பக்கம் எண் :


1028திருத்தொண்டர் புராணம்

 

தொண்டராம் அன்பர் - அருளுடைமையும் அன்புடைமையும் குறிக்கப்பட்டன. தொண்டராந் தன்மை நாயனார் சரிதத்து முற்பகுதியிலும், அன்புடைமை பிற்பகுதியிலும் விளங்கக் காண்க. அன்பராம் தொண்டர் என்னாது இவ்வாறு கூறிய கருத்துமது. மேல்வரும் பாட்டில் "நாதர் தம்மையும் அவரடியாரையும்...அர்ச்சனை புரிவதும் பணிவதும்" என்ற வைப்பு முறையும் காண்க.

நீலநக்கனார் - நாயனாரது இயற்பெயர். ஒரு பாகம் நுலநிறமுடைய நக்கர் என்ற பொருள் தந்து சிவபெருமானது திருநாமங் குறிப்பது என்பர்.

என்பவர் எனப்படுவர். "இல்வாழ்வா னென்பான்" (குறள்) என்புழிப் போலக் கொள்க.

நிகழ்ந்துளார் ஆனார் நிகழ்தல் - உலகம் தேற்றமாய் அறிந்து எடுத்துரைக்க விளங்குதல். ஆனார் - "உளரானார்" (1281); ஆனார் மூதூர் - நலத்தார் - அன்பர் - நீலநக்கனார் - நிகழ்ந்துளார் - நீலநக்கர் அன்புமிக்க சீலத்தாலும், மூதூர், அவராலும் உலகில் தேற்றம் பெற அறியப்பட்டு விளங்கிய உண்மை "நிறையினார் நீலநக்கன்னெடுமா நகரென்று தொண்டர், அறையுமூர் சாத்தமங்கை யயவந்தி" - (11) என்ற ஆளுடைய பிள்ளையாரது திருவாக்கானு மறிக.

4

1832.

வேத வுள்ளுறை யாவன விரிபுனல் வேணி
நாதர் தம்மையு மவரடி யாரையு நயந்து
பாத வர்ச்சனை புரிவதும் பணிவது" மென்றே
காத லாலவை யிரண்டுமே செய்கருத் துடையார்;

5

1833.

மெய்த்த வாகம விதிவழி வேதகா ரணரை
நித்தல் பூசனைபுரிந்தெழு நியமமுஞ் செய்தே,
யத்த ரன்பருக் கமுதுசெய் விப்பது முதலா
வெத்தி றத்தன பணிகளு மேற்றெதிர் செய்வார்;

6

1834.

ஆய செய்கையி லமருநா ளாதிரை நாளின்
மேய பூசனை நியதியை விதியினான் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லைநீ டயவந்தி யமர்ந்த
நாய னாரையு மருச்சனை புரிந்திட நயந்தார்.

7

1832. (இ-ள்.) வேத உள்ளுறை ஆவன - வேதங்களில் உள்ளுறை பொருளாகக் கிடைப்பன; விரிபுனல் வேணி...என்றே - விரிந்த புனலைத் தரித்த சடையினையுடைய தலைவராகிய சிவபெருமானையும் அவரடியார்களையும் அன்பினாலே பாத அருச்சனை செய்வதும் பணிவதுமேயாம் என்று தெளிந்து; காதலால்....கருத்து உடையார் - காதல் மிகுதியினால் அவ்விரண்டு செய்கைகளையுமே செய்யும் கருத்தினை உடையவராய்;

5

1833. (இ-ள்.) மெய்த்த...செய்தே - உண்மைப் பொருளைக் காட்டுகின்ற சிவாகமங்களின் விதிப்படி வேத முதல்வராகிய சிவபெருமானை நித்தமும் பூசை செய்தெழும் நியமங்களையெல்லாம் செய்து முடித்தும்;அத்தர்....செய்வார் - சிவனது அன்புடையார்களுக்குத் திருஅமுது செய்விப்பது முதலாக எல்லாத் தன்மையினாலும் கூடிய அடியவர் பணிகளையும் தாமே மேற்கொண்டு முன்பு செய்வாராகி;

6

1834.(இ-ள்.) ஆய...நாள் - இவ்வாறாகிய செய்கையில் வழுவாதுஅமர்ந்து ஒழுகிவரு நாளில்; ஆதிரை நாளின்....முடித்து - ஒரு திருவாதிரை நாளிலே பொருந்திய சிவபூசை நியதியினை விதிப்படி முடித்துக்கொண்ட பின்னர் தூய