அவர்பாதம் சென்னி வைத்துச் சேர்வுறும் விருப்பு என்க. சென்னிவைத்தல் - வணங்குதல்; நேரே கண்டு விழுந்து கும்பிட விரும்பினார் என்க. உடன் சேர்வுறும் விருப்பு - உடனிருக்கும் விருப்பு "உட னுறைவின் பயன் பெற்றார்" (1509) என்றவிடத் துறைத்தவை பார்க்க. உடன் சேர்வுறும் என்றது பின்னர் "உள்ளமங் ருடன்போக்கி" (1861), "பூவடித்தலம் பொருந்திய உணர்வொடும்" (1862), "சீகாழி ஒருவர் தந்திருக் கல்வியா ணத்தினிலுடனே சரித நிகழ்ச்சிகள் நிகழ்வதற்குரிய திருவருட் குறிப்பினால் எழுந்த விருப்பம் என்ற முற்குறிப்புப்பட நிற்பதும் காண்க. சிறந்தார் சிறத்தலாவது அவ்விருப்பம் மிகுதி பெற்று விளங்குதல். ஆண்டவர் பூசனையும் அடியவர் பூசனையும் செய்யும் ஒழுக்கத்தினின்று சிறந்த அவர். குருவின் அருள்பெறும் விருப்பும் பெற்று மேலும் சிறப்புடையராயினார் என்றலுமாம். 22 1850. | பண்பு மேம்படு நிலைமையார் பயிலுமப் பருவம் மண்பெ ருந்தவப் பயன்பெற மருவுநற் பதிகள் விண்பி றங்குநீர் வேணியார் தமைத்தொழ வணைவார் சண்பை மன்னருஞ் சாத்தமங் கையிலவந்து சார்ந்தார். |
23 (இ-ள்.) பண்பு...பருவம் - பண்பினால் மேம்படும் தன்மையுடைய திருநீலநக்கர் முன்சொன்ன நிலையிற்பயில்கின்ற அக்காலத்தில்; மண்பெருந் தவப்பயன்....அணைவார் - பெருந் தவப்பயனை உலகம் பெறும்பொருட்டுப் பொருந்திய நற்றலங்களில் விண்ணில் விளங்கும் கங்கைதங்கிய சடையினையுடைய சிவபெருமானைத் தொழுவதற்கு அணைவாராகி; சண்பை...சார்ந்தார் - சீகாழித்தலைவராகிய ஆளுடைய பிள்ளையாரும் திருச்சாத்தமங்கையில் வந்து சார்ந்தனர். (வி-ரை.) பண்பு மேம்படு நிலைமையார் - பண்பு - அடிமைப் பண்பு. முன்பாட்டிற் "சிறந்தார்? என்றநிலை. நிலைமையார் - நிலைமை யுடையாராகிய நாயனார். பயிலுதல் - அந்நிலையில் இடைவிடாது பல காலம் ஒழுகுதல். பருவம் - காலம் ஏழனுருபு தொக்கது; பருவம் - மன்னரும் சார்ந்தார் என்று கூட்டுக. பருவம் பயன்தரும் பக்குவகாலம் என்ற பொருளும் தந்து, "பாதம் சென்னிவைத் துடன்சேர்வுறும் விருப்பினிற் சிறந்தா" ராதலின் அவ்விருப்பம் முற்றிப் பக்குவப்பட்டுப் பலன்தரும் பருவத்தில் என்ற குறிப்பும் பெற நின்றது. அப்பூதியடிகள் திருநாவுக்கரசரைத் தியானித்திருந்த உறைப்பின் பயன் தருநாளில் அவர் தாமே வந்தணைந்த சரிதம் இங்கு நினைவு கூர்தற்பாலது. மண்பெருந் தவப்பயன் பெற - மருவும் நற்பதிகள் என்றும், மண்பயன் பெறத் தொழ - அணைவார என்றும் கூட்டி உரைக்க நின்றது. மண்தவப்பயன் பெறப்பதிகள் மருவுதலாவது உலகத்தார் கண்டு கும்பிட்டு வழிபட்டுய்யும் பொருட்டுத் தலங்களில் இறைவர் வெளிப்பட வீற்றிருந்தருளுதல். தவம் - சிவ வழிபாடு. முன்னைத் தவமுடையார்களே தலங்களைச் சார்ந்து பயன் பெறுவர். பெற - பெறும் பொருட்டு. மண் - மண்ணுலகம் - நிலவுலகம். "வானிடத்தவரும் மண்மேல் வந்தான் றனையர்ச் சிப்பர்" "புவனியிற் போய்ப்பிற வாமையினாணாம் போக்குகின் றோமவமே" என்றற் றொடக்கத்த திருவாக்குக்களின்படி நிலவுலகம் தவஞ் செய்து பிறத்தற் கேதுவாகிய இடம். அதுவேயுமன்றித் தவஞ் செய்தற்குமிடம். பெருந்தவப்பயன் என்றது தலங்களுட் புகுந்து வழிபடுதல். |