தவங்களுட் சிறந்த பெருந்தவத்தாலாவது என்பதாம். மருவும் - இறைவர் விளங்க எழுந்தருளும். "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திட" (35) என்ற கருத்துக் காண்க. மண்பயன் பெறத்தொழ அணைவார் என்றது பிள்ளையார் சிவதலங்களிற் சென்று வழிபட்டது தம் பெருட்டன்றி உலகத்தவர் பயன்பெறும் பெருட்டேயாம் என்றதாம். இப்பொருளில் மருவும் என்றது பிள்ளையார் சேரும் என்றதாம். நற்பதிகள் - நன்மை - இயல்பு குறித்த அடைமொழி பதிகள் பதி - என்றது "பளிங்கிற் பவளம் பதித்தான் பறயே" என்ற திருமந்திரக் கருத்தின்படி தலங்களிற் றம்பெருந்தெய்வத் தன்மை பதித்தாற்போல விளங்கும் இடம் என்ற குறிப்புப்பட நின்றது. விண்பிறங்கு நீர் - ஆகாயத்தினின்று வந்து விளங்கும் கங்கை. அணைவார் - அணைவாராகி; முற்றெச்சம். அணைவார் சார்ந்தார் என்க. 23 1851. | நீடு சீர்த்திரு நீலகண்டப்பெரும் பாணர் தோடு லாங்குழல் விறலியா ருடன்வரத் தொண்டர் கூடு மப்பெருங் குழாத்தொடும் புகலியார் பெருமான் மாடு வந்தமை கேட்டுள மகிழ்நீல நக்கர், |
24 1852. | கேட்ட வப்பொழு தே, பெரு மகழ்சசியிற் கிளர்ந்து, தோட்ட லங்கலுங் கொடிகளும் புனைந்து, தோரணங்கள் நாட்டி, நீணடைக் காவண மிட்டு நற் சுற்றத் தீட்ட முங்கொடு, தாமுமு னெதிர்கொள வெழுந்தார். |
25 1853. | சென்று, பிள்ளையா ரெழுந்தரு ளுந்திருக் கூட்டம் ஒன்றி, யங்கெதிர் கொண்டு,தங் களிப்பினா லொருவா றன்றி யாடியும் பாடியுந் தொழு தெழுந் தணைவார் பொன்ற யங்குநீண் மனையிடை யுடன்கொடு புகுந்தார். |
26 1851. (இ-ள்.) நீடு.......உடன்வர - திருநீடும் பெரிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மலர்கள் பொருந்துதற்கிடமாகிய கூந்தலையடைய பாணியாராகிய மதங்க சூளாமணியாரும் உடனே வர; தொண்டர்......குழாத்தொடும் அடியவர்கள் கூடுகின்ற அந்தப் பெருங்கூட்டத்துடனே; புகலியார் பெருமான்......கேட்டு சீகாழித் தலைவராகிய ஆளுடைய பிள்ளையார் தமது நகரத்தின் பக்கத்தில் எழுந்தருளியதனைக் கேட்டு; உளம் மகிழ் நீலநக்கர் - உள்ளம் மகிழ்ந்த திருநீலநக்கநாயனார். 24 1852. (இ-ள்.) வெளிப்படை. கேட்ட அப்போதே பெருமகிழ்ச்சி பொங்கி, மலர்மாலைகளையும் கொடிகளையும் தூக்கி அலங்கரித்துத், தோரணங்கள் நாட்டி, நீண்ட தூரமளவும் சடைக்காவணம் இட்டு நல்ல சுற்றத்தாரின் கூட்டத்தையும் உடனே கொண்டு, தாமும் முன்பு எதிர்கொள்ளும் பொருட்டு எழுந்தனராகி, 25 1853. (இ-ள்.) சென்று - போய்; பிள்ளையார்......ஒன்றி - ஆளுடைய பிள்ளையார் எழுந்தருளிவரும் அத்திருக் கூட்டத்தைச் சேர்ந்து; அங்கு எதிர்கொண்டு - அங்கு அதனை எதிர்கொண்டு நல்வரவு ஏற்று; தம் களிப்பினால்........ அணைவார் - தமது மகிழ்ச்சியின் மேலீட்டினாலே ஒரு படித்தாயன்றிப் பலவாறாக ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவாராகி; பொன்.....புகுந்தார் - பொன் விளங்கும் பெரிய தமது திருமனையினிடத்து உடனே அழைத்துக்கொண்டு புகுந்தனர். 26 இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |