பக்கம் எண் :


1038திருத்தொண்டர் புராணம்

 

 

முயன்றாய் - செய்தாய்.

துறந்தனன் - ஈங்கு - இங்கே நீத்துவிட்டேன். நீங்கு என்னை விட்டு நீங்குவாயாக என்றலுமாம்.

15

1843.

மற்ற வேலையிற் கதிரவன் மலைமிசை மறைந்தான்;
உற்ற வேவலின் மனைவியா ரொருவழி நீங்க,
முற்ற வேண்டுவ பழுதுதீர் பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டருங் கடிமனை புகுந்தார்.

16

(இ-ள்.) மற்ற...மறைந்தான் - மற்று அப்போது சூரியன் மேற்கு மலையில் மறைந்தனன்; உற்ற...நீங்க - பொருந்திய கட்டளையின் வழியே நின்று மனைவியார் ஒரு பக்கம் நீங்க; முற்ற...முடித்து - தமது பூசனை முற்றுதற்கு வேண்டப்படுவனவாகிய குற்ற நீக்கும் பூசை முறைகளைச் செய்து முடித்து; கற்றை...புகுந்தார் - கற்றையாக முடித்த சடையினையுடைய சிவபெருமானின் தொண்டனாரும் தமது கடிமனையினுட் புகுந்தனர்.

(வி-ரை.) மற்று அவ்வேலை - மனைவியாரது அன்பின் மனங்கொள்ளாது புற நிகழ்ச்சி பற்றியே நாயனார் கடிந்து அவரைத் துறந்தமையின் மற்று அவ்வேலை என்றார்.

மலை - அத்தமனகிரி. கதிரவன் - மறைந்தான் - உலக அண்டம் சுழன்று சென்று ஒரு பகுதி ஞாயிற்றின் ஒளியினின்றும் மறைதலைக் கதிரவன் மறைவதாகக் கூறுதல் உபசார வழக்கு.

அவ்வேலை - அந்த நேரம். அகரம் முன்னறிசுட்டு. நாயனார் மனைவியாரைத் துறந்தமை காணமாட்டாது மறைபவன்போல என்ற குறிப்புப்பட மற்றவேலையில் மறைந்தான் என்றார்; "சம்பந்த ருடன்வந்தார்க்கெய்தும் வெம்மை யிளைப்பஞ்சி னான்போல...வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன்" (2090) முதலியவை பார்க்க.

உற்ற ஏவலின் - உற்ற - தம் தலைவராகிய கணவனாரிடமிருந்து வந்த; தாம் பிழைசெய்யாது அன்பின் மிகுதியாற் செய்யினும் நியதியின் வழிவந்து பொருந்திய என்ற குறிப்புமாம். ஏவலின் - கட்டளையின்படி. 1830ல் கூறியபடி கற்பை நான்காவது தீ என ஓம்பி வளர்ப்பவராதலின் கணவனார் சொற்றிறங் கடவாது அமைந்து என்க.

ஒரு வழி நீங்குதலாவது கணவனார் பக்கலினின்றும் ஒருவழியாக ஒதுங்குதல்.

ஒரு வழி - ஒரு பக்கமாக; ஒரு புடையே.

முற்ற - தமது பூசனை நியமம் இடையில் இடையூறுபட்டு அநுசிதமடைந்து விட்டதாக எண்ணினமையால் அவ்வாறு இடையறாது பூசை முற்றும்படி.

பழுதுதீர் வேண்டுவ பூசனை - பழுதுதீர் பூசனை - குற்றம் போக்கும் கழுவாய்; பிராயச்சித்தம் என்பர். "பழுதுபுகுந் ததுதீரப் பவித்திரமாஞ் செயல்புரிந்து" (788) என்றவிடத் துரைத்தவை பார்க்க. வேண்டுவ - செய்யவேண்டுவனவாகிய. பூசனை - பிராயச்சித்தச் செயல்கள். பூசனை முடித்து - முன் "அன்பினா னிரம்பார்" (1837)என்றபடி பூசனையை வேண்டி நின்றாராதலின் அவ்வாறே மேலும் பூசித்து முடிக்க இறைவர் வாய்ப்பு அளித்தனர் என்பது.

கடி மனை - கடி - காவல். காவல் பொருந்திய மனை என்றது ஆறாத செந்தீ எந்நாளும் விதிவழி வளர்க்கப்படும் மறை யொழுக்கத்தாலும், கனவில் அன்றிரவு இறைவர் எழுந்தருளி மனைவியாரது அன்பின் மேன்மையைத் தேற்றி மனையை