நிற்றலாம். இஃது அவர்க்குதவியாதலே யன்றித் தமக்கும் உறுதியாமென்க. செபமுற்றிய வழி அவர் வேண்டுவ செய்தற்கும் இது துணையாமென்க. விரைவுற்று எழுந்த அச்சமோடு - போக - மேல் -ஊதித் துமிந்தனர் - என்று கூட்டிமுடிக்க. விரைவுற்று எழுந்த அச்சம் - சிலம்பியின் விடநீர் திருமேனியில் ஊறித்தீங்கு விளைக்கா முன்னர் அதனைப் போக்கவேண்டும் என்ற நினைவினால் விரைவும்; கொப்புள் உண்டாக்கித் தீங்கு விளைத்துவிடும் என்ற நினைவினால் அச்சமும் எழுந்தன. இளங்குழவி...போல - துமிப்பவர் - துமித்துத் தீங்கு விளையா வண்ணம் நீக்கும் தாயர்போல. இறைவரை இளங்குழவி என்றும் எண்ணும் தாயின் பரிவுக் குறிப்பு. வினைபற்றி எழுந்த உவமம். பொழிந்த - உள்ளூறி மேலே எழுந்து வழிந்த. துமிதல் - தீயை அவிப்பார் போன்று விசையால் ஊதுதலால் வாய்க்காற்று. வாய் நீருடன் சேர்ந்து செல்லும்படி உமிழ்தல். முன் - தீங்குவினையாமுன். மேல் - திருமேனியின்மேல். போக - சிலம்பியும் அதன் விடநீரும் போகும்படி. 12 1840. | பதைத்த செய்கையான் மனைவியார் முற்செயப், பந்தஞ் சிதைக்கு மாதவத் திருமறை யவர்கண்டு, தங்கண் புதைத்து, "மற்றிது செய்ததென்? பொறியிலா?" யென்னச், "சுதைச்சி லம்பிமேல் விழவூதித் துமிந்தன" னென்றார். |
13 (இ-ள்.) பதைத்த...முற்செய் - உளம் பதைத்தலால் தூண்டப்பட்ட செய்கையினாலே மனைவியார் முன்னே இவ்வாறு செய்ய; பந்தம்...கண்புதைத்து - மலங்களை நீக்கும் மாதவஞ்செய்யும் அந்தணராகிய திருநீலநக்கனார் அதனைக் கண்டு, ஆற்றமாட்டாது தம் கண்களைப் பொத்திக்கொண்டு; "மற்றிது...பொறியிலாய்!" என்ன அறிவில்ாதவளே! தகாத இச்செயலைச் செயதது என்ன காரணம்? என்று வினவ; "சுதைச்சிலம்பி...துமிந்தனன்" என்றார் - "சுதைச்சிலம்பி திருமேனிமேல் விழுந்தபடியினால் அதனை நீக்க ஊதித் துமிந்தேன்" என்றனர். (வி-ரை.) பதைத்த செய்கை - இறைவரது திருமேனியிற் கொப்புள் உண்டாக்கிவிடுமே என்று உள்ளம் பதைத்ததனால் தூண்டப்பட்ட செயல். பதைத்ததனால் நிகழ்ந்த செய்கையைப் பதைத்த செய்கை என்றார். முற்செய் - முன் - தமது முன்பு. சிலம்பியின் விடநீர் தீங்கு செய்யுமுன்பு என்றலுமாம். பந்தம் சிதைக்கும் மாதவம் - பந்தம் - மூலமலம் முதலியன. மேல் மனைவியாரையும் நீத்துச்செல்லும் சரிதவிளைவுக் குறிப்பு. மாதவம் - சிவபூசை. கண் புதைத்து - கண்ணாற் காணத்தகாத அனுசிதமாகிய சிவாபராதத்தைக் காணநேர்ந்ததனாற் கண்களைக் கையினால் மூடிக்கொண்டு. மற்று இது - தகாத செயல் என்றதாம். மற்றதாகிய இது. பொறி இலாய் பொறி - தக்கதறியும் அறிவு என்ற பொருளில் வந்தது. விழ துமிந்தனன் - விழுந்ததனால் அத்தீங்கு நீங்கத் துமிந்தனன். இப்பாட்டில் இவரது வெவ்வேறு நிலைகொண்ட அன்பின் செயலும் திறமும் ஒருங்கே காட்டப்பட்டன. 13 1841. | மனைவி யார்செய்த வன்பினை மனத்தினிற் கொள்ளார், புனையு நூன்மணி மார்பர்தம் பூசனைத் திறத்தில், |
|