பின்பு தள்ளும் என்றதனைக் கேண்மையும் என்பதுடனும் கூட்டுக. கேண்மை - பிறப்பில் உடன்வந்து பிரியாது நிறப்து போன்றது. எனினும் - அன்புங் கேண்மையும் நிரம்பநின்று நீலநக்கரைப் பிள்ளையார்பின் செல்லும்படி பின்புறமிருந்து உந்துகின்றன; இந்நிலை தவிராமல் உள்ளது ஆயின் நீலநக்கர் அவற்றால் உந்தப்பட்டு பிள்ளையார்பின் செல்லவில்லை; என்ன காரணமென்னில் பிள்ளையாரது அருளை வலியமாட்டாமையேயாம் என்றபடி. திருவருள் - நீர் என்னுடனே பின்பற்றிவராது இங்கே இரும் என்று பிள்ளையார் வற்புறுத்திய வகையாகும். வலியமாட்டாமை - இணங்காது வலிந்து ஒதுக்கி அவருடன் போகமாட்டாமையால். உள்ளம் அங்கு உடன் போக்கி - தமது பூத உடம்பு பிள்ளையாரது ஆணைக்குட்பட்டு இங்கு நின்றாலும் மனத்தை அவருடனே செல்லவைத்து. மீண்டு - நகர்ப்புறம் சென்று விடைகொண்டு மீண்டு இருக்க. ஒருவகை - மனம் விடினும் பிரிவாற்றாமையை ஒருவாறு, தேற்றிக்கொண்டு. தப்பில எனினும் - என்றும் பாடம். 34 1862. | மேவு நாளிலவ் வேதியர் முன்புபோல் விரும்புந் தாவில் பூசனை முதற்செய்கை தலைத்தலை சிறப்பச் சேவின் மேலவர் மைந்தராந் திருமறைச் சிறுவர் பூவ டித்தலம் பொருந்திய வுணர்வோடும் பயின்றார். |
35 (இ-ள்.) மேவுநாளில் - முன் கூறியவாறு ஒருவகையிருந்த நாள்களில்; அவ்வேதியர் - அந்த வேதியராகிய திருநீலநக்கர்; முன்புபோல்....சிறப்ப - முன்பு போல வேதம விரும்பிய குற்றமில்லாத பூசனை முதலாகிய செயல்களெல்லாம் மேல் மேலும் சிறப்பா யோங்க; சேவின்...பயின்றாய் - இடபவாகனத்தின்மேல் வரும் சிவபெருமானது மைந்தனாராகிய திருமறைச் சிறுவருடைய அழகிய திருவடிகளைப் பொருந்திய வுணர்ச்சியுடன் பயின்றனர். (வி-ரை.) மேவும் - முன்சொல்லியபடி ஒருவகையால் ஆற்றியிருந்த என்ற பொருளில் வந்தது. முன்புபோல் - பிள்ளையார் எழுந்தருளுவதற்கு முன்னாள்களிற் போலவே. விரும்பும் தாவில் பூசனை முதற்செய்கை - அரன் பூசையும் அடியார்க்கமுது செய்வித்தல் முதலாகிய பணிகளும்; இவை 1833-ல் உரைக்கப்பட்டன. தா - குற்றம். தாவில் பூசனை என்றது முன்னர் இறைவன் திருமேனிமேல் சிலம்பி வீழ்ந்தபோது மனைவியார் ஊதித்துமிந்து விலக்கியதனை இறைவர் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து காட்டிய வரலாறும், பாணனார் பாணியாருடன் நடுமனை வேதியின் பாங்கர்ப் பள்ளிகொண்டதனைச் செந்தீவலஞ் சுழிவுற் றெழுந்தோங்கும்படி மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு காட்டிய வரலாறும் உட்குறிப்பாகக்கொண்டுநின்றது. முதற்செய்கை - முதலாகிய என்னும், முதன்மை பெற்ற என்றும் உரைக்க நின்றது. தலைத்தலை சிறத்தல் - நாடோறும் செய்யுந்தோறும் ஒன்றற்கொன்று சிறந்தோங்குதல். சேவின்மேலவர் மைந்தர் - இறைவியாரது ஞானத் திருமுலைப் பாலுண்ட காரணத்தால் மைந்த ரென்றுபசரிக்கப்பட்டது. முன் "புரமெரித்தார் திருமகனார்" (1666) என்றவிடத் துரைத்தவையும், பின் ஆளுடைய பிள்ளையார் புராணம் (66) முதலிய இடங்களில் உரைப்பவையும் பார்க்க. |