ழியத் துமியாத பக்கமெல்லாம் சிலந்தியின் கொப்புள் காண்க" என்று காட்டும் பேறு பெற்றவர். வேத நீதியில் விளங்கிய சாத்தமங்கையில் அவதரித்த திருநீலநக்கர் என்னும் வேதியராவர். பூதி - திருநீறு - செல்வம் - ஐசுவரியம். விபூதி என்ப. ஊதித் துமிதலாவது - வாய்நீர் படப் பெருங் காற்றுடன் ஊதுதலால் விலக்குதல். "ஊதிமேற் றுமிந்தனர் போக" (1839); நீப்ப - "உன்னை யானினித்துறந்தன னீங்கு" (1842) என்று நீத்துவிடுதல். உப்பால எல்லாம் - ஊதித் துமியாத மற்றப்புறம் எங்கும். உகரச் சுட்டுச்சேய்மைக்கும் அணிமைக்கும் இடைநிற்கும் நிலை குறித்தது. "எமை யூதிமுன் துமிந்தபால் ஒழிய" (1845); பேதித்து எழுந்தன - மேனியின் இயல்பு வேறுபட்டுக் கொப்புள் எழுந்தன. "கொள்ளு மிப்புறஞ் சிலம்பின் கொப்புள்" (1845); காட்டும் - கனவினில் காட்டும். "கனவில், வெள்ள நீர்சடை யொடுநின்று மேனியைக் காட்டி" (1845) நீதி - வேத நீதியும் வைதிக ஒழுக்கமும்; நீதித் திகழ்சாத்தை என்றும், நீதித்திகழ் நீலநக்கன் என்றும் ஈரிடத்தும் கூட்டியுரைக்க நின்றது. வேத நீதியாவன தர்மத்தில் நடத்தலும், சத்தியத்தைச் சொல்லுதலுமாம். வேதஒழுக்கம் முத்தீ வளர்த்தல். அந்நகரில் வேதநீதிவிளங்குதல் 1830 ஆம் பாட்டிலும், நாயனார்பால் விளங்குதல் 1832ஆம் பாட்டிலும் விரித்தல் காண்க. நீதி - சிவனருளிய வேதமே நீதிகட் கெல்லாம் மூலமாகலின் நீதி என்பதுவேத நீதி என்பதாம். நீதித்திகழ் - வேதியனே என்பதனாலும் இது விளங்கும். "நீதியும் வேத நீதியாகியே நிகழ்ந்த தெங்கும்" (திருஞான - புரா - 858); நாயனார் வேத நீதி நெறி நிற்றல் 1832ம் பாட்டிலும், வைதிக ஒழுக்கமாகிய வேள்வி "ஆங்கு வேதியிலறாதசெந்தீ" (1858) என்றதிலும் விரிக்கப்பட்டன. ஆளுடைய பிள்ளையாரது திருமணவேள்விச் சடங்குகளை இந்நாயனார் செய்தமை (திருஞான - புரா -1239) இங்குக்கருதுக. பிஞ்ஞகன் காட்டுமவன் - வேதியனே என்று முடிக்க. பிஞ்ஞகனாற் காட்டப் பெற்றவன் எனக் கொள்க. வேதியன் - இவர் மறையவந் குலத்தாராயினும் விதிப்படி சிவதீககை பெற்றுச் சிவனையே தமது ஆன்ம நாயகராகக் கொண்டு சிவகாம விதிவழி ஆன்மார்த்த பூசை செய்யும் மகா சைவராகிய வேதியர் என்பது மெய்த்த வாகம விதிவழி வேதகா ரணரை, நித்தல் பூசனை புரிந்தெழு நியமமுஞ்செய்தேறு (1833) என்று ஆசிரியர் விரித்தவாற்றாற் காண்க. இவர் அயவந்திநாயகரைத் திருக்கோயிலிற் பூசித்ததும் பரார்த்த பூசையின்றி அவ்வாறே ஆன்மார்த்த பூசை என்பதும் கருதப்படும். இது சிவதீக்கை பெற்றவழி விசேட விதியாற் கொள்ளப்படும். அற்றாகலின "பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை யர்ச்சித்தால்" என்பது முதலாகத் திருமூலர் கூறும் சிவாகம விதிகளுடனும், பரார்த்த பூசை சிவவேதியர்க்ளுக்குரியன என்று "வழிவழியே திருத்தொண்டின், விரும்பியவர்ச் சனைகள்சிவ வேதியர்க்ே்க யுரியன" (முப்-திரு-தீண்-புரா-2) என்னும் திருமுறைத் திருவாக்குடனும் முரண்படாமை யறிக. ஊரும் பேரும் சரிதக் குறிப்பும் தொகைநூல் உணர்த்திற்று; அவற்றோடு புராணத்துக் காதரவாகிய சரித வரலாற்றுப் பகுதிகளும் வகைநூல் வகுத்தபடி மேற்காட்டப்பட்டது. இவை விரிநூலுள் விரித்தபடி பின்னர் மேலும் கண்டுகொள்க. 1828. (இ-ள்.) பூத்த...உகளும் - மலர்ந்த தாமரையினது பொருட்டின் மேல் பொரும் கயல் மீன்கள் துள்ளுகின்ற; காய்த்த...சூழ் - விளைந்து முதிர்ந்த செந்நெற் பயிர்களாகிய காடு சூழ்கின்ற; காவிரி நாட்டு - காவிரி பாயும் சோழ நாட்டில்; மங்கலம் வாய்ந்த மறையவர் முதற்பதி வனப்பு - மங்கலங்கள் வாய்க்கப்பெற்ற மறையவர்க் கிடமாகிய முதன்மையுடைய பதியின் சிறப்பு; சாத்த |