பக்கம் எண் :


1042திருத்தொண்டர் புராணம்

 

யருளிய அருட்பெருமையும் உடன் கொள்ளப்படும். "ஆறாத காதலின் மிக்கடியார் செய்த வனாசாரம் பொருத்தருளி யவர்மே லென்றும், சீறாத பெருமானை" (தேவா) என்ற திருவாக்கு இங்கு இருவரிடத்தும் பொருந்துமாறும், இறைவரது பேரருட் டிறத்தினைப் புலப்படுத்துமாறும் காண்க. நின்று - முன் நிகழ்ந்த ஆடுதல் முதலிய செயல்கள் ஒன்றுமின்றித் தம்பித்து நின்று. அழுதல் - தமக்கும் அருளிய அவர்பெருமையும், அதற்குத் தகாத தம் சிறுமையும் எண்ணும்போது உளதாகும் மெய்ப்பாடு.

கருணையை - என்பதும் பாடம்.

219

1847. (வி-ரை.) போதுபோய் இருள் புலர்ந்திட -போது - இரவுப் பொழுது. பொழுது என்பது போது என நின்றது. "அவ்வேறாம் போதுபோலாங்கு" (போதம் - 4 - உதா). போதுபோய் - இரவு நீங்கிக் கழிந்து; இருள் புலர்தல் என்றது இருள்போய் ஒளிவரும் நிலை. புலர்தல் நீங்குதல். "மாலைப்பொழுதும் புலர்வுற்றது" (993). இங்கு இருள் என்றது இரவின் இருளும் வைகறையின் வரும் புலரி இருளும் குறித்தது.

கனவுகண்டு விழித்தமையும் அதனைத் தொடர்ந்து உடனே இருள்புலர்ந்தமையும் கூறினமையால் கனவுகண்டது வைகறைப்பொழுதில் கூடிற்று என்பது கருதப்படும். வைகறைக்கனா உடனே பலன்தரு மென்பர்.

புலர்ந்திடக் கோயிலுட் புகுந்தே - கனாக்கண்டபின் துயில் கொள்ளாது பொழுதுவிடிவதினைஎதிர்பாத்திருந்த நாயனார் விடிந்தவுடன் முதற்செயலாகக் கோயிலுனுட்போய்ப் புகுந்தனர் என்பது குறிப்பு. அங்கணர் - அம்மையாரது அன்பினைக் கொண்டருளிய அங்கண்மை.

பாத மூலங்கள் - பாதங்களினடி. பாதமாகிய மூலம் என்றலுமாம்.

மாதரார் - மாதர் - என்ற பன்மையின் மேலும் ஆர் என்ற மற்றொரு பன்மை விகுதி தந்தோதியது அவரது சிறப்பு மிகுதியை நாயனார் உணர்ந்து கொண்ட குறிப்பு உணர்த்துதற்கு. முன்னர் மாதர், மனைவியார் என்ற அளவில் இருந்தனர்; இப்போது அதன்மேல் இறைவர் அருள்பெற்ற சிறப்புடன் நின்றனர் என்க. "பின்பு முன்னையிற் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்த" (1848) என்று வரும்பாட்டிற் கூறுவது காண்க.

தம்மனையின் மீண்டு அணைந்தார் - முன்னர்க் கடிமனை - என்றும், தம் மனையின் மீண்டு என்று இவ்விடத்தும் கூறிய தகுதியும் பண்பும் காண்க. தம் என்ற பன்மை இருவருரிமையும் உணர்த்தி நின்றது. மீண்டு என்றதும் மனைவியாருடன் வந்து சிறப்புக் குறிப்பதாம்.

20

1848.

பின்பு முன்னையிற் பெருகிய மகிழ்ச்சிவந் தெய்த
இன்பு றுந்திறத் தெல்லையில் பூசனை யியற்றி
அன்பு மேம்படு மடியவர் மிகவணை வார்க்கு
முன்பு போலவர் வேண்டுவ விருப்புடன் முடிப்பார்,

21

1849.

1அன்ன தன்மையி லமர்ந்தினி தொழுகுமந் நாளில்
மன்னு பூந்தராய் வருமறைப் பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட, மற்றவர் பாதஞ்
சென்னி வைத்துடன் சேர்வுறும் விருப்பினிற் சிறந்தார்.

22

1848. (இ-ள்.) பின்பு...எய்த அதன்பின்னர். முன்பிருந்ததினும் பெரிதாகிய மகிழ்ச்சி வந்து பொருந்தியிட; இன்புறும்...இயற்றி - இன்பம் சேர்கின்ற தன்மையுடைய அளவற்ற பூசனைகளை இறைவனுக்குச் செய்து; அன்பு...முடிப்