பக்கம் எண் :


திருநீலநக்க நாயனார் புராணம்1029

 

தொண்டனார்....நயந்தார் - தூய தொண்டராகிய திருநீலநக்கனார், பழமையாய் நீடியுள்ள அயவந்தி என்னும் திருக்கோயிலின் கண் விரும்பி எழுந்தருளிய தலைவராகிய சிவபெருமானையும் அருச்சனை விடாது செய்ய நினைந்தனர்.

7

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன.

1832. (வி-ரை.) உள்ளுறை - உட்கருத்து; கருத்து என்றலே யமையுமாயினும் உள்ளுறை என்றது கருத்தினுள்ளும் நுழைந்து அழுந்திக் கண்டலான்றித் தோற்றப்படாததாய் உயிர்போல அமைந்துள்ளது. உறை - உறு பகுதி; பொருந்துதல்; ஐ - வினைமுதற்பொருள் விகுதி.

நாதர்...பணிவதும் - சிவனை அருச்சிப்பதும் அடியாரைப் பணிவதும் என்ற இவையே அனந்தமாய்ப் பரந்து செல்லும் வேதங்களின் உள்ளுறை என்பது. வேதங்களின் பயன் சைவமாம். என்னை? "வேதப் பயனாம் சைவம்" (1214) என்பது சண்டீச நாயனார் புராணத்துள்ளே நாட்டப்பட்து. சிவனை வேதம் தனது இருதயத்துள்ளே பொதிந்து வைத்துக் காத்து வருகின்றது என்பது "அருமறைப் பயனாகிய உருத்திரம்" (1037) என உருத்திர பசுபதி நாயனார் புராணத்துட் காட்டப்பட்டது. வேத இருதயத்துள் சிவன் விளங்குகின்றான். "வேதம் பசுவதன்பால் மெய்யாகமம்", வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க" (திருபுரா - புரா - 1) என்பனவற்றால் வேதம் சைவ முடிபையே கருத்தாக வுடையதென்பது விளங்கும். வேதம் சிவத்தை முடிபாகக் காட்ட, அச் சிவத்தையடையும் வழிகளாகிய துறைகளை ஆகமங்களை காட்டுவன; அவை சிவபூசையும் அடியார் பணியுமேயாம் என்றிவையெல்லா காண "வேத உள்ளுறை யாவன நாதர் அருச்சனையும் அடியார்களைப் பணிவதும்" என்றார்.

காதலால் - அன்பு மிகுதியின் விளைவு காதல் எனப்படும். சிவனையும் அவரடியார்களையும் எண்ணவரும்போது காதலிக்குக் காதலனிடம் வரும் அன்பு உளதாக வேண்டும் என்பது.

இரண்டுமே செய்கருத்து - ஏகாரம் பிரிநிலை; தேற்றமுமாம்.

செய்கருத்து - பிறவற்றை உலக நிலையிற் செய்ய நேர்ந்தபோதும் தமது கருத்து அவ்விரண்டும் செய்வதனையே விரும்யிற்று என்பது. திருஞானசம்பந்த நாயனார் புராணத்தினுள் திருமயிலாப்பூரில் பூம்பாவையாரின் எலும்பை நோக்கி "மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் அடியாரை அமுது செய்வித்தலும் சிவன்திருவிழாக் காண்டலுமேயாம் என்பது உண்மையாயின் நீ உயிர்பெற்று எழுந்துவா" என்று சூளுறவு சொல்லி ஆளுடையபிள்ளையார் திருப்பதிகம் அருளியதும், அவ்வாறே அவ்வெலும்பு பெண்ணாக வந்ததுமாகிய வரலாறுகள் இங்கு நினைவு கூர்தற்பாலன.

இப்பாட்டினால் இந்நாயனார் உண்மையென்று தெளிந்து கருத்துட்கொண்ட கொள்கையும், மேல்வரும் பாட்டில் கருதிய அக் கொள்கையின்படி அவர் ஒழுகி நின்ற செயல்களும், அதன் மேல்வரும் பாட்டில் அவ்வொழுக்கத்தின் பயனாய் ஒருநாள் நிகழ்ந்த சரித வரலாறும் தொடர்ந்து கூறப்படுவன.

5

1833. (வி-ரை.) மெய்த்த ஆகம விதிவழி மெய்த்த - உண்மைப் பொருளைக் காட்டும். ஆகமம் - சிவாகமங்கள். விதிவழி ஆகமங்கள் விதித்துக் காட்டியபடியே. சிவனையே போற்றுகின்ற வகையால் சிவனைப் பூசை செய்யவெண்டும் என்று குறிப்பிற் காட்டிநிற்பதொழியச் சிவபூசை செய்யும் முறையினையும் விதிகளையும் வேதங்கள் உணர்த்தாஅவை சிவாகமங்களிலே விரிக்கப்படுகின்றன. "வேதகாரணரை ஆகம விதிவழி நித்தல் பூசனைபுரிந்தெழு நியமம்" (1833) என்ற கருத்துமிது.

வேதகாரணர் - வேதஞ் சொன்னவர். வேதங்களால் உலகங்களின் நிமிந்த காரணர் என்று அறிவிக்கப்பட்டவர் என்றலுமாம்.