பக்கம் எண் :


1040திருத்தொண்டர் புராணம்

 

விழுந்து எழுந்து திருமுன்பு துதித்து; மாதராரையும்....அணைந்தார் - அம்மையாரையும் உடன்கொண்டு தங்கள் மனையினிடத்து மீண்டு அணைந்தனர்.

20

இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன.

1844. (வி-ரை.) அஞ்சும் உள்ளம் - இறைவனிடம் அநுசிதம் விளைத்து விட்டனரென்ற நிலைமையும், அதுகாரணமாக நாயகரால் துறக்கப்பட்டமையும் எண்ணவே அச்சம் உண்டாயிற்று.

மருங்கு அணைவுற மாட்டார் - துறக்கப்பட்டமையால் பக்கத்தில் போகமாட்டாதவராய். மாட்டார் - மாட்டாமல்; முற்றெச்சம்.

நஞ்சமுண்டவர்....இருந்தார் - உடலின் நாயகராற் றுறக்கப்பட்டபோது, உயிரின் நாயகராகிய சிவபெருமானிடம் இருந்தார் என்பது. காரைக்காலம்மையார் சரித வரலாறு இங்குச் சிந்திக்கற்பாலது. 1765 பார்க்க. தமது நாயகரது மனையினன்றிப் பெண்கள் வேறெங்கும் தங்குதல் தகாதென உலகநிலையறத்தினும் விலக்கப்படுதல் காண்க. நஞ்சமுண்டவர் - "ஆலத்தினா லமிர்தாக்கிய"துபோல் இங்கு அநுசிதத்தையும் அன்பினால் சிறந்த செயலாகக் கொண்டவர் என்பது குறிப்பு.

நங்கையார் - பெண்களுட் சிறந்தவர். ஆடவருட் சிறந்தவரை நம்பி என்பது போல.

செஞ்சொல் - திருநீலநக்கர் என்றும், நான்மறைத் - திருநீலநக்கர் - என்றும் தனித்தனி கூட்டுக. செஞ்சொல் என்றது முன் மனைவியாரை "உன்னையான் இனித் துறந்தனன்" என்ற சொல் அன்பினைக்கொள்ளாது வலிந்த சொல்லாயினும், இறைவன்பால் அநுசிதம் நிகழக் காண்பது பொறத செம்மையால் எழுந்த செம்மை செய்வது என்ற குறிப்பும் தருவது.

பஞ்சின் மெல்லணை...பள்ளி கொள்கின்றார். மனைவியாரைத் துறந்து விட்டமையைச் சிறிதும் மனம் வைக்காமல் - நினையாமல்.

பள்ளி கொள்கின்றார் - துயின்றவர் என்னாது இவ்வாறு கூறியது பந்தஞ் சிதைக்கும் மாதவரா (1840)தலின் விழிப்பு நிங்கினும் தாமதத்தின் பாற்பட்ட துயிலுக்கு முற்றிலும் அடிமையாகாது சிவனினைவுடன் துயின்றனர் என்று குறித்தற்கு. இருந்தும் நின்றும் நடந்தும் வருநிலைமாறிக், கிடந்த நிலைமட்டில் மேற்கொண்டார் என்பது, நிகழ்காலத்தாற் கூறியது மிக்கருத்து. மேல்வரும் பாட்டிலும் "பள்ளிகொள் பொழுது" என்று இவ்வாறே தொடர்ந்து கூறுவதும் காண்க.

பள்ளிகொள்கின்றார். ஒரு சொல் நீர்மையாய்க் கிடப்பாராய் என்றபொருளில் வந்தது. முற்றெச்சம்.

17

1845. (வி-ரை.) கனவில் - நாயனாரது கனவில். மெய்ம்மறந்து கிடக்கை யில்லாவிடினும் விழிப்புநிலை நீங்கியபடியால் கனவு நிலையில் என்றார்.

வெள்ளநீர்ச் சடையோடு தம் மேனியைக் காட்டி வெள்ளநீர் - கங்கை; நீர்ச்சடை - கங்கையால் நனைந்து அதனால் கங்கை நீர்மேலே ததும்பி வழியும் சடை. புனித நீர்களுள் சிறந்ததாய்ப் பிறவிநோய் முதலாக எவ்வெத் தீங்கையும் போக்கிக் காக்கவல்லதாய் உள்ளது கங்கை நீர். "கங்கைநீ டுறையாடிக் கருத்துறைநீள் கடலேற்று, மங்கணர்தாம் அவிமுத்தம்" (திருமூலர் - புரா - 4). அவ்வாறாகிய கங்கை நீரால் நனையும் திருமேனியுடையராயினும் சிலந்தியின் தீங்கு அதனால் ஒழிக்கப்படாது இங்கு அம்மையாரின் அன்பு கலந்த வாய்நீரினால் ஒழிக்கப்பட்டதென்றும், அதனால் அதனைக் கங்கைநீரினும் புனிதமாய்த் தம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்டதென்றும் உணர்த்தியமை நீர்ச் சடையோடு தம் மேனி