பாடுவ பல பூவை பயிற்றுவ - என்று கூட்டுக. பாடுவ - பாடுவனவாகிய அகரவீற்றுப் பலவின்பாற் பெயர்; "கொம்பு பெயர்; கொம்புந்துவ குயிலாலுவ" (பிள் - நட்ட பாடை - அண்ணா - 11) என்றாற்போல; பாடுதலினாலே பயிற்றுவன என்று காரணப் பொருள்படக் கொள்க. பாடுதலாகிய ஒரு செயலால் தம்மை யறியாமலே பயிற்றுதலையும் செய்தன; தடம்படிய - கிடையுடன் பாடுவ - பயிற்றுவ - என்ற இவற்றால் நகரச் சிறப்பு நகர்ப்புறத்து அமைதிகளாலும் நிகழ்ச்சிகளாலும் கூறப்பட்டது. மேல்வரும் பாட்டில் அகநகர் நிகழ்ச்சி பற்றி நகரச் சிறப்புக் கூறுவதும், முன் பாட்டில் ஆறு - நாடு - நகர் - குடி - வளங்கள் கூறியதும் ஆகிய அமைதிகள் காண்க. தடமும் - கிடையும் - இவை நகர்புறத்தில் அமைதியும் முன்னாளின் நகர அமைப்பும் குறித்தன. மடவார் மலர்த்தடம் படிய - 1210 ஆம் பாட்டுப் பார்க்க. பெண்கள் நகரின் புறத்துச் சென்று தடங்களின் நீர்மூழ்கி வருதல் - நகரச் சிறப்பாவதோடு, உடல் நலத்துக்குரியது. திருவாசகத்தினுள் திருவெம்பாவைப் பகுதியில் இது பற்றிச் சிறப்பித்துக்கூறியவை யெல்லாம் இங்குக் கருதத்தக்கன. மறைக்கிடையுடன் பாடுவ பலபூவை பயிற்றுவ - சிறார் கலை பயிலுதலும், குலவித்தை பயிலுதலும், ஞானக் கலை பயிலுதலும் வேண்டும் என்ற குறிப்பும் உடன் காண்க. இவை பற்றி முன் சண்டீசநாயனார் புராணத்துட் கூறியவையெல்லாம் பார்க்க. ஆடுவ - பாடுவ - பயிற்றுவ - மங்கலப்பொருள் முன்வைத்துத் தொடங்கியதற்கேற்ப, ஆடல் பாடலாகிய மங்கலச் செயல்களை அடுத்துவைத்த நயமும் காண்க. நீராடலும் மறை பயிலுதலும் ஆகிய மறையவர் ஒழுக்கக் குறிப்புமாம். அன்னம்ஆடுவ பாடுவ பூவை பயிற்றுவ - நடையால் சிறந்த அன்னம் - அதன் மேலும் ஆடல் பயின்றது; பேச்சினால் - பாடலால் - சிறந்த பூவை அதன்மேல் பயிற்றலையும் செய்தது என இவற்றின் சிறப்புப்பற்றி நகரச் சிறப்பும் கூறிய குறிப்பும் காண்க. இவை அறிவு நிரம்பாத ஏனைப் பிராணிகளால் காணும் சிறப்பு. அறிவுடை மக்களால் வரும் சிறப்பு மேற்பாட்டில் கூறுவார். சாமம் பாடுவ - மறையவர் முதற்பதியாதலின் அவர்கள் ஓதுதல் கேட்ட பூவைகள் அக்கேள்வித் துணையாலே தாமும் சாமம் பாடின என்ற குறிப்பினால் மறையவர் ஒழுக்கமும் பெறவைத்த நயமும் காண்க. "தெள்ளுமோசைத் திருப்பதிகங்கள் பைங், கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்" (93) என்ற கருத்தும் காண்க. அன்னம் விரவி ஆடுவ; பூவை சாமம் பாடுவ - "அன்ன மாடு மகன்றுறைப் பொய்கை2 (69) என்றபடி ஏனை யன்னங் களும் துறைகளில் ஆடினும், இவை மடவாருடன் விரவி ஆடுதலாற் சிறந்தன; ஏனைப் பூவை களும் பாடினும் இங்குச் சாமம் பாடுதலால் இவை சிறந்தன என்ற நயமும் காண்க. 2 1830. | "ஆய்ந்த மெய்ப்பொரு ணீ"றென வளர்க்குமக் காப்பில் ஏய்ந்த மூன்றுதீ வளர்த்துளா ரிருபிறப் பாளர்; நீந்து நல்லற நீர்மையில் வளர்க்குமத் தீயை வாய்ந்த கற்புட னான்கென வளர்ப்பர்கண் மடவார். |
3 (இ-ள்.) ஆய்ந்த...காப்பில் - ஆராய்ந்து தெளிந்த உண்மைப் பொருளாவது திருநீறேயாம் என்று கொண்டு வளர்த்து வருகின்ற காவலினுள்; ஏய்ந்த...இருபிறப்பாளர் - இருபிறப்பாளராகிய மறையவர் - பொருந்திய மூன்று தீயினையும் |