பக்கம் எண் :


திருநீலநக்க நாயனார் புராணம்1035

 

1838.

தொலைவில் செய்தவத் தொண்டனார் சுருதியே முதலாங்
கலையி னுண்மையா மெழுத்தஞ்சுங் கணிக்கின்ற காலை,
நிலையி னின்றுமுன் வழுவிட நீண்டபொன் மேருச்
சிலையி னார்திரு மேனிமேல் விழுந்ததோர் சிலம்பி.

11

(இ-ள்.) தொலைவில்....தொண்டனார் - அளவில்லாத தவஞ்செய்த தொண்டராகிய திருநீலநக்கர்; சுருதி...காலை - வேதங்களை முதலாகக் கொண்டு வரும் எல்லாக் கலைகளும் எடுத்துக்கூறும் உண்மைப்பொருளாகிய திருவைந்தெழுத்தினையும் எண்ணுகின்றபொழுது; நிலையின் நின்று.... சிலம்பி - ஓரு சிலந்திதான் நின்ற நிலையினின்றும் வழுவியதனால் நீண்ட பொன் மேருமலையினை வில்லாக உடைய சிவபெருமானது அருட்குறியாகிய சிவலிங்கத் திருமேனியின் மேல் விழுந்தது.

(வி-ரை.) தொலைவு இல் - தொலைவு - ஈண்டு அளவு என்ற பொருளில் வந்தது.

தவம் செய் தொண்டனார் - என்க. முன்பு செய்தவம் என்றலும் குறிப்பு. "தவமும் தவமுடையார்க் காகும்" (குறள்).

கருதியே...எழுத் தஞ்சும் - சுருதியே முதலாம் - சுருதி சிவன் அருளிய வேதம். ஏகாரம் தேற்றம். முதலாம் - முதலாகக் கொண்ட. கலையின் உண்மை ஆம் - சுருதியின் உண்மையைக் கலைகள் விளங்கி நிற்றலின் இவ்வாறு கூறினார். உண்மை - ஈண்டுக் குறிக்கப்படும் உள்ளீடாகிய உறுதிப்பொருள் என்றபொருளில் வந்தது. எழுத்தஞ்சு - சீபஞ்சாக்கரம்; கணித்தல் - எண்ணுதல். உண்மை விளக்கம் 30 - 44 திருப்பாட்டுக்களும்; பிறவும் பார்க்க. இதுபற்றி முன் ஆண்டாண்டுரைத்த வையும் கருதுக.

முன் நிலையினின்று வழுவிட - என்க. இருந்த நிலையினின்று வழுவியதனால் வழுவிட - நிலைதவறியிட.

திருமேனி - இலிங்கத்திருமேனி; சிலம்பி - சிலந்திப்பூச்சு; சுதைச்சிலம்பி என்னும் இது. தீண்டிய இடமெல்லாம் கொப்புளாக்கும் விடத் தன்மையுடையதொரு வகைப்பூச்சி (1840).

11

1839.

விழுந்த போதிலங் கயனின்ற மனைவியார் விரைவுற்
றெழுந்த ச்சமோ டிளங்குழ வியில்விழுஞ் சிலம்பி
ஒழிந்து நீங்கிட வூதிமுன் றுமிப்பவர் போலப்
பொழிந்த வன்பினா லூதிமேற் றுமிந்தனர் போக.

12

(இ-ள்.) விழுந்தபோதில் - அவ்வாறு சிலம்பி விழுந்தபோது; அங்கு...அச்சமோடு - அவ்விடத்துப் பக்கத்திலே நின்ற மனைவியார் விரைவாக எழுந்த பயத்துடனே; இளங்குழவியில்...போல - இளங்குழவியின்மேல் விழுந்த சிலந்தி ஒழியவும் அதன் விடத்தின் தீங்கு நீங்கவும் ஊதி முன்துமிக்கும் தாய்போல; பொழிந்த...போக - பொங்கிமேல் பொழிந்த அன்பினாலே ஊதித் திருமேனி மேனின்றும் அச்சிலம்பி போகும்படி மேலே துமிந்தனர்.

(வி-ரை.) அங்கு அயல் நின்ற - அவ்விடத்து நாயனார் திருவைந்தெழுத்தை இறைவரை நோக்கியிருந்து கணிக்கின்ற அவ்விடத்தின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த. அயல் நிற்றல் - நாயகர் செபிக்கின்றபோது தாம், இந்நாளிற் பலரும்செய்தல்போல, வேறிடத்தகலாமலும், வேறு செயல் செய்யாமலும், அச்செயலிலே பங்கு கொள்பவர்போல உடனே நின்று தாமும் இறைவரை நோக்கிக் கணித்து