொருட்டு அவர் சென்று பெருகு சைவராகிப் பெயர்ந்து தம்முடையபிணிநீங்கி உய்தியடைந்தனர்; பொருந்திய நமது பெருஞ் சமயம் வீழ்ந்துபட்டது" என்று மருள்வாராகி,  80 1346.(இ-ள்.) வெளிப்படை. மாறுபடும் பல சமயங்களையும் வென்று, மற்று, அவரால் நிலைக்கவும் பெற்ற இந்தச் சமணநெறி இனி அழிவுபட்டதாகும்" என்று வருந்தி, ‘நாம் கொலை புரிவதும் பொய் புரிவதும் இல்லோம்' என்று சொல்லிக்கொண்டு கொடுமையினையே புரிவோர்களாகித், தமது மயிர்பறித்த தலைகளும் கைக்கொண்ட மயிற்பீலியும் தாழ, வந்து ஒரு சிறை சார்ந்தனர்.  81 இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1344.(வி-ரை.) அமணர் - வண்ணம் - கேட்டு - அது பொறாராய் - என மருள்வா(ராய்) - அழுங்கிக் - கொடுமையே புரிவோர் - வந்து - சார்ந்தார் என்று இந்த மூன்று பாட்டுக்களையும் கூட்டி முடித்துக்கொள்க. இன்ன தன்மையில் - முன்னர் 1320 முதல் 1342 வரை விரித்தபடி என்க. சிவநெறியினை.....வண்ணம் - சிவநெறியினை எய்தி - அவநெறியாகிய புறச்சமயத்தினை விட்டுச் சிவநெறியினை அடைந்து. இங்கு, நெறி என்பது சாதனம் குறித்தது. அருள்பெற்றதும் - இடர் நீங்கியதும் அதனாற்பெற்ற பயன்,  |